வளை கோல் வளைத்துப் பிடிக்க, தடி அடித்துப் பிடிக்க...!
புரட்சிகரமாக எதையாவது பேசுகிறோமென்ற போர்வையில் வசனத்தை மென்றவர்களைக் குறித்த ஒரு அனுபவம்... அண்மையில் கீழ்க்காணும் முகவரியிலிருந்து ஒலிபரப்பான ஆமென் எஃப் எம் எனும் வானொலியில் ஒரு சகோதரியும் ஒரு சகோதரரும் உரையாடலில் (நல்லதொரு குடும்பம் நிகழ்ச்சியில்) என்னுடைய சபைக்கு வா என்னுடைய சபைக்கு வா என்று போட்டிபோட்டுக் கொண்டு சபையிலிருக்கும் குழப்பங்களையும் கவனிக்காமல் வெறும் ஆசீர்வாதம் ஆசீர்வாதம் என்று பேசி கடலில் மீன்பிடிப்பதை விட்டு விட்டு தொட்டியில் மீன்பிடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று (அங்)கலாய்த்தார்கள்;
சரி போகட்டும் என கேட்டுக்கொண்டே வந்தால் திடிரென அந்த சகோதரி 23ம் சங்கீதத்தின் "கோலும் தடியும் " என்பதற்கு விளக்கம் கொடுக்க அதிர்ச்சியடைந்தேன்;உடன் உரையாடிய சகோதரரும் ஏதோ இளித்துவிட்டு நம்ம நிகழ்ச்சியைக் கேட்டு நிறைய போதகர் பிரசங்கம் தயாரிக்கிறாகள் என்று பெருமையடித்துக் கொண்டார்; http://www.bibleuncle.co.cc/
கோலும் தடியும் என்பதற்கு அந்த பெண் கொடுத்த விளக்கமாவது, கோல் என்பது ஆடு தூரம் போனால் கழுத்தில் மாட்டி இழுப்பதற்காம்; தடி என்பது அடங்காவிட்டால் அடிக்கவாம்; இது எப்படியிருக்கிறது?
உண்மையான விளக்கத்தையறிந்தவர் யார் வேண்டுமானாலும் பதிக்கலாம்; இது நண்பர்களுக்கானதொரு வாய்ப்பு; மற்றபடி நான் பதிக்க ஆயத்தமாக இருக்கிறேன்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)