Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இரகசியம்..?


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2816
Date:
இரகசியம்..?
Permalink  
 


hell2.jpg



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2816
Date:
Permalink  
 

http://kovaibereans.activeboard.com/forum.spark?aBID=128972&p=3&topicID=33297097

chillsam 09:02:14 Jan 8, 2010

// சகோ சில்சாம் எழுதியது போல் வெளிப்படுத்தப்பட்டது என்பது, சபை தலைவர்களுக்கு என்று எடுத்துக்கொள்ளலாமா? இல்லாவிடில் ஒவ்வொரு சபையிலும் விதவிதமான சத்தியத்தை சொல்ல மாட்டார்கள்;சகோ.ஆத்மா எழுதியது போல் இரகசியம் என்று ஒரு பதம் வேதத்தில் இருக்கிறதே,அதையும் ஆராயலாமே!//

நான் எழுதியதற்கு இப்படியும் ஒரு அர்த்தமா (வாயை கிளறலாம்,காவாயை அல்ல...) என்று ஆச்சரியமாக இருக்கிறது; ஆனால் அதுவும் நன்றாகவே இருக்கிறது; ஆம்,தமது ஊழியர்களுக்கு வெளிப்படுத்தாமல் ஒன்றையும் செய்கிறதில்லை என்ற அளவில் அதுவும் சரியே;

வெளியாக்கப்படாத இரகசியமோ மறைபொருளோ இல்லை; அதிலும் தமது சீடருக்கு ஆண்டவர் அனைத்தையும் வெளிப்படுத்திவிட்டதாக அவரே கூறுகிறார்; அவரது சீடர்கள் வழியாக நமக்கும் அவை வந்து சேர்ந்துவிட்டது;

நாம் உலகப்பிரகாரமான சிந்தையால் அவற்றைப் பார்த்தால் புதிராகவே இருக்கும்; ஆனாலும் காத்திருந்து சுதந்தரிக்கும் பொறுமையுள்ளோருக்கு அவை விளக்கப்படவேண்டிய அவசியம் கூட இராது;

ஏனெனில் ஒரு மேன்மையான காரியத்துக்காக ஆசைபட்டோ அல்லது ஆபத்தானதொரு தீமைக்கு பயந்தோ  கிரியை செய்வதுகூட சரியான உத்தமமாக இருக்கமுடியாது; (கற்பு நெறியைப் போல..!)

சபைகளுக்கிடையே காணப்படும் மார்க்கபேதங்களும் ஆண்டவராலேயே அனுமதிக்கப்பட்டுள்ளது; அந்த மார்க்கபேதங்களுக்குக் காரணம் அவர்கள் விட்டுவந்த பாரம்பரியங்கள் தொடருவதே; அது முழுதும் நீக்கப்பட்டாலே தெளிவு வரும்;

"மிரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்" என்பது போலும் "பாம்புக்கும் பழுதுக்கும் வித்தியாசம் தெரியாத மாயை போலும்" இதுவும் தொடரலாம்; ஆனாலும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே இவைய‌னைத்திலும் மகிமைப்படுகிறார்..!

soulsolution


ஒருவன் கிறிஸ்துவுக்குள் இருந்தால் அவன் புது சிருஷ்டியாக இருக்கிறான். அவ்வளவே. புதிய ஏற்பாட்டு சபையில் ஊழியக்காரன், விசுவாசி என்ற பாகுபாடு கிடையாது. ஒருவன் கிறிஸ்துவுக்குள் இருக்கிறானா, இல்லையா என்பதே கேள்வி. அப்படி இருக்கும் பட்சம் சத்திய ஆவியினால் நடத்தப்பட்டு, தெளிந்த புத்தியுள்ள ஆவியில் (குழப்பமில்லாத ஆவியில்) இருப்பான். வேத வசனங்கள் மூலம் அது உறுதிப்படுத்தப்பட்டிருக்கும்.

இன்று ஆளாளுக்கு நான் 'ஊழியன்' என்று தங்களை தாங்களே விசேஷித்தவர்களாக காண்பித்துக்கொள்வதால் தான் எந்த 'ஊழியனுக்கு' வெளிப்படுத்தியது சரி என்று ஆராயவேண்டியுள்ளது. ஏனென்றால் ஒவ்வொருவருக்கும் 'வெளிப்படுத்தப்பட்ட' காரியங்கள் முரணாக உள்ளதே. முதலில் யார் உண்மை ஊழியன் என்று கண்டுபிடிக்கவே விஷேசித்த ஆவி தேவைப்படிகிறதே?

ஆகவேதான் நான் முதலில் பதித்தது போல முதலில் 'மரணம்' என்றால் என்ன? ஆத்துமா என்றால் என்ன என்று அவரவர்க்கு 'வெளிப்படுத்திய' காரியங்களை தெளிவாகப் பதித்தால் ஒரு தீர்க்கமான முடிவுக்கு வரலாம். அதன் பின் மற்ற ரகசியங்களை ஆராயலாமே!

chillsam 14:49:20 Jan 8, 2010


"வேதம் பேசுமிடத்து பேசு; வேதம் அமைதியாக இருக்குமிடத்து அமர்ந்திரு" என்பதே வேதப் பண்டிதர்களின் தீர்க்கமான கருத்தாகும்;

மரணத்தைக் குறித்து வேதம் என்ன சொல்கிறதோ அதனை மறுத்து யாரும் எதையும் நிறுவ இயலாது;

புதிய ஏற்பாட்டு சபையாருக்குள் குறைந்தபட்சம் மூப்பன்,உதவிக்காரர் என்ற வித்தியாசமாவது இருப்பதை ஏற்றாக வேண்டும்;

மூப்பனுக்கும் உதவிக்காரனுக்கும் அறிவு ஒன்று போலிருக்க சாத்தியமில்லை;

எனவே மூப்பனானவனை இரட்டிப்பான கனத்துக்குரியவனாக நடத்த தீமோத்தேயுவுக்கு பவுல் எழுதுகிறார்;

இன்று....................?

இதனைக் குறித்து நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை;இது இக்காலத்தின் தேவ கோபம் என்றும் பரிசுத்தவான்களின் சாபம் என்றும் கூறலாம்..!

(ஆனாலும் "நரிகள்" நாட்டாமை செய்ய இரட்சகர் நிச்சயமாக விடமாட்டார்; ஏனெனில் சபை "தேவனுடைய இரத்தத்தால்" கிரயத்துக்குக் கொள்ளப்பட்டதே..!")

bereans

சில்சாம் எழுதுகிறார்: ""வேதம் பேசுமிடத்து பேசு; வேதம் அமைதியாக இருக்குமிடத்து அமர்ந்திரு" என்பதே வேதப் பண்டிதர்களின் தீர்க்கமான கருத்தாகும்;"

வேத‌ப்ப‌ண்டித‌ர்க‌ள் ஏதோ க‌ருத்தை சொல்லி விட்டார்க‌ள் ஆனால் இன்று எந்த‌ ஊழிய‌ன் இதை பின் ப‌ற்றுகிறான். அது தான் எல்லோரிட‌மும் இயேசு கிறிஸ்துவோ, ப‌ரிசுத்த‌ ஆவியோ வ‌ந்து முத‌ல் நாள் இர‌வில் பேசி விட்டு "இர‌க‌சிய‌ங்க‌ளை" வெளிப்ப‌டுத்தி விட்டு போகிறார்க‌ளே. ஆக‌வே தான் ச‌பைக‌ளில் குழ‌ப்ப‌மே த‌விர‌, வேத‌த்தை தீர்க‌மாக‌ வாசித்து ஆறாய்ந்தால் குழ‌ப்ப‌ம் அல்ல‌ தெளிவு தான் ஏற்ப‌டும்.

விசுவாசிக‌ள் (!!) என‌ப்ப‌டும் ஒரு கூட்டாத்தார் வாஞ்சிக்கும் காரிய‌மே என்ன‌ தெரியுமா, அந்த‌ ஊழிய‌ரிட‌ம் இயேசு கிறிஸ்து பேசினார் என்றால் என்னிட‌மும் பேசுவார் என்ப‌து தானே! ஆக‌வே தான் இப்ப‌டி பேசி பேசி ச‌பைக‌ள் வ‌ள‌ர்கிற‌தே த‌விர‌ வேத‌ ப‌ண்டித‌ர்க‌ள் சொல்லும் ப‌டி "வாசித்து வாசித்து அல்ல‌" என்ப‌து ஒத்துக்கொள்ள‌ வேண்டிய‌ ஒரு விஷ‌ய‌மாகிற‌து.

ஒரே ஆவி என்றும் ஒரே விசுவாச‌ம் என்றும் ஒரே கிறிஸ்து என்றும் சொல்லியும் விள‌க்க‌ங்க‌ள் ம‌ட்டும் எப்ப‌டி தான் மாற்றி மாற்றி இவ‌ர்க‌ளிட‌ம் இருக்கிற‌து என்ப‌து தான் விள‌ங்காத‌ "இர‌க‌சிய‌ம்"!

chillsam 00:58:12 Jan 9, 2010
புதிய ஏற்பாட்டு பரிசுத்தவான்களுக்கு தேவன் எழுதப்பட்டவற்றிலிருந்து மாத்திரமல்ல, சூழ்நிலைக்கு ஏற்ப அகத் தூண்டுதல் மூலம் வெளிப்படுத்தியும் காரியமாற்றியிருக்கிறார்; இதற்கான ஆவியைப் பெற்றுக் கொள்ளவே ஒருவன் பேதுருவிடம் பணத்துடன் வந்து சபிக்கப்பட்டான்;

அன்றைக்கு அப்போஸ்தலருடனிருந்து செயலாற்றிய அதே தேவ ஆவியானவர் இன்றைய காலக் கட்டத்திலும் தமது ஸ்தானாபதிகளாக விளங்கும் தமது ஊழியர்கள் மூலம் இடைப்பட்டு மறைபொருளை வெளிப்படுத்தி தமது ஜனங்களை சகல சத்தியத்துக்குள்ளும் நடத்துகிறார்;

ஒப்பீடாகப் பயன்படுத்தப்படும் அனைத்து தியானங்களும் உவமைகளும் சம்பவங்களும் பக்திவிருத்தியுண்டாக்கும் நோக்கத்துடன் பிரசங்கிக்கப்படுமானால் அதில் எந்த தவறும் இல்லை;

இதற்கு பவுலின் நிருபங்களே ஆதாரமாகும்; கருகலான எத்தனையோ பழைய ஏற்பாட்டின் சம்பவங்களை பவுலடிகள் எளிமையாக விளக்குகிறார்; ஒரே வசனத்துக்கு வெவ்வேறு இடங்களில் வேறுபட்ட சூழ்நிலைக்குரிய பொருளையும் விளக்கமாகத் தருகிறார்;

ஒன்றுமில்லாத "திருக்குறளுக்கு" எத்தனையோ புலவர்கள் விதவிதமான பொருளைத் தருகிறார்களே, பரிசுத்த வேதாகமமோ அள்ள அள்ளக் குறையாத பொக்கிஷம்; அதனை ஒவ்வொரு முறை வாசிக்கும் போதும் ஒவ்வொரு தோற்றத்தைத் தரும்; எனவே பக்திவிருத்தியடையும் நோக்கில் போதிக்கப்படுமானால் எதுவுமே தவறல்ல..!

22:43:25 Jan 9, 2010

வேற்று கலாச்சாரத்து மக்களுக்குச் சொல்லப்பட்டதொரு மார்க்கத்தை அல்லது போதனையை நாம் சார்ந்துள்ள மக்களுக்குப் போதிக்க, அதை அதன் ஆதாரம் சிதையாது, எளிமைப்படுத்தி, சற்று மாற்றி போதித்து, அதனால் பக்திவிருத்தி உண்டாகுமானால்- அதனால் தேவசித்தமாகிய இரட்சிப்பு நிறைவேறுமானால் எந்த தவறுமில்லை..!

உதாரணமாக திருமணத்தில் திராட்சரசம் பரிமாறப்படுவது நமது கலாச்சாரத்தில் இல்லை;அதன் முக்கியத்துவத்தினை உணர நாம் யூதராக இருக்கவேண்டும்; அது ஆகாத காரியமாதலால் நம்ம ஊர் பாஷையில் அதனை மோருடன் ஒப்பிட்டுச் சொன்னால் என்று சொன்னால் என்ன தவறு..?

அதற்கு பதிலாக நம்ம ஊர் பிராந்தியுடன் அதை ஒப்பிட்டு சிலர் குடிகாரர்களாக இருக்கிறார்கள்;அதுவும் கூட‌ அந்த குடிகாரனின் சித்தமல்ல, தேவ சித்தமே என்று சிலர் சொல்லக்கூடும்..!

23:23:07 Jan 9, 2010
தேவன் தமது ஜனங்களை எச்சரிக்கச் சொன்னது எப்படி மற்றவர்களுக்குப் பொருந்தாதோ அதைவிட மேலாக "திவ்ய வாசகனாகிய யோவானுக்கு வெளிப்படுத்தின விசேஷத்துடன்" அதைக் குறித்த தரிசனங்களைக் கூட்டாமல் குறைக்காமல் சொல்லவேண்டும் என்ற கட்டளையும் கூட மற்ற வசனங்களுக்கும் உவமைகளுக்கும் பொருந்தாது;

உதாரணமாக இதுபோல பல பழைய ஏற்பாட்டு வசனங்களை (அதன் பொருள் விளங்க...) மாற்றி (அர்த்தம் மாறாமல்) பேதுருவும் பவுலும் யாக்கோபும் பயன்படுத்துகின்றனர்.

ஒப்பிடுக:லூக்கா.24:44

soulsolution

பரவாயில்லையே அப்ப வெளிப்படுத்தின விசேஷம் தவிர மற்ற எல்லா புத்தகங்களிலும் கூட்டலாம், குறைக்கலாம் போலுள்ளதே. பேஷ் பேஷ், அதைத்தானே செய்றாங்க‌.

கூரை ஏறி கோழிபிடிக்காதவன் வாழை ஏறி வைகுண்டம் போனானாம். மரணம், ஆத்துமாவே தெளிவில்லை....
இதில் வெளிப்படுத்தல் வேறு?


23:47:58 Jan 9, 2010
கெளம்பிட்டான்யா...கெளம்பிட்டான்...................!


bereans

சகோ சில்சாம் அவர்களே

மீண்டும் தொடங்கி அதன் பலியை மற்றவர்கள் மேல் போடாதீர்கள்!!
ஒருமையின் வார்த்தைகளை தவிர்த்து உங்கள் விரக்தியை வெளிப்படுத்தாமல் வசனத்துடன் முடிந்தால் பதில் எழுதுங்கள்.


15:45:35 Jan 10, 2010
என்னால் இயன்றவரை நாகரிகமாக வசனத்தை மட்டுமே ஆராய்ந்து எழுதி வருகிறேன்;ஆனாலும் உங்கள் நண்பர் இங்கே யாரை,
//கூரை ஏறி கோழிபிடிக்காதவன் வாழை ஏறி வைகுண்டம் போனானாம்; மரணம்,ஆத்துமாவே தெளிவில்லை....இதில் வெளிப்படுத்தல் வேறு? //
இவ்வாறு தாக்குகிறார்? ஒருமையில் எழுதியது யார் என்று பாருங்கள்,மிஸ்டர் நிர்வாகி..!

நான் நேரடி விவாதத்துக்கு அழைத்தும் அதனை ஒப்புக்கொள்ள தைரியமில்லாதவரா என்னை கோழி பிடிக்கக் கூட தகுதியில்லாதவன் என்று கூறுவது?

மரணம்,ஆத்துமா பற்றிய உங்கள் விவாதத்தில் எனக்கு ஆர்வம் இல்லாததால் வெளிப்பாடு,இரகசியம் என்ற அடிப்படையில் எனது கருத்துக்களைப் பதிக்கிறேன்; விருப்பமில்லாவிட்டால் இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன்;

தர்க்கரீதியாக என்னை மேற்கொள்ள இயலாத சிலரது பெலவீனமே எனது உணர்ச்சியைத் தூண்டும் கீழ்த்தரமான முயற்சியாக வெளிப்படுகிறது என நினைக்கிறேன்;

இல்லாவிட்டால் மரணம் மற்றும் ஆத்துமா விவாதத்தில் நான் அமைதி காப்பது போல அமைதியாக இருக்கலாமே..!

ஏன் என்னை சீண்டவேண்டும்?

வாதத்தை முன்வைக்காமல் ஊர்க் கதையும் பழமொழியும் "சத்திய வாசகனுக்கு" தேவையா?

இதுவும் தேவ சித்தமோ?

தயவுசெய்து வாதத்தை திசைதிருப்பாமல் பொருளை மையமாகக் கொண்டு தியானிப்போமாக>>>



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard