//ஒருத்தர் வருகிறார், எல்லாவற்றையும் சுத்திகரித்து, தேவையான சத்தியத்தை கொடுப்பார், அப்பொழுது தெரிந்துக்கொள்ளுங்கள்!!//
ஒருத்தர் வருகிறார், உங்க முதுகில் மொத்த!! கொடுத்த காசை என்ன செய்தாய் , ஏன் காசுக்காரரிடத்திலாகிலும் கொடுத்து வைக்க வில்லை என்று கேள்வி கேட்கப் போகிறார். அப்ப திரு திருன்னு முழிக்கப் போறீங்க.
யோவான் 16:2 அவர்கள் உங்களை ஜெபஆலயங்களுக்குப் புறம்பாக்குவார்கள்; மேலும் உங்களைக் கொலைசெய்கிறவன் தான் தேவனுக்குத் தொண்டுசெய்கிறவனென்று நினைக்குங் காலம் வரும்.//
////ஒரு வார்த்தை பல அர்த்தத்தில் உபயோகப்படுத்த முடியும் என்று தெரியாதா? வசனந்தான் தெரியாது என்றால் மொழியும் அப்படித்தானா???//
அப்படி என்றால் ஆத்துமாவிற்கு எத்துனை அர்த்தங்கள் இருக்கிறது என்று ஒரு பட்டியல் போடுங்கள், பிறகு அதை விவாதிக்கலாம்!! //
Language class ம் எடுக்கணுமா? கஷ்டம்தான்!!
///ஏன் இப்படி அவர்களை நரகத்திற்கு அனுப்புவதிலே குறியா இருக்கீங்க?? எத்தனை தடவைதான் இதே கேள்வியை கேட்பீர்கள்??//
நாங்களா அனுவதர்கு குறியாக இருக்கிறோம்!! நீங்கள் எல்லாரும் சேர்ந்து சொல்லுவதை நான் சொன்னேன்!! நாங்கள் தான் எல்லாருக்கும் இரட்சிப்பு என்று சொல்லி வருகிறோமே!!//
நாங்களும் நரகம் தான் போவார்கள் என்று சொல்லவில்லை.
//அந்த வசனத்தை பாருங்கள்!! அந்த வசனம் மாத்திரம் இல்லை, மொழிப்பெயர்க்கப்பட்ட பல வசனங்கள் இப்படி தான் தப்பு தப்பாக இருக்கிறது!!//
//முதலில் ஆத்துமா சாகுமா சாகாதா? என்ற கேள்விக்கு பதில் தேவை.//
இயேசு கிறிஸ்து மரித்த போது அவர் ஆத்துமா என்ன ஆயிற்றோ, அதுதான் பதில்.
//வேதத்தில் யார் எப்போது யாருக்குச் சொன்னது என்பது கூடத் தெரியாமல் எல்லாவற்றையும் எனக்கெ சொன்னார் என்று வாதிடுவது எவ்வளவு முட்டாள்தனமானது.//
இது ராஜ்ஜியத்தில் செய்ய வேண்டிய வேலை என்று சொல்வீர்கள் என்று நினைத்தேன்!!
சரி, எதைத்தான் ஆண்டவர் நமக்கு சொன்னார்?? என்ன தான் நம்மை செய்ய சொல்லியிருக்கிறார்? தயவு செய்து , ஒரு 10 வசனமாவது காட்டுங்க.
//அப்போஸ்தலர்களுக்கும், சீடர்களுக்கும் சொன்னதை அவர்கள் செய்தார்கள்.//
அவங்கதான் எப்பவும் கூட இருந்தாங்க. அவர்களிடம்தான் எல்லாவற்றையும் சொல்ல முடியும். உங்க பேர் போட்டு வேதத்தில் ஏதாவது போட்டிருந்தால்தான் கடைப்பிடிப்பீங்களோ??
//கோல்டா கண்டிப்பாக வாசிக்க வேண்டும்.
ஆதி3:19. நீ பூமியிலிருந்து எடுக்கப்பட்டபடியால், நீ பூமிக்குத் திரும்புமட்டும் உன் முகத்தின் வேர்வையால் ஆகாரம் புசிப்பாய்; நீ மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய் என்றார்.//
ஆமா, சரீரம் மண்ணுக்குத்தான்.
பிரசங்கி யில் இருந்து பல வசனங்கள் quote பண்ணியிருக்கீங்க. பிரசங்கி “சூரியனுக்கு கீழே (under the sun)” என்ன நடக்கிறது என்று ஆராய்ச்சி செய்து சாலாமோன் ஞானி எழுதியது தத்துவ புத்தகம். நித்தியத்திற்குரிய கண்ணோட்டத்துடன் அல்ல. கடைசியில்தான் தேவனுக்கு பயந்திரு என்று முடிக்கிறார்.
//சங்கீதம் 146:4 அவனுடைய ஆவி பிரியும், அவன் தன் மண்ணுக்குத் திரும்புவான்; அந்நாளிலே அவன் யோசனைகள் அழிந்துபோம்.//
பூமியில் வீடு கட்ட வேண்டும். கார் வாங்க வேண்டும் என்று நினைத்திருப்பான். மரித்தவுடன் அந்த பூமிக்குரிய யோசனைகள் நிறைவேற வாய்ப்பில்லாமல் போகும் என்பதுதான் அர்த்தம்.
// நினைவுகள் ஆத்துமாவில் பதிந்துள்ளதாம்//
நீங்களே சொல்லுங்க. இயேசு கிறிஸ்து இறந்தவுடன் எல்லாம் அவ்ருக்கு மறந்து போச்சா? எல்லாம் மறந்த கோமா நிலையிலா அவர் போய் காவலில் இருந்த ஆவிகளுக்கு பிரசங்கித்தார்?
//காற்றில் யோசனைகளை பதிக்க முடியாது அம்மணி. //
எல்லா data வும் இப்ப காத்திலதான் பறந்து வருது. Wireless Communication!
//அக்கினிக்கடல் என்பது கல்லறைக்கு கீழே பூமியில் இருக்கும் ஹாட் வாட்டரா???//
இல்லை இல்லை அறிவியற்பூர்வமாக பார்க்கவேண்டுமென்றால் Earth is an insulator வெப்பம் வெளியே விடாமால் பூமி தடுக்கும் அப்ப உள்ளே கொஞ்சம் டெம்பரேச்சர் அதிகமாக இருக்கும் அது தான் இவுகளுக்கு அக்கினிக்கடல் போல, அதாவது தினமும் காலையில் ஹாட் வாட்டர் கீசரை ஆன் பண்ணி தண்ணியை பிடிச்சு குளிப்பது என்பது இவுகளை பொறுத்தவரை அக்கினிக்கொழம்பை அள்ளி மேலே ஊத்தி குளிப்பது மாதிரி,,,,,
சிஸ்டர் கோல்டா, மூடனை நொய்யோடே நொய்யாக குத்தினாலும் அவன் மூடத்தனம் அவனைவிட்டு நீங்காது என்ற வசனத்திற்கு ஏற்ப நீங்கள் என்னதான் வாதிட்டாலும் இவர்கள் திருந்தப்போவதில்லை, நீங்கள் நம்பும் வேதம் வேறு அவர்கள் நம்பும் வேதம் வேறு, அந்த வேதத்துக்கு ரசல் போன்றவர்கள் ஏராளமான விளக்கவுரைகளையும் ஃபுட் நோட்ஸையும் எழுதியிருப்பார்கள், சான்றாக இவர்கள் கணக்குப்படி மாற்கு 16 ம் அதிகாரத்தில் பிற்சேர்க்கை மனிதனின் கற்பனைகளுக்கு ஏற்ப சேர்க்கப்பட்டது என்பார்கள்.
சுவிஷேஷம் அறிவிப்பது என்பது இவர்களுக்கு எட்டிக்காய் மாதிரி, உங்க பக்கத்து வீட்டில் சுவிஷேஷம் சொல்லியாச்சா என்ற விதண்டாவாதம் வேறு, சரி சொல்லியாச்சுன்னு வச்சிக்கிடுவோம் அப்புறம் என்ன செய்யப்போறாங்களாம். உயிரைக்கொடுத்து ஊழியம் செய்த மிஷனரிகளின் பணியை கொச்சைப்படுத்துவார்கள். மிஷனரிப்பணியின் மூலமாக அன்றைக்கு நம் முன்னோர் ஏன் அவர்களின் முன்னோர் சந்திக்கப்பட்டிருக்காவிட்டால் இப்ப என்ன செய்திட்டிருப்பீங்க என்றால் பதிலே இருக்காது. ஒருவேளை பூட்டிய ரூமில் உக்காந்து தேவாரத்தையும் திருவாசகத்தையும் ஆராய்ச்சி செய்துட்டு இருந்திருப்பாங்க போல.
ஆனால் நீங்கள் எதிர் செய்வதால் ஒரு நன்மை உண்டு அஃதாவது இவர்களது மூடத்தனத்தை மற்றவர்கள் காண அம்பலப்படுத்துகிறீர்கள், இணையம் என்ற ஒன்று இருக்கும் வரை தளர்ந்த மனம் உடைய விசுவாசிகளை அது வழி விலகிவிடாமல் காக்கும்.
//இவ்வுளவு பேசுகிறீர்களே (எழுதுகிறீர்களே) உங்கள் பக்கத்து வீடு, உங்கள் தெரு, உங்கள் சந்து, உங்கள் வீதி, உங்கள் வட்டாரம் முழுவதிலும், இயேசு கிறிஸ்து சொன்ன சுவிசேஷத்தை சொல்லி முடித்து விட்டீர்களா!!??//
பக்கத்திலிருக்கும் அவர்களுக்கும், தூரத்திலிருக்கும் உங்களுக்கும் ஜெபம் பண்ணியாச்சி. எனவே, எல்லோருக்கும் ஏதோ ஒரு வழியில் சுவிசேஷம் கண்டிப்பாக செல்லும். ஏஞ்சல் டிவி பார்த்தாலே போதுமே!
//"பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும்" என்ற வசனத்தில் சரீரத்தில் செய்த பாவத்துக்கு ஆத்துமா சாகுமா? //
இயேசு கிறிஸ்துவுக்கு என்ன நடந்ததோ, அதுதான் நமக்கும் நடக்கும். அவர் மரித்தார். அவர் சரீரம் அடக்கம் பண்ணப்பட்டது. ஆனால் அவர் ஆவி&ஆத்துமா, உயிருடன் தான் இருந்தது. அந்த ஆவியில் அவர் போய் காவலில் இருந்த ஆவிகளுக்குப் பிரசங்கித்தார். பின் 3 நாட்களுக்குப் பிறகு மகிமையான சரீரத்தோடு உயிர்த்தெழுந்தார். அதுபோல் தான் நமக்கும் நடக்கும்.
//இது எல்லாம் வாசிக்கவும் பேசவும் நல்லா தான் இருக்கு, ஆனால் வசனம் இல்லையே!! வசனம் இல்லாததை தான் கால காலமாக சொல்லிக்கொண்டு அதில் மகிழ்ந்துக்கொண்டு இருக்கிறீர்களே!! கிளப்புங்க!!//
வசனத்தைக் காட்டினாலும், அது ராஜ்ஜியத்தில்தான் நிறைவேறும் என்று சொல்லி தூக்கிப் போடத்தான் போறீங்க! உங்களுக்கு வசனத்தை சொல்றதே வேஸ்ட்.
//பாவம் செய்யும் ஆத்துமா சாகும் என்று தேவனின் வசனம் சொல்லுகிறது, அப்படி என்றால் பாவம் செய்த ஐசுவரியவானின் "ஆத்துமா" எப்படீங்க பிரிந்து போனது!!//
அப்ப ஆண்டவர் மரித்தபோது அவர் ஆத்துமா செத்துப் போச்சா?
//Ok, Ok, that means when your pastor prays to God, "Please fill this church with souls" you understand that something which sits between spirit and body comes to your church!! Do you really understand things or pretend to understand!!?? Your church is filled with invisible "souls" to your understanding!! You don't understand what you are writing!!
Understand!!//
ஒரு வார்த்தை பல அர்த்தத்தில் உபயோகப்படுத்த முடியும் என்று தெரியாதா? வசனந்தான் தெரியாது என்றால் மொழியும் அப்படித்தானா???
//சிஸ்டர் அவர்களே, நீங்கள் மெய்யாலுமே அறிந்துக்கொள்ள கேட்கிறீர்களா!!??//
பிரதர் அவ்ர்களே! வேற எதுக்காக கேட்பார்கள்??!!
//நானே வழியும் ஜீவனும் சத்தியமுமாய் இருக்கிறேன், என்னை அன்றி ஒருவனும் பிதாவிடத்திற்கு (பரலோகம்) வரான் என்று சொன்ன கிறிஸ்து இயேசு வந்தே 2000 ஆண்டுகள் தான் ஆகியிருக்கிறது!! அவருக்கு முன் சுமார் 4000 வருடங்கள், அவர் வந்து சுவிசேஷம் கேட்காமல் மரித்தவர்கள் எல்லாரும், நீங்கள் சொல்லும் சுவிசேஷத்தின்படி பார்த்தோமென்றால் நீங்கள் சொல்லும் நரகத்திற்கு தானே போவார்கள்!!//
ஏன் இப்படி அவர்களை நரகத்திற்கு அனுப்புவதிலே குறியா இருக்கீங்க?? எத்தனை தடவைதான் இதே கேள்வியை கேட்பீர்கள்??
//5. மரணமடைந்த மற்றவர்கள் அந்த ஆயிரம் வருஷம் முடியுமளவும் உயிரடையவில்லை. இதுவே முதலாம் உயிர்த்தெழுதல்.//
கொஞ்சம் யோசியுங்கள், உயிரடையவில்லை என்று சொல்லிவிட்டு அது தான் முதலாம் உயிர்த்தெழுதல் என்று சொல்லுவதில் ஏதாவது லாஜிக் இருக்கிறதா!!?? //
என்ன சொல்றீங்க?? பைபிளில் லாஜிக் இல்லை என்று சொல்றீங்களா??
வெளி 20 முதலில் வாசிங்க, பிளீஸ்.
//அடம் பிடிக்காட்டியும் நீங்களும் நரகத்திற்கு போயே ஆக வேண்டும்!! நரகம் என்றாலே "மரித்தோரின் நிலை" அல்லது சுலபமாக புரிய வேண்டுமென்றால் "கல்லறை"!! நாங்கள் மாத்திரம் அல்ல, எல்லாரும் போய் தான் ஆக வேண்டும்!!//
அக்கினிக்கடல் என்பது கல்லறைக்கு கீழே பூமியில் இருக்கும் ஹாட் வாட்டரா???
//அவர் உலகத்தையே மன்னிக்க சித்தம் கொண்டிருக்கிறார், நீங்கள் தான் வன்கண்ணனாய் இருக்கிறீகள்!!//
சாமி ரெடியாதான் இருக்கார்.இளைய குமாரர்கள் திரும்பி வரணும்ல. பன்றியோடவே இரு. ஒன்றும் பிரச்சினையில்லை என்றல்லவா சொல்றீங்க!
//இது வேதத்தில் சொல்லப்பட்ட வசனமா//
வசனந்தான். ஆனால் உங்க “ராஜ்யக் கண்களுக்கு” தெரியாது!
//ஏன் மூக்கிலாவது, காலிலாவது தரித்துக்கொள்கிறவன் தப்பித்து விடுவானா? அம்மணி, வெளிப்படுத்தல் புத்தகத்தை அறியும் முன் முதலில் ஆத்துமா சாகுமா சாகாதா? என்ற கேள்விக்கு பதில் தேவை.//
ஆத்துமாவிற்கும் வெளி. புத்தகத்திற்கும் என்ன சம்பந்தம்??? உருப்படியா ஒரு பதிலாவது சொல்லத் தெரியாதா???
//கூறுகெட்ட பதிவுகள் என்று நாங்கள் கொடுத்த தலைப்பை இப்படி தினசரி நிரூபிப்பதற்கு நன்றி!//
//ஒரே வேதாகமத்தை வைத்துக்கொண்டு ஆளாளுக்கு ஒரு அர்த்தம் கற்பித்துக்கொண்டு, வேஷம் போட்டுக்கொண்டு ஒருவரை ஒருவர் சாடிக்கொண்டு, குற்றம்பிடித்துக்கொண்டு நான் சரி, அவன் சரியில்லை என்று ஒரு 'வண்ண' சபையிலிருந்து இன்னொரு 'வண்ண' சபைக்கு ஆட்களை இழுத்துக்கொண்டு, துருபதேசம் செய்து ஜனங்களை மோசம் போக்கிக்கொண்டிருக்கும் "அவர் படைத்த மனிதன் நடத்தும்" வேசி சபைகளூக்கும்,
கிறிஸ்துவின் சரீரமாகிய, வேற்றுமையில்லாத, அப்போஸ்தலர்களை அஸ்திவாரமாக கொண்டு தேவனால் முன்குறிக்கப்பட்டவர்களைக் கொண்டு, தேவனால் கட்டப்பட்டுவரும் கன்னி சபைக்கும் வித்தியாசம் தெரிந்தால் இத்தகைய கூமுட்டைத்தனமான பதில் வந்திருக்காது.//
நீங்க என்ன வேற உலகத்திலயா இருக்கீங்க. இல்ல வேற வேதம் வச்சிருக்கீங்களா?
இருக்கிற 10 பிரிவோட நீங்க 11. அதுவும் மகா மோசமான பிரிவு. ஒவரா உங்களைப் பத்தி நினைச்சிக்காதீங்க.
//இவர்கள் போதகர்கள் சொல்லி கொடுப்பது போல், இரட்சிப்பு என்றால் இப்ப, மரிப்பதற்கு முன்னமே இவர்கள் "நீதிமான்கள்"ஆகி விடுவதாம்,//
உண்மைதான். சிலுவையில் சில exchange நடக்குது. நம் அழுக்கான நீதி இயேசுவின் மேல் போடப்படுகிறது. இயேசுவின் நீதி நமக்குக் கொடுக்கப்படுகிறது.
//இவர்கள் இனிமேல் பாவமே செய்யாமல் இருப்பதாம் (அப்படியே செய்தாலும் அது எல்லாம் ஏற்கனவே மன்னிக்கப்பட்டாகிவிட்டதாம், இரட்சிப்பு என்பது இவர்களுக்கு பாவம் செய்வதற்குண்டான லைசென்ஸ்),//
7 தடவை மட்டுமல்ல, 7 X 70 முறை பாவம் செய்தாலும், மன்னிப்பு கேட்டால் அவ்ர் மன்னிப்பார். அவர் தயாளனாய் இருக்கையில், நீங்க ஏன் வன்கண்ணனாய் இருக்கிறீர்கள்?
//அப்புறம் மற்றவர்களையும் கிறிஸ்தவர்களாக மதமாற்றுவது தான் இவர்களுக்கு தெரிந்த இரட்சிப்பு!!//
நீங்களும் மாறலாம். ஆனால் நீங்க நரகத்திற்குத்தான் போவேன் என்று அடம் பிடிக்கிறீங்க!
அப்போஸ்தலர் 17:31 மேலும் ஒரு நாளைக் குறித்திருக்கிறார்; அதிலே அவர் தாம் நியமித்த மனுஷனைக்கொண்டு, பூலோகத்தை நீதியாய் நியாயந்தீர்ப்பார்; அந்த மனுஷனை மரித்தோரிலிருந்து எழுப்பினதினாலே அதின் நிச்சயத்தை எல்லாருக்கும் விளங்கப்பண்ணினார் என்றான்.
இது தான் அந்த நாள்!! நியாயத்தீர்ப்பின் நாள்!!
அந்த நாள் 1000 வருஷம்!! நீதியை கற்றுக்கொள்ளும் நாள்!! சத்தியத்தை அறிந்துக்கொள்ளும் நாள்!! எல்லா மனுஷர்களையும் இரட்சித்து சத்தியத்தை அறிய செய்கிற நாள்!! இந்த நாளில் தான் சமுத்திரம் ஜலத்தினால் நிறம்புவது போல் பூமி தேவனை அரிகிற அறிவால் நிறம்பும் நாள்!!
//
அப்படியெல்லாம் ஒன்றும் நடப்பது போல் தெரியவில்லை வெளி 20 பார்த்தால்.
வெளி 20ம் அதிகாரத்தின்படி, முதலில் ஒரு உயிர்த்தெழுதல் நடக்கிறது.
5. மரணமடைந்த மற்றவர்கள் அந்த ஆயிரம் வருஷம் முடியுமளவும் உயிரடையவில்லை. இதுவே முதலாம் உயிர்த்தெழுதல்.
அப்புறம் ஆயிரம் வருடம் அரசாட்சி நடக்கிறது. அச்சமயம் நியாயத்தீர்ப்பு நடைபெறும் என்று எந்த வசனமும் சொல்வதாக எனக்குத் தெரியவில்லை.
ஆயிரம் வருட முடிவில், சாத்தான் கொஞ்சகாலம் விடுதலையாகிறான். திரும்ப ஜனங்களை வஞ்சிக்கிறான். திரும்ப ஒரு யுத்தம் நடக்கிறது எல்லாம் முடிவிற்கு வருகிறது.
அதற்கப்புறம்தான் மீதிப் பேர் உயிர்த்தெழுகிறார்கள். (உங்க நம்பிக்கையின் படி அனைவரும் உயிர்த்தெழுந்து ராஜ்யத்தில் பங்கடைவது போல் தெரியவில்லை)
பின் நியாயத்தீர்பு உண்டாகிறது.அப்பொழுது , ஜீவ புஸ்தகத்தில் பேர் இல்லையென்றால் அக்கினிக் கடல் தான் என்று சொல்லப்படுகிறது. உங்க நம்பிக்கை தவறாகி விடுகிறதல்லவா இங்கே.
--
தேவ சித்தம், மனித சித்தம் பற்றி விரைவில் எழுதுகிறேன்!
//இதைத்தான் காமெடியான பதில் என்கிறேன். அவர்களுக்கு திட்டம் வைத்திருப்பாரேயானால், அவர்களுக்கு நீதியாய் நியாயத்தீர்ப்பு செய்வாரேயானால், இப்போது அவரை அறியாதவர்களுக்கு அவரால் செய்ய முடியாதா? முட்டாள்தனமான வாதமாக உங்களுக்குத் தோன்றவில்லை?//
அவரால் செய்ய முடியுமா, முடியாதா என்பது கேள்வி இல்லை. உலகமெங்கும் போய் சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷம் சொல்லுங்கள். ஏற்றுக் கொள்பவர்கள் இரட்சிக்கப்படுவார்கள் என்று ஏன் ஆண்டவ்ர் (முட்டாள்தனமா) சொல்லிட்டுப் போகணும்? அவர் சொன்னதை செய்யணும்ல. ஏன் செய்ய மாட்டேங்கிறீங்க? ஏன் பவுல் சுவிசேஷம் சொல்வதை பற்றி நிருபங்களில் எழுதணும்? ஏன் சுவிசெஷம் சொல்லி கஷ்டப்படணும்? ஏன் சுவிசெஷம் சொல்லி இரத்த சாட்சியாய் பலர் மாறணும்? யோசிங்க அண்ணன்மாரே!
பிதா இழுத்துக்கொள்ளாத, முன்குறிக்கப்படாதவர்களுடைய நிலை என்ன?//
பிறர் மேல் உங்களுக்குள்ள அன்பை, இரக்கத்தைப் பாராட்டுகிறேன்(உண்மையாதான்!). ஆனால், இதெல்லாம் தெரியாமலா, ஆண்டவர் சுவிசேஷம் சொல்லுங்கப்பா என்று சொன்னார்?? யார் எனக்காகப் போவார்கள் என்று கேட்கிறார்?
எல்லோரும் பரலோகம் போவார்கள் என்பது கேட்க நன்றாகத்தான் இருக்கிறது. அப்படி நடக்க வேண்டும் என்பது தான் நம் விருப்பம். ஆண்டவர் இயேசுவின் விருப்பமும். ஆனால் அவரை நாமாக விரும்பி ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார். அப்படி அவர் மேல் நேசம் உள்ளவர்களைத்தான் அவருடன் வைத்துக் கொள்வார். இப்படி அவரைத் ”தெரிந்து கொள்ளாமல்” உடனிருந்த தூதன் பிசாசாய் மாறியதால்தான், இப்படி ”தெரிந்து கொள்ளும்” டெஸ்ட் வைத்து நம்மை எடுத்துச் செல்கிறார். அதுக்குத்தான் இந்த வாழ்க்கை. அவரை தெரிந்து கொண்டோமானால், பிறவிப் பயன் அடைந்து விட்டோம் என்று அர்த்தம்.
எல்லோரும் இரட்சிக்கப்படுவாங்க, யாரும் நரகம் போக மாட்டாங்க என்று சொல்லி, ஒன்றும் செய்யாமல், பலரை நீங்க நரகத்திற்குத்தான் அனுப்புறீங்க. இது நல்ல விஷயமா? நற்செய்தியா?
golda wrote://யார் தேவனின் வார்த்தைகளை கேலியும் கிண்டலும் பண்ற மாதிரி இருக்குது என்று இன்னும் தெளிவாக தெரியும் நாள் வருகிறது!! அது வரையில் பொறுமையாக இருங்கள்!!//
எந்த நாள் அது??
அந்திக் கிறிஸ்துவின் நாள் தான் அது
பெரேயன்ஸ் & சோல் பிரதர்ஸ்,
முத்திரையை எடுக்கலாமா, வேண்டாமா? வசனம் சதாகாலங்களிலும் வாதை என்று சொல்கிறதே? ( 1000 வருட ஆட்சிக்குப்பின் என்ன நடக்கும்? உங்க நம்பிக்கை என்ன? )
--
வெளி 14
9. அவர்களுக்குப் பின்னே மூன்றாம் தூதன் வந்து, மிகுந்த சத்தமிட்டு: மிருகத்தையும் அதின் சொரூபத்தையும் வணங்கித் தன் நெற்றியிலாவது தன் கையிலாவது அதின் முத்திரையைத் தரித்துக்கொள்ளுகிறவனெவனோ,
10. அவன் தேவனுடைய கோபாக்கினையாகிய பாத்திரத்திலே கலப்பில்லாமல் வார்க்கப்பட்ட அவருடைய உக்கிரமாகிய மதுவைக் குடித்து, பரிசுத்த தூதர்களுக்குமுன்பாகவும், ஆட்டுக்குட்டியானவருக்குமுன்பாகவும் அக்கினியினாலும் கந்தகத்தினாலும் வாதிக்கப்படுவான்.
11. அவர்களுடைய வாதையின் புகை சதாகாலங்களிலும் எழும்பும்; மிருகத்தையும் அதின் சொரூபத்தையும் வணங்குகிறவர்களுக்கும், அதினுடைய நாமத்தின் முத்திரையைத் தரித்துக்கொள்ளுகிற எவனுக்கும் இரவும் பகலும் இளைப்பாறுதலிராது.
நம்மிடம் ஆவி, ஆத்துமா, சரீரம் இருக்கிறது என்று உணர்த்தும் வேதவசனம்.
I தெசலோனிக்கேயர் 5:23 சமாதானத்தின் தேவன் தாமே உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்குவாராக, உங்கள் ஆவி ஆத்துமா சரீரம் முழுவதும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது குற்றமற்றதாயிருக்கும்படி காக்கப்படுவதாக.
ஆவியும், ஆத்துமாவும் வேறு என்று உணர்த்தும் வேத வசனம்.
கலாத்தியர் 5:17 மாம்சம் ஆவிக்கு விரோதமாகவும், ஆவி மாம்சத்துக்கு விரோதமாகவும் இச்சிக்கிறது; நீங்கள் செய்யவேண்டுமென்றிருக்கிறவைகளைச் செய்யாதபடிக்கு, இவைகள் ஒன்றுக்கொன்று விரோதமாயிருக்கிறது.
கலாத்தியர் 5:18 ஆவியினால் நடத்தப்படுவீர்களானால், நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டவர்களல்ல.
ஆண்டவர் பேசுவது நம் ஆவியுடன்தான்.
ரோமர் 8:16 நாம் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோமென்று ஆவியானவர்தாமே நம்முடைய ஆவியுடனேகூடச் சாட்சிகொடுக்கிறார்.
ஆவி, ஆத்துமா, சரீரம்
சரீரத்திற்கு விளக்கம் தேவையில்லை.
சோல்(soul) என்பது நீங்கதான். அதாவது வெளியே தெரியாத உள்ளான உண்மை மனிதன். மூளை hardware. ஆத்துமா software.வெளியே வீரனாக நடித்தாலும், உள்ளே பயந்தாங்கொள்ளியா இருக்கலாம். வெளியே அன்பு காட்டினாலும், உள்ளே வெறுப்பு இருக்கலாம். வெளியே வெயில் அடித்தாலும், உள்ளே மகிழ்ச்சியாக இருக்கலாம்.
நம் ஆவியில் தான் தேவனோடு தொடர்பு கொள்கிறோம். அவர் பேசுவதைக் கேட்கிறோம். அவர் பிரசன்னத்தை உணர்கிறோம்.இந்த தொடர்பு , ஏதேனில் ஆதாம் பாவம் செய்ததால் முழு மனுக்குலத்துக்கும் அற்றுப் போனது. இரட்சிக்கப்படுகையில் ஆவி உயிர்க்கிறது. தேவனோடு தொடர்பு கொள்ள முடிகிறது. ஆவிக்குரிய காரியங்கள் புரிகிறது., தெரிகிறது.
நம் நினைவுகள் எல்லாம் ஆத்துமாவில் பதிவு செய்யப்படுகிறது. மரணம் சம்பவிக்கையில் சரீரத்தை விட்டு, ஆவியும் ஆத்துமாவும் பிரிந்து செல்கிறது.பாதாளத்தில் சரீரம் இன்றி வேதனைப்பட்ட ஐஸ்வர்யவானுக்கு எல்லாம் ஞாபக்ம் இருந்தது. அத்துடன் எல்லா உணர்வுகளும் இருந்தது.
உயிருடன் இருக்கும் வரை சரீரத்திற்கும் ஆவிக்கும் ஒரு பந்தம் இருக்கிறது. ஒரு வெள்ளிக் கயிறு இரண்டையும் இணைத்திருக்கிறது(பிரசங்கி 12:6 வெள்ளிக்கயிறு கட்டுவிட்டு).
Body receives input from the natural world .Spirit receives input from the spritual world (God, Devil,Angels & Evil Spirits).Soul sits between spirit and body.Whatever we receive through natural sensess(body) and spiritual senses(spirit) goes to the soul. Soul is the part through which we understand(or try to understand) the inputs. In that sense, we can say soul is the brain for the body and spirit.
//ஏசாயா26:9. என் ஆத்துமா இரவிலே உம்மை வாஞ்சிக்கிறது; எனக்குள் இருக்கிற என் ஆவியால் அதிகாலையிலும் உம்மைத் தேடுகிறேன்; உம்முடைய நியாயத்தீர்ப்புகள் பூமியிலே நடக்கும்போது பூச்சக்கரத்துக்குடிகள் நீதியைக் கற்றுக்கொள்வார்கள்.
ஏசாயா 11:9 என் பரிசுத்த பர்வதமெங்கும் தீங்குசெய்வாருமில்லை; கேடுசெய்வாருமில்லை; சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறதுபோல், பூமி கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்.
பிலிப்பியர் 2:10 இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும்,
இந்த வசனங்கள் எப்போது நிறைவேறும்?//
அது எப்பவும் நிறைவேறிட்டுப் போகுது. நான் கேட்ட வசனத்தைப் பத்தி மட்டும் சொல்லுங்க.
நீங்க சொல்றதைப் பார்த்தால் எல்லா வசனங்களும் இராஜ்ஜியத்தில் தான் நிறைவேறும் போல் தெரிகிறது. அப்ப எந்த வசனம்தான் இக்காலத்திற்கு உரியது?
இரட்சிப்பு என்பது மரணத்திலிருந்து உயிர்த்தெழுவது என்று காமெடி பேசும் உங்களைப் போன்ற சிலர் இருக்கிறார்கள்.யெகோவா சாட்சிகள் அப்படித்தானா என்று தெரியாது. Mormons அப்படித்தான். எனவே நீங்க மட்டும் தனி இல்லை.
நீங்க யார்? என்ற கேள்வி கேட்டு பல பிரிவுகளை போட்டிருந்தீர்கள். See, our God loves variety! ஆண்டவர் காட்டுப் புஷ்பங்களைக் கூட வித்தியாசமான வண்ணங்களில், வடிவங்களில் படைத்திருக்கிறார். சாலோமோன் கூட அவைகளைப் போல் உடுத்தியிருக்கவில்லை என்று ஆண்டவர் சொல்லவில்லையா? எனவே, அவர் படைத்த மனிதன் நடத்தும் சபைகள் பல வண்ணங்கள், வடிவங்களில் இருப்பதில் ஆச்சர்யம் என்ன??
golda wrote://யார் தேவனின் வார்த்தைகளை கேலியும் கிண்டலும் பண்ற மாதிரி இருக்குது என்று இன்னும் தெளிவாக தெரியும் நாள் வருகிறது!! அது வரையில் பொறுமையாக இருங்கள்!!//
//இப்போது கிறிஸ்துவை அறியாதவர்கள், கிறிஸ்துவுக்கு முன் வாழ்ந்து மரித்தவர்கள் என்னாவார்கள் என்று உங்கள் தளத்து வேத விற்பன்னர்களிடமோ, சாது போன்ற சூப்பர் ஃப்ராடுகளிடமோ கேட்டுத்தான் பாருங்களேன். காமெடியான பதில் சொல்வார்கள்.//
அவர்களுக்கு ஆண்டவர் என்ன திட்டம் வைத்திருக்கிறாரோ நமக்குத் தெரியாது. அவர் நீதியுள்ள நியாயாதிபதி , எனவே, நீதியாய் தீர்ப்பு செய்வார் என்று நம்பலாம்.
ஆனால் இக்காலத்தில் இயேசு கிறிஸ்துதான் வழி, சத்தியம், ஜீவன். அவரை ஏற்றுக் கொண்டால்தான் இரட்சிப்பு.
//யார் தேவனின் வார்த்தைகளை கேலியும் கிண்டலும் பண்ற மாதிரி இருக்குது என்று இன்னும் தெளிவாக தெரியும் நாள் வருகிறது!! அது வரையில் பொறுமையாக இருங்கள்!!//
//வெளிப்படுத்தல் வசனத்துக்குப் போகும் முன் முதலில் ஆதியாகமத்துக்கு வந்து நீ சாகவே சாவாய். மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்கே திரும்புவாய் போன்ற நேரடி வசனங்களைப் புரிந்துகொண்டு. முதலில் மரணம் என்றால் என்ன என்று தெளிவாகுங்கள்... நித்திய ஜீவனுக்கு அப்புறம் போகலாம். ஏன் ஆயிரம் முறை சொன்னாலும் இது குறித்து உங்கள் தளத்தில் கண்டு கொள்வதே இல்லை. உலகின் எல்லா கோட்பாடுகளுக்கும் மூலகாரணமே மனிதன் செத்தவுடன் வேறெங்கேயோ உயிரோடு போகிறான் என்று நம்பும் மூடத்தனமே ஆகும். முதலில் அதிலிருந்து வசனபூர்வமாக வெளியே வாருங்கள்....//
மனிதனுக்குள் ஆவி என்று ஒன்று இருக்கிறது.
நீதிமொழிகள் 20:27 மனுஷனுடைய ஆவி கர்த்தர் தந்த தீபமாயிருக்கிறது; அது உள்ளத்திலுள்ளவைகளையெல்லாம் ஆராய்ந்துபார்க்கும்
பிரசங்கி 8:8 ஆவியை விடாதிருக்கிறதற்கு ஆவியின்மேல் ஒரு மனுஷனுக்கும் அதிகாரமில்லை
மரணத்தில், மண்ணால் உண்டாக்கப்பட்ட சரீரம் மண்ணுக்குத் திரும்பும். தேவன் தந்த ஆவி போக வேண்டிய இடத்துக்குப் போகும்.
பிரசங்கி 12:7 இவ்விதமாய் மண்ணானது தான் முன்னிருந்த பூமிக்குத் திரும்பி, ஆவி தன்னைத் தந்த தேவனிடத்திற்கு மறுபடியும் போகாததற்குமுன்னும், அவரை உன் வாலிபப்பிராயத்திலே நினை.
சங்கீதம் 146:4 அவனுடைய ஆவி பிரியும், அவன் தன் மண்ணுக்குத் திரும்புவான்; அந்நாளிலே அவன் யோசனைகள் அழிந்துபோம்.
//அதெல்லாம் தேவையில்லை என்று ஒரு போதும் சொல்லவில்லை. எல்லாரும் உயிர்த்தெழுந்து அதன் பின்னரே கிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்துக்கு வருவார்கள் என்றுதான் சொல்கிறோம். அரைகுறையாகப் படித்துவிட்டு அரைகுறையாகக் கேள்வி கேட்டால் எப்படி பதில் தர முடியும் கோல்டா அவர்களே?//
உயிரிந்தெழுந்தற்கு அப்புறம் தான் அந்த வசனம் apply ஆகும் என்று எப்படி சொல்றீங்க? அப்படி எங்க போட்டிருக்கு?
சரி நீங்க யார்? யேகோவா விட்னஸ் இல்லை என்று சொல்றீங்க அப்ப Mormons என்று சொல்லப்படும் கூட்டத்தை சேர்ந்தவர்களா? உங்க நம்பிக்கை சார்ந்த புத்தகங்கள் சிலவற்றை சொல்லுங்கள்.
---
//எங்களது போராயுதங்கள் எல்லாம் மாமிசத்துக்குரியவைகள் அல்ல.
ஆவிக்குரியவன் ஆவிக்குரியவைகளை நிதானித்தறிகிறான்.
வேத வசனங்கள் ஆவியாயும், ஜீவனுள்ளதாயும் உயிர்ப்பிக்கிறதாயும் உள்ளது.//
மேலே உள்ளது நீங்க எழுதியதுதான். இங்க ஆவி என்று எதை சொல்றீங்க?