பெறேயன்ஸ் //சாத்தான் ஒருவனே அந்த ஜீவபுஸ்தகத்திலே பெயர் இல்லாதவனாக காணப்படுகிறான்; ஏனென்றால் அவன் ஒருவனே நியாயம் தீர்க்கப்பட்டிருக்கிறான் (யோவான் 16:11), அவன் ஒருவனை தவிர அந்த இரண்டாம் மரணம் என்கிற அழிவிற்குள் யாராவது போகிறார்களென்றால் அது நீங்கள் வைத்திருக்கும் குப்பையானசிந்தைகள்தான்!!//
விவாதங்கள் எல்லைமீறியும் , சூடாகவும் போய்கொண்டு இருப்பதால் மேலே நண்பர் பெறேயன்ஸ் சொன்ன காரியத்தை சற்று நகைச்சுவையுடன் பதிலளிக்கலாம் என்று நினைக்கிறேன். அதற்கும் மேலே நான் "சாத்தான் மட்டுமே ஜீவபுஸ்தகத்தில் பெயர் இல்லாதவன்" என்று "உண்மையிலே" நினைக்கிற அளவிற்கு மூளைச்சலவை செய்யப்பட்டவர்கள் (நண்பர் அன்பு உட்பட) யாரும் இருக்கமாட்டார்கள் என்று நினைக்கிறேன்.
அப்பாவியாகிய ஜான் நண்பர் பெரேயன் சொன்னதை உண்மையென்று நம்பிவிடுகிறார். பின்பு தொடர்ந்து வேதத்தில் சில வசனங்களை வாசிக்கிறார். வாசிக்கும்போது ஜானுக்கு ஏற்படும் சந்தேகங்களை தொடர்ந்து வாசியுங்கள்.
ஆகிலும், தேவரீர் அவர்கள் பாவத்தை மன்னித்தருளுவீரானால் மன்னித்தருளும்; இல்லாவிட்டால் நீர் எழுதின உம்முடைய புஸ்தகத்திலிருந்து என் பேரைக் கிறுக்கிப்போடும் என்றான். (யாத்திராகமம் 32:32)
நண்பர் அன்புவிற்க்கும், காமடியர்களுக்கும் நடக்கும் விவாதம் சுவையாக சென்று கொண்டு இருப்பதால் சுவையோடு சுவை சேர்க்கும் நோக்கத்திற்காக இந்த பழைய 'இன்னும் பதில் சொல்லப்படாத' பதிவை வெளியிடுகிறேன்.
பிணம் எழுந்து போய் இன்னொரு பிணத்தை அடக்கம் பண்ணுமோ? இல்லை என்றால் மரித்தோர் யார்?
அதற்கு இயேசு: மரித்தோர் தங்கள் மரித்தோரை அடக்கம் பண்ணட்டும், நீ என்னைப் பின்பற்றி வா என்றார். (மத்தேயு 8:22)
தேவனும் சரிரத்தை மாத்திரம் தான் கொல்ல வல்லவரா? அப்போ கிழே உள்ள வசனங்கள் எதற்கு?
ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாயிராமல், சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்படவேண்டாம்; ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள். (மத்தேயு 10:28)
என் சிநேகிதராகிய உங்களுக்கு நான் சொல்லுகிறேன்: சரீரத்தைக் கொலைசெய்து, அதன்பின்பு அதிகமாக ஒன்றும் செய்யத் திராணியில்லாதவர்களுக்குப் பயப்படாதிருங்கள். நீங்கள் இன்னாருக்குப் பயப்படவேண்டுமென்று உங்களுக்குக் காண்பிக்கிறேன்: கொலைசெய்தபின்பு நரகத்திலே தள்ள வல்லமையுள்ளவருக்குப் பயப்படுங்கள்; ஆம், அவருக்கே பயப்படுங்களென்று உங்களுக்குச் சொல்லுகிறேன். (லூக்கா 12:4-5)
நியாயப்பிரமாணத்தைக் கட்டளையிடுகிறவர் ஒருவரே, அவரே இரட்சிக்கவும் அழிக்கவும் வல்லவர்; மற்றவனைக் குற்றப்படுத்துகிறதற்கு நீ யார்? (யாக்கோபு 4:12)
நல்ல Sense Of Humar சகோதரி! அவரு வேற நெறைய புக்கு (Books) வைத்து இருக்கிறாராம் நாம் அதை பாத்து கூட இருக்கமட்டோமாம். உண்மைதான் ரசலின் குப்பையை நாம் எதுக்கு பார்க்கணும்?
சகோதரி கோல்டா கலக்குறீங்க.... நம்பவே முடியவில்லை. நண்பர் கோவை பெரியன் எத்தனை பேரைத்தான் சமாளிப்பார். உங்களுக்கென்று தனிப்பதிவு தொடங்கினாலும் ஆச்சரியமில்லை.
ஆத்தும கரைசலின் 50 இற்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்திருந்தீர்கள். இதுவரை உருப்படியாக அதற்கு மறுப்பு எழுதினார்களா?
இப்போ நீங்கள் மாறுவேடம் பூண்டுள்ளதாக நண்பர் சொல்லுகிறார். இவரின் தளத்தில் அதுதானே நடக்கிறது.
எங்கே நண்பரே நிருபியுங்கள் பார்க்கலாம். இது எமது சவால்.
ஒரே ஹேடஸை குழின்னு, படுகுழின்னு, பாதாள குழின்னு, எரி நரகம், நரகம் என்று விதவிதமாக மொழிப்பெயர்த்து அதில் குளிர் காய்கிறீர்களே, அதைவிடவா காமேடி!!
வேதத்தை மொழிபெயர்த்த அத்தனை பேரும் மூல பாஷை தெரியாத முட்டாள்களா? நான் குறிப்பிட்ட எல்லா வசனத்திலும் Hades என்ற வார்த்தைதான் இருக்கிறதா?
ஆனால் போனவ வந்தவனெல்லாம் நானும் அபிஷேகிக்கப்பட்டவன் என்று சொல்வது நானும் ஒரு கிறிஸ்து என்று சொல்வதற்குச் சமம்.
மாம்சமான யாவர் மேலும் என் ஆவியை ஊற்றுவேன் என்று சொல்லியிருக்கிறார். எனவே உங்க மூஞ்சிக்கும் கிடைக்கும், கவலைப்பட வேண்டாம்!
அபிஷேகம் பெற்று விட்டீர்கள் என்றால், இயேசு கிறிஸ்து வெறும் படைக்கப்பட்ட மனிதன் தானோ, அல்லது தேவ தூதனோ எனும் சந்தேகமெல்லாம் தூள் தூளாகி விடும். எனவே, கோவை காமெடியன்ஸ், நீங்க ஜெபிக்க வேண்டிய ஜெபம் இது தான்: அன்புள்ள ஆண்டவரே, எங்களுக்கு வசனத்தைப் பார்த்தால் இயேசு கிறிஸ்து மனிதன் போல் தெரிகிறது. ஆனாலும் சகோ சில்சாம் & கோ, அப்படியல்ல இயேசு கிறிஸ்து தெய்வம் என்று நிறைய வசனங்களைக் காட்டி சாதிக்கிறார்கள். எது உண்மை ஆண்டவரே? எங்கள் ஐயங்களைத் தீர்த்து வைப்பீராக. அன்று உம் சீஷர்களை அபிஷேகித்தது போல் எங்களையும் அபிஷெகித்து, இயேசு கிறிஸ்துவுக்கு சாட்சியாக வாழ எங்களுக்கு உத்வி செய்யுங்க பிதாவே. ஆமென்!
மத் 5:29 உன் வலது கண் உனக்கு இடறலுண்டாக்கினால், அதைப் பிடுங்கி எறிந்து போடு; உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைப்பார்க்கிலும், உன் அவயவங்களில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாயிருக்கும்.
42. அவர்களை அக்கினிச் சூளையிலே போடுவார்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும்.
50. அவர்களை அக்கினிச் சூளையிலே போடுவார்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும் என்றார்.
மத் 16:26 மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்?
// பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவன் பரலோகத்தில் பிரவேசிப்பானா அல்லது இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவர்களை அனைவரும் பரலோகத்தில் பிரவேசிப்பார்களா என்கிற மிக பெரிய கேள்வி இருக்கிறது!! இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட அனைவரும் பரலோகத்திற்கு போக முடியும் என்று போதிப்பவர்கள் தான் இன்று அநேகராக இருக்கிறார்கள்!! அப்படி பார்த்தோமென்றால் பல கோடி ஜனங்கள் பரலோகத்திற்கு உரியவர்களாக இருக்கிறார்கள்!! வெவ்வேறு சபைகளுக்கு சென்றாலும், சிறைச்சாலையில் இருந்தாலும், விபச்சார விடுதிகளில் இருந்தாலும், கொலை கொள்ளையில் ஈடுபட்டாலும், அல்லது மிஷனரி ஊழியம் செய்தாலும், இவர்கள் அனைவரும் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவர்களே!! அப்படி என்றால் இவர்கள் எல்லாரும் பரலோகம் சென்று விட முடியுமா??
அப்படி என்றால் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்று ஏன் கிறிஸ்து தம்மை நோக்கி கர்த்தாவே கர்த்தாவே என்று சொல்லி அவரை ஏற்றுக்கொண்டிருக்கும் ஜனங்களிடத்தில் சொல்ல வேண்டும்?//
ரொம்ப பெரிய கண்டுபிடிப்பு தான். கிறிஸ்துவாகிய மேசியாவின் வழியில் மனுக்குலம் இரட்சிப்பை அடைவதே பிதாவின் சித்தமாக இருந்தது. இந்த தேவ திட்டத்தை நிறைவேற்றத்தான் இயேசு பூமிக்கு வந்தார். இயேசுவை ஏற்றுக்கொண்டாலும் அவர் கற்பித்த அந்த இரண்டு கற்பனைகளையும் கைக்கொள்வதே பிதாவின் சித்தமாகிறது. அந்த 2 கட்டளைகளிலும் நியாயப்பிரமாணம் முழுவதும் தீர்க்கதரிசனங்களும் அடங்கியுள்ளது. கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட கிறிஸ்தவன் மாய்மாலமாகவும் வாழ சாத்தியம் உள்ளது எனவே தான் இயேசு பிதாவின் சித்தத்தை நிறைவேற்றவேண்டும் என்கிறார். எதிலுமே முழுமையை எதிர்பார்க்கும் ஆண்டவர் தனது சித்தத்தை முழுமையாக நிறைவேற்றவேண்டும் என வலியுறுத்துகிறார்... இவ்வளவு பேசும் நீங்கள் பிதாவின் சித்தம் என வேறு ஏதாவது இருந்தால் என்னவென்று எடுத்து வையுங்கள் பார்ப்போம்.
இவருக்கும் இந்த ஆராய்ச்சிக்கும் சம்பந்தமே இல்லை. யூதாஸ், அந்தி கிறிஸ்த்து மற்றும் கள்ள தீர்க்கதரிஷி ஆகியோர் பாவங்கள் மன்னிக்கப்பட்டு பரலோகம் போவர்கள் அப்புறம் எதுக்கு இந்த கேள்வி அப்புறம் தேவையில்லாத விளக்கம். எல்லார் பாவமும் மன்னிக்கப்படும் ஆகையால் "Go Sin Many More" Enjoy the best of both worlds. (இது தான் ரசலில் Gospel)
. ஏசாயா பார்த்த யேகோவா யார் என்று கேட்டு ஒரு மாசத்திற்கு மேல் ஆகியும் பதில் இல்லை. கொடுமை!!
Sin Many More" Enjoy the best of both worlds.
சரியாக சொன்னீர்கள். இதைத்தான் இன்றைய கள்ளப்போதகக் கூட்டங்கள் செய்து கொண்டிருக்கின்றன. நரகம் என்ற ஒன்று இல்லை. தேவன் நரகத்தில் மனிதனை வாதிக்க கொடூரமானவர் இல்லை. இவர்களைப் பொறுத்தவரையில் எத்தனை பாவங்கள் வேண்டுமானாலும் துணிந்து செய்யலாம். எல்லாம் அனுபவிப்பதற்குத்தான். இதனால்தான் பெரியவரும் விபச்சாரத்திற்கு ஆதரவாக தனது கருத்தை பதி்த்து சென்றுள்ளார்.
கத்தோலிக்கர்களின் ஆத்தும சுத்தரிகரிப்பு ஸ்தலம் போன்றும் இவர்களின் போதனைகள் இருக்கிறது.
//பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவன் பரலோகத்தில் பிரவேசிப்பானா அல்லது இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவர்களை அனைவரும் பரலோகத்தில் பிரவேசிப்பார்களா என்கிற மிக பெரிய கேள்வி இருக்கிறது!!//
இவர் எப்போது உளறுவதை நிறுத்துவார் என்று தெரியவில்லை? பிதாவின் சித்தமே இயேசு கிருஸ்துவை எல்லாரும் ஏற்றுகொள்ள வேண்டும் என்பதே.
//சர்வவல்லமையுள்ள தேவனாகிய பிதாவை குறித்தான அறிவு, இவரின் நேசக்குமாரனான கிறிஸ்துவை குறித்தான ஞானம், இவர்களின் சிந்தையும் வல்லமையுமான ஆவியை குறித்தான அறிவு, இந்த தெளிவை தேவனிடத்திலிருந்து அவரின் வார்த்தைகளிலிருந்து பெற்றவர்கள், மீண்டுமாக தேவனை மறுதலித்து, கிறிஸ்துவின் நிலையை மறுதலித்து போனால் அது மன்னிக்கப்படமாட்டாதாம்!! ஏனென்றால் இந்த அறிவானது, இந்த ஞானமானது, பிதாவாகிய தேவனிடத்திலிருந்து தான் கிடைக்கிறது!! பிதாவிடத்திலிருந்து அவரின் ஆவியினால் பெற்றுக்கொண்ட ஞானத்தை மறுதலிப்போருக்கு மாத்திரமே அது மன்னிக்கப்படாது என்கிற ஒரு கண்டிஷன் இருக்கிறது!!//
இவருக்கும் இந்த ஆராய்ச்சிக்கும் சம்பந்தமே இல்லை. யூதாஸ், அந்தி கிறிஸ்த்து மற்றும் கள்ள தீர்க்கதரிஷி ஆகியோர் பாவங்கள் மன்னிக்கப்பட்டு பரலோகம் போவர்கள் அப்புறம் எதுக்கு இந்த கேள்வி அப்புறம் தேவையில்லாத விளக்கம். எல்லார் பாவமும் மன்னிக்கப்படும் ஆகையால் "Go Sin Many More" Enjoy the best of both worlds. (இது தான் ரசலில் Gospel)
. ஏசாயா பார்த்த யேகோவா யார் என்று கேட்டு ஒரு மாசத்திற்கு மேல் ஆகியும் பதில் இல்லை. கொடுமை!!
-- Edited by John on Thursday 12th of May 2011 08:10:55 AM
அருமை நண்பரே, தங்களுடைய பாராட்டினை சிரந்தாழ்த்தி ஏற்றுக்கொள்ளும் முன்பதாக ஒரு காரியம்,என்னை "குரு" என்று குறிப்பிட்டதால் அன்பு அவர்களின் உஷ்ணமான பார்வை உங்கள் மீது விழ இருக்கிறது என்பதை நினைவில் கொள்ளவும்;மேலும் "குரு" என்று ஏன் குறிப்பிடக்கூடாது என்பதற்கு வேத வசனம் மட்டுமே காரணமல்ல, "குரு" எனும் ஈரெழுத்து வார்த்தையானது ஒவ்வொன்றுக்கும் ஒரு வார்த்தையானது பின்னணியில் இருப்பதால் அதன் உண்மையான பொருள் ஒரு வாக்கியமாகும்;அதாவது ஒரு ஈரெழுத்து சொல்லின் ஒவ்வொரு எழுத்தும் ஒரு வார்த்தையாக இரு வார்த்தையானது ஒரு வாக்கியமாகிறது.
தங்களுக்கு தமிழ் க்ளாஸ் எடுத்ததற்கு மன்னிக்கவும்; இது தமிழ் வார்த்தையுமல்ல, இது ஒரு சமஸ்க்ருத வார்த்தையாகும்;எனவே என்னை "குரு" என்று குறிப்பிடாமல் முன்னோடி என்று வேண்டுமானால் குறிப்பிடுங்கள்;அப்படியும் ஆண்டவர் சொல்லுகிறார்,முந்தினோர் பிந்தினோர் ஆவர்,என்பதாக.//
வாயை திறக்கவே பயமாய் இருக்கு. நண்பர் கோவை பெரேயன் தளத்தில் Soul Solution என்பவர் ஏன் இவ்வளவு காரமாக இருக்கிறார் என்று புரியவில்லை! Bereyans போல வசனத்தை ஆராய்வது என்றால் இதுதானோ?
//நீங்கள் சாதாரணமான ஆள் கிடையாது...உங்கள் கருத்துக்களில் குறும்பும் நகைச்சுவையும் புகுந்து விளையாடுகிறது;(மேசியாவின்) எதிரிகள் நம்முடைய வேலியை- அதாவது அலங்கத்தை எடுத்துக்கட்டினால் கூட சண்டைக்கு வருகிறார்களே... சன்பல்லாத்து மற்றும் தொபியாவின் வழிவந்தவர்களாக இருப்பார்களோ..?//
அதிலே "குரு" நீங்கதான் சகோதரரே! உங்களுடைய எழுத்துகளை, நடையை ரசிக்கிறேன். (குறிப்பு :- இதுக்கு திட்டு நான் நண்பர்(?!) பெறேயனிடத்தில் வாங்க வேண்டியது இருக்கும்)
அருமை நண்பரே, தங்களுடைய பாராட்டினை சிரந்தாழ்த்தி ஏற்றுக்கொள்ளும் முன்பதாக ஒரு காரியம்,என்னை "குரு" என்று குறிப்பிட்டதால் அன்பு அவர்களின் உஷ்ணமான பார்வை உங்கள் மீது விழ இருக்கிறது என்பதை நினைவில் கொள்ளவும்;மேலும் "குரு" என்று ஏன் குறிப்பிடக்கூடாது என்பதற்கு வேத வசனம் மட்டுமே காரணமல்ல, "குரு" எனும் ஈரெழுத்து வார்த்தையானது ஒவ்வொன்றுக்கும் ஒரு வார்த்தையானது பின்னணியில் இருப்பதால் அதன் உண்மையான பொருள் ஒரு வாக்கியமாகும்;அதாவது ஒரு ஈரெழுத்து சொல்லின் ஒவ்வொரு எழுத்தும் ஒரு வார்த்தையாக இரு வார்த்தையானது ஒரு வாக்கியமாகிறது.
தங்களுக்கு தமிழ் க்ளாஸ் எடுத்ததற்கு மன்னிக்கவும்; இது தமிழ் வார்த்தையுமல்ல, இது ஒரு சமஸ்க்ருத வார்த்தையாகும்;எனவே என்னை "குரு" என்று குறிப்பிடாமல் முன்னோடி என்று வேண்டுமானால் குறிப்பிடுங்கள்;அப்படியும் ஆண்டவர் சொல்லுகிறார்,முந்தினோர் பிந்தினோர் ஆவர்,என்பதாக.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
யேகோவாவின் சாட்சிகள் பிரசங்கிப்பதோ இராச்சியத்தின் சுவிசேசம். கிறிஸ்தவர்கள் பிரசங்கிப்பதோ கிறிஸ்துவின் சுவிசேசம் ( தேவ கிருபைக்கான சுவிசேசம் / சமாதானத்தின் சுவிசேசம் ). இராச்சியத்தின் சுவிசேசம் முதலில் யோவான் ஸ்தானனால் பிரசங்கிக்கப்பட்டது. இது 'இயேசுநாதர்' சிலுவையில் மரிக்கும் வரையில் பிரசங்கிக்கப்பட்டது. இப்போது பிரசங்கிக்க படுவதோ, கிறிஸ்துவின் சுவிசேசம். இது சபை எடுபடும் வரையிலுமே... மீண்டுமாய் இது... அந்தி கிறிஸ்துவின் நாட்களில் யூதர்களால் பிரசங்கிக்கப்படும்.
( பைபிளில் சொல்லப்பட்டிருக்கும் சில சுவிசேசங்கள். 1) இராச்சியத்தின் சுவிசேசம். 2) கிறிஸ்துவின் சுவிசேசம் ( தேவ கிருபைக்கான சுவிசேசம் / சமாதானத்தின் சுவிசேசம் / மகிமையின் சுவிசேசம்). 3) என் சுவிசேசம்.... என்று சொல்கிறார் அப்போ பவுல். 4) நித்திய சுவிசேசம். இவைகளை பிரசங்கிப்பவர்களும். அதற்கான கால கட்டமும் வேறு.... கடைசியாக வேறோரு சுவிசேசமும் உள்ளது.( கள்ள சுவிசேசம்) .
//நீங்கள் சாதாரணமான ஆள் கிடையாது...உங்கள் கருத்துக்களில் குறும்பும் நகைச்சுவையும் புகுந்து விளையாடுகிறது;(மேசியாவின்) எதிரிகள் நம்முடைய வேலியை- அதாவது அலங்கத்தை எடுத்துக்கட்டினால் கூட சண்டைக்கு வருகிறார்களே... சன்பல்லாத்து மற்றும் தொபியாவின் வழிவந்தவர்களாக இருப்பார்களோ..?//
அதிலே குரு நீங்கதான் சகோதரரே! உங்களுடைய எழுத்துகளை , நடையை ரசிக்கிறேன். (குறிப்பு :- இதுக்கு திட்டு நான் நண்பர் பெறேயனிடத்தில் வாங்க வேண்டியது இருக்கும்)
நீங்கள் சாதாரணமான ஆள் கிடையாது...உங்கள் கருத்துக்களில் குறும்பும் நகைச்சுவையும் புகுந்து விளையாடுகிறது;(மேசியாவின்) எதிரிகள் நம்முடைய வேலியை- அதாவது அலங்கத்தை எடுத்துக்கட்டினால் கூட சண்டைக்கு வருகிறார்களே... சன்பல்லாத்து மற்றும் தொபியாவின் வழிவந்தவர்களாக இருப்பார்களோ..?
ஏரோதுக்கள் தேவனுடைய ஆலயத்தை கட்ட தேவன் ஒருபோதும் அனுமதிக்கவே மாட்டார்; அது ஒரு கல்லின்மேல் ஒரு கல் இராதபடிஇரட்சகரின் வாக்குபடியே இடிக்கப்பட்டது அல்லவா?
அதுபோலவே இவர்களுடைய தற்பெருமையும் அடக்கப்படும்;நோவாவின் பேழையில் எவ்வேழு ஜோடுகள் சேர்க்கப்படவும் அசுத்தமான துஷ்டமிருகங்களில் ஒரே ஒரு ஜோடு மட்டுமே சேர்க்கப்பட்டதுமே இவர்களுடைய "சிறுமந்தை" கூற்றுக்கு பதிலாகும்;இதனை ஏற்கனவே நான் அவர்களுக்கு பதிலாகக் கூறியிருக்கிறேன்.
நாம் தாவீதின் வீட்டாரைப் போலப் பெருகுவோம்;அவர்களோ சவுலின் வீட்டாரைப் போல க்ஷீணப்பட்டுப் போவார்கள் என்பது நிச்சயம்.
மத்தேயு 24:4. இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவனும் உங்களை வஞ்சியாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; 5. ஏனெனில், அநேகர் வந்து, என் நாமத்தைத் தரித்துக்கொண்டு: நானே கிறிஸ்து என்று சொல்லி, அநேகரை வஞ்சிப்பார்கள்.
// தாம் ஊழியர்கள் என்கிற போர்வையில் எத்துனை பேரை வஞ்சிக்கிறோம் என்கிற அச்சமே இல்லாமல் இருக்கும் ஒரு பெரிய கூட்டத்தார் மூலமாக தான் வஞ்சகம் உண்மையான சபையை பீறி போட்டதே தவிர, அற்புதம் எழுதுவது போல் ஏதோ ஒரு சிறிய கூட்டம் வஞ்சிக்காது, கிறிஸ்து இயேசு சொல்லுகிறபடி, அநேகர் வந்து அநேகரை வஞ்சிப்பார்கள்!!//
இது என்ன ஒரு சின்னபுள்ள தனமான கருத்து. உங்கள் கூட்டத்துடன் பேச ஆரம்பித்து சில நீங்கள் வேதம் வாசிக்கும் பெரேயா (??) முறைமையை புரிந்து கொண்டேன். நீங்கள் காட்டிய வசனம் (மத்தேயு 24:4) அநேகர் வந்து வஞ்சிப்பார்கள் என்றுதான் சொல்லுகிறதே தவிர தனி ஆளாகவோ அல்லது சிறு கூட்டமாக வந்து 'அருமையான வேதாகம வகுப்புகள்" என்று கூவி அழைத்து வஞ்சிக்கமாட்டார்கள்என்று சொல்லவில்லை. கிழே உள்ள வசனத்தில் சிலர் என்று வருகிறது உடனே வஞ்சிக்கிறவர்கள் சிறு கூட்டமாக (உதாரணமாக உங்கள் கூட்டத்தை போல) வருவார்கள் என்று முடிவு செய்ய முடியுமா?
//ஆனால் வெகு சிலரே கிறிஸ்துவின் அந்த இடுக்கமான வாசலை கண்டுபிடித்து நடப்பார்கள் என்கிறது வேதம்!! சத்தியத்//தை விரும்புவோர் அல்லது அந்த வழியில் நடப்போர் ஆளுக்கு ஒரு சபை வைத்துக்கொண்டு ஒவ்வொரு உபதேசத்தினால், வித்தியாசமான தந்திரங்களினால் கூட்டம் சேர்க்காமல், கிறிஸ்து இயேசு சொன்னபடி சிலர் மாத்திரமே, அந்த சத்திய வழியை கண்டுபிடித்து நடக்க பிரயாசிப்பார்கள் என்பதே உண்மை!!"
நெசமாவா? நான் சாத்தான் மட்டும்தாம் விசாலமான பாதையில் நடப்பவன் என்றும் மற்றவர்கள் எல்லாம் இடுக்கமான வாசல் வழியை நடப்பவர்கள் என்றும் அல்லவா நினைத்தேன். எல்லாரும்தான் பரலோகம் போகப்போறோமே எப்படி நடந்தா என்ன?
கர்த்தருடைய புதிய பூமியில் மாம்சமான யாவரும் அவருடைய மகிமையை காண்பார்கள்.
நான் சகல ஜாதியாரையும் பாஷைக்காரரையுங் கூட்டிச்சேர்க்குங்காலம் வரும்; அவர்கள் வந்து என் மகிமையைக் காண்பார்கள். (ஏசாயா 66:18)
இந்த வசனத்தை இரட்சிப்புக்கு உபயோகபடுத்த முடியாது. ஏனென்றால் அதே இடத்தில் அவரை தொழுதுகொள்ளுகிறவர்கள் நரகத்தில் உள்ள மனிதர்களை பார்ப்பார்கள் என்று இருக்கிறது
அப்பொழுது மாதந்தோறும், ஓய்வுநாள்தோறும், மாம்சமான யாவரும் எனக்கு முன்பாகத் தொழுதுகொள்வார்களென்று கர்த்தர் சொல்லுகிறார். அவர்கள் வெளியே போய் எனக்கு விரோதமாய்ப் பாதகஞ்செய்த மனுஷருடைய பிரேதங்களைப் பார்ப்பார்கள்; அவர்களுடைய பூச்சி சாகாமலும், அவர்களுடைய அக்கினி அவியாமலும் இருக்கும்; அவர்கள் மாம்சமான யாவருக்கும் அரோசிகமாயிருப்பார்கள்.(ஏசாயா 66:23-24)
கொலை செய்யப்பட்டு (மரித்து) உயிரோடு எழுப்பட்டவன் நரகத்திலே தள்ளப்படுவானா? உங்களுடைய கிருஸ்தவத்திலே ஒப்புகொள்வீர்களா?
//அப்படின்னா பழைய ஏற்பாட்டையே வச்சுக்கலாமா? ஆனா பழைய ஏற்பாட்டிலும் இயேசு வாறாரே. அதற்கு என்ன செய்யப்போறீ்ங்க. மீட்பர் ஒருவரை அனுப்ப போவதாக தேவன் ஆதாமுக்கும் ஏவாளுக்கும் வாக்கு கொடுத்தாரே. அப்ப அதையும் எடுத்திடலாமா?//
நல்ல கேள்வி சகோ. கொல்வின். காவல் கோபுரக்காரர்கள் அதை முதலிலே செய்துவிட்டனர். இப்படி கிருஸ்தவர்கள் கேள்விகேட்கிறார்கள் என்று தெரிந்ததால் New World Transalation என்று ஒரு சாத்தான் வேதம் எழுதிவைத்து இருக்கிறார்கள். இவர்கள் நாங்கள் காவல் கோபுரத்தை சேர்ந்தவர்கள் இல்லை என்று மறுத்தாலும், இவர்கள் சொல்லுகிற குப்பை எல்லாம் அங்கிருந்து இறக்குமதி செய்யப்பட்டது என்பதை மறுக்கமுடியாது.
இயேசு கிறிஸ்து மகிமையே இல்லாமல் பூலோகத்திற்கு வந்து மகிமையை சம்பாதித்தது போல ஒரு மாயையை உருவாக்கிக்கொண்டு இருந்தார்கள் ஆகையால் தான் இவர்கள் "Pre-Incarnate" கிறிஸ்துவை பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள நான் அவர்களிடம் பழைய ஏற்பாட்டு பக்தர்களோடு தேவன் முகமுகமாய் பேசினார், தேவனை நேரடியாய் தரிசித்தார்கள், தேவன் சிநேகிதன் போல பேசினார் என்றெல்லாம் வருகிறது ஆனால் புதிய ஏற்பாட்டில் "தேவனை ஒருவனும் ஒருபோதும் கண்டதில்லை" என்று வாசிக்கிறோம். அப்போ பழைய ஏற்பாட்டு பக்தர்கள் யாரைக்கண்டார்கள்? என்று கேட்டேன் பதில் இல்லை!
ஜீவ புஸ்தகத்தை குறித்தும், இரண்டாம் மரணத்தை குறித்தும் எழுதிய கேள்விகளுக்கும் பதில் சொல்லமாட்டார்கள்.