Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: மிஷனரி பணி தேவையா..?


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2816
Date:
மிஷனரி பணி தேவையா..?
Permalink  
 


இந்த பதிவின் ஒரு குறிப்பிட்ட பின்னூட்டத்தில் பின்வருமாறு எழுதி இந்து மக்களின் உணர்வுகளைப் புண்படுத்திவிட்டேன் என்பது தான் (மேசியாவின்) எதிரி அடியேன் மீது வைத்திருக்கும் குற்றச்சாட்டு:

// சில வெள்ளை எலிகள் திருச்செந்தூரில் வந்து சிவப்புப் பட்டுடுத்திய மிருகப் பெருமானை தரிசித்து திருச்செந்தூர் கோவிலைக் குறித்து சிலிர்ந்துக்கொண்டதை இன்று தொலைக்காட்சியில் பார்த்தேன்; சுனாமியையே தடுத்து நிறுத்திய வல்லமைமிக்க தெய்வமாம் அது; அதுபோல எதைவேண்டுமானாலும் நம்பி ஏற்றுக்கொள்வது மேற்கத்திய நாடுகளுக்கு மாத்திரமே பொருந்தும் என்பதையும் தமிழர்களை அவ்வளவு எளிதில் யாரும் வளைத்துவிடமுடியாது என்பதையும் (மேசியாவின்) எதிரிகளுக்கு உணர்த்தியாகவேண்டும்.//

இவர்களை (மேசியாவின்) எதிரிகள் என்றழைப்பதற்கான காரணமே இப்போது தான் வெளிப்படையாக விளங்கியிருக்கிறது;அதாவது இவர்கள் எனது முன்னோடிகளை மிஷிநரிகள் என்றும் விஷநரிகள் என்றும் குறிப்பிட்டது தவறல்ல; ஆனால் போகிறபோக்கில் நான் எழுததுப் பிழைபோல செய்த ஒரு சிறு (கொக்கி) தவறு கோவை மாவட்டத்தில் மதக் கலவரத்தையே தூண்டிவிடுமாம்; இவனைப் போன்ற மதியீனர்களுடன் விவாதிக்க நேருகிறதே என்று வெட்கப்படுகிறேன்; இவையெல்லாமே கிறிஸ்துவைப் பற்றும் என்னுடைய புனிதமான விசுவாசத்துக்கான போராட்டமே என்பதை எனக்கன்பான வாசகர்கள் நன்கு அறிவார்கள்.

இதை முன்னிட்டு இந்தியாவில் பெருங் கலவரம் வெடிப்பதை தடுக்கும் நோக்கத்துடன் நம்முடைய தளத்தின் சகோதரி கோல்டா அவர்கள் தன்னார்வத்துடன் செயல்பட்டு (மேசியாவின்) எதிரியான எம்மெல்லெம் பார்ட்டியிடம் என் சார்பாக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டிருக்கிறார்கள்.

தொடர்புடைய பதிவு:

Request to SoulSolution- சோல்சோல்யூஷனிடம் ஒரு மன்றாட்டு...!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

பெரேயன்ஸ்:

[எனக்கு ஒன்றும் தெரியாது!! இது சோல் சொல்யூஷன் சகோதரை தரை குறைவாக எழுத நினைத்து வம்பை விலைக்கு வாங்கிய செயலாகும்!!]

ஆமா, உங்க சோல் ஒரு அன்னை தெரசா. அவரை ஒன்றும் சொல்லிடக் கூடாது! அவரும் தான் என்னென்னவோ சொல்கிறார். அதெல்லாம் உங்க கண்ணுக்குப் படவில்லையா. நீங்க அவர் பேச்சை இரசித்து சில சமயம் கை கொட்டி மகிழ்வதுதான் நல்லா தெரியுதே!

இப்படியெல்லாம் மிரட்டல் விடுத்தால் -துஷ்டனைக் கண்டால் தூர விலகு - என்று யாரும் உங்களிடம் பேச மாட்டாங்க. அதைத்தான் விரும்புகிறீர்களா??

இப்படி ஒரு இந்து கடவுளுக்கு வக்காலத்து வாங்கணுமா?

 



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

சோல்:

--

மிஷனரிப்பணிக்கு வந்தவர்களை வெள்ளை எலி சொன்னாலும் சொல்லுவாய். ஒன்றும் கவலைப்படாதே. நாளையே கோவை இந்து முன்னனியைச் சேர்ந்தவர்களிடமிருந்து உனக்கு 'செய்தி'வரும். அவர்களை எப்படி சமாளிக்க வேண்டும் என்று யோசித்துக்க்கொள். முருகப்பெருமானுக்குத்தான் மிருகப்பெருமான் என்று தவறாக பதித்துவிட்டேன் என்று சப்பைகட்டுவாய் என்றும் தெரியும். யார் விபச்சாரி என்பதும் உனக்கு கூடிய விரைவில் தெரியும்.

எனக்கோ உனக்கோ மரணம் நிச்சயமே. அது யாருடைய கையிலும் இல்லை. தேவன் கையில் உள்ளது. நீ எல்லாவற்றிலும் சுகமாய் வாழ்ந்து இரு. நாளை உன்னிடம் இந்து முன்னனியினர் விசாரிப்பார்கள்.... என்னதான் சொல்லி சமாளிக்கப்போகிறாய் என்று ஆவலாக இருக்கிறது.

--

 

இப்படி நீங்க ”போட்டு விட்டது” உண்மையானால், இது மிகவும் வருந்தத்தக்கது.சிறு பிள்ளைத்தனமானது. கோழைத்தனமானது.

என்ன பெரேயன்ஸ், இதற்கு நீங்களும் உடந்தையா??

இதுதான் காட்டிக் கொடுக்கும் யூதாஸின் குணம்.

 



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 258
Date:
Permalink  
 

இடையான்குடி, நாசரேத், மெய்ஞானபுரம், பாலையங்கோட்டை, நாகர்கோவில், திருனெல்வேலி, மதுரை, வேலூர், சென்னை என பல இடங்களில் இன்னைக்கு கிறிஸ்துவை மக்கள் அறிந்ததுக்கு மிஷனரிகள் தான் காரணம். சீகன்பால்கு ஆரம்பகால முயற்சி எடுக்கவில்லையென்றால் இன்றைக்கு வேதம் நம் கையில் நிச்சயம் கிடைத்திருக்காது. இவர்களை நான் அளவுக்கு மீறி யெல்லாம் புகழவில்லை அவர்களை மதிக்கிறேன் அவ்வளவுதான், உங்களை போன்றவர்கள் இவ்வளவு மோசமாக தூற்ற அவர்கள் அப்படி என்ன செய்தார்கள். சுவிஷேஷ‌ம் அறிவிக்க‌வில்லை என‌ அபாண்ட‌மாக‌ சொல்லாதீர்க‌ள், அப்ப‌குதிக‌ளில் வாழும் வ‌ய‌தான‌வ‌ர்க‌ளை கேளுங்க‌ள் அவ‌ர்க‌ள் சொல்வார்க‌ள் மிஷ‌ன‌ரிக‌ள் என்ன‌ செய்தார்க‌ள் என‌. இப்ப‌டி எதையுமே அறின்துகொள்ள‌ ம‌ன‌மில்லாம‌ல் எதையாவ‌து தூற்ற‌க்கூடாது. 



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 258
Date:
Permalink  
 

//திரு ஜோசப் அவர்களே, பவுல் ஓடியதற்கு காரனங்கள் இருக்கிறது:

அப்போஸ்தலர் 9:15 அதற்குக் கர்த்தர்: நீ போ; அவன் புறஜாதிகளுக்கும் ராஜாக்களுக்கும் இஸ்ரவேல் புத்திரருக்கும் என்னுடைய நாமத்தை அறிவிக்கிறதற்காக நான் தெரிந்துகொண்ட பாத்திரமாயிருக்கிறான்.

I கொரிந்தியர் 9:16 சுவிசேஷத்தை நான் பிரசங்கித்துவந்தும், மேன்மைபாராட்ட எனக்கு இடமில்லை; அது என்மேல் விழுந்த கடமையாயிருக்கிறது; சுவிசேஷத்தை நான் பிரசங்கியாதிருந்தால், எனக்கு ஐயோ.

I தீமோத்தேயு 2:7 இதற்காகவே நான் பிரசங்கியாகவும், அப்போஸ்தலனாகவும், புறஜாதிகளுக்கு விசுவாசத்தையும் சத்தியத்தையும் விளங்கப்பண்ணுகிற போதகனாகவும் நியமிக்கப்பட்டிருக்கிறேன்; நான் பொய் சொல்லாமல் கிறிஸ்துவுக்குள் உண்மையைச் சொல்லுகிறேன்.

II தீமோத்தேயு 1:11 அதற்கு நான் பிரசங்கியாகவும், அப்போஸ்தலனாகவும், புறஜாதியாருக்குப் போதகனாகவும் நியமிக்கப்பட்டேன்.

இதை உங்களிடமோ என்னிடமோ அல்லது நீங்கள் மிகவும் அதிகமாக புகழும் மிஷனரிகளிடமும் சொல்லப்படவில்லை!! மிஷனரிகள் அவர்களின் சொந்த பிரயாசத்தினால் தான் பவுலை போலவோ, மற்ற அப்போஸ்தலர்கள் போலவோ வெற்றி பெற முடியவில்லை!! வேதம் முழுவதுமாக எழுதப்படும் வரையில் தான் அப்போஸ்தலர்கள், அப்போஸ்தலர்களால் நேரடியாக கைகள் வைக்கப்பட்டு அனுப்பட்டவர்கள் (தீமோத்தேயு, ஆக்கிலா, ப்ரிசில்லா போன்றோர்) ஊழியம் செய்தார்கள்!! அதன் பின் வேத வசனங்கள் முழுமையாக கிடைத்த பிறகு அப்போஸ்தலர்கள் போலவோ, அவர்களால் கைகள் வைக்கு அனுப்பட்டவர்கள் போல் யாரும் இருக்க முடியவில்லை!! ஏனென்றால் இந்த பணிக்கு நியமிக்கப்பட்டிருந்தவர்கள் "நித்திரை" அடைந்தார்கள்!! அந்த மனிதர்கள் (கிறிஸ்துவினால் நியமிக்கப்பட்ட அப்போஸ்தலர்களும், அவர்கள் கைகள் வைத்து அனுப்பியவர்களும்) நித்திரை (மரித்த) அடைந்தபிறகு, சாத்தான் களைகளை (துருபதேவங்களை) நிலத்தில் (சபைகளில்) கொண்டு வந்தான்!! சுத்தமான வேத எழுத்துக்கள் காப்பி எடுக்கப்படும் போது வார்த்தைகள் சேர்த்துக்கொள்ளப்பட்டது, உண்மை மறைக்கப்பட்டு, பிசாசின் ஊழியர்கள் தந்திரமாக துருபதேசங்களை நுழைக்க வெற்றி கண்டார்கள்!! இதை தான் மத்தேயு 13ம் அதிகாரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது!!

இப்படி கலப்படம் நிறைந்த போதனைகள், இடையில் வேதம் மறைக்கப்பட்டு, எரிக்கப்பட்டு, நசுக்கப்பட்டு உருமாறி வந்ததை வைத்து, நாங்களும் அப்போஸ்தலர்கள் தான், நாங்களும் ஊழியர்கள் தான் என்று கிளம்பியவர்கள் தான் நீங்கள் அன்பாக புகழும் இந்த மிஷனரிகள்!! துவக்கத்தில் நிச்சயமாக சுயநலமற்று தான் இவர்கள் வந்தார்கள் பணி செய்தார்கள், ஆனால் சுவிசேஷம் சொன்னார்கள் என்பதை ஒத்துக்கொள்ள முடியாது!! சேவை செய்தார்கள், பள்ளிகள் திறந்தார்கள், ஆஸ்பத்திரிகள் திறந்தார்கள், ஆனால் சுவிசேஷம் சொல்லவில்லை!! சுத்தமான சத்தியத்தை போதிக்கவும் இல்லை!! ஏனென்றால் அவர்கள் அதற்கு நியமிக்கப்பட்டவர்கள் அல்ல!! அவர்களின் சேவை பணியை நான் கொச்சைப்படுத்த மாட்டேன், ஆனால் அவர்கள் சத்தியத்தை போதித்தார்கள் என்று நீங்கள் சொல்லுவதை நான் எதிர்க்கிறேன்!!//

பிரசங்கியாகவும் அப்போஸ்தலனாகவும் புறஜாதியானவருக்கு போதகனாகவும் நியமிக்கப்பட்டேன் என்று பவுல் சொல்லும் வசனத்தை காண்பித்திருக்கிறீர்கள் அப்ப புறஜாதியார் என்பவர்கள் பவுல் இருந்த காலத்தில் உள்ளவர்கள் தானா, அதுக்கப்புறம் உள்ளவங்களுக்கும் மற்றவர்களுக்கும் அந்த நற்செய்தி தேவையில்லையா, நீங்க சொல்றபடி பாத்தா கிறிஸ்துவின் போதனைகள் அதிக பட்சம் 3ம் நூற்றாண்டோடவே ஆசியா மைனரிலும் ஐரோப்பாவின் சில பகுதிகளோடேயும் முடங்கி போயிருக்கும், உங்க கையில் நீங்க வச்சு பிரிச்சு மேஞ்சுகிட்டு இருக்கிற வேதம் கிடைத்தே இருக்காதே. இப்படி பைபிள் ஒரு சாராருக்கு மட்டுமே சொல்லப்பட்டிருக்கு என்ற பாணியில் நீங்கள் சொன்னால் அப்புறம் எதுக்கு சார் நீங்க அதை ஆராய்ச்சி பண்ணுறீங்க, அதனால யாருக்கு என்ன லாபம். எல்லாருக்கும் மீட்பு என்றால் எங்களோடு நீங்க மோதவேண்டியதே இல்லையே.



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2816
Date:
Permalink  
 

golda wrote:

//பார்வோனின் முகத்தை இனி காண மாட்டேன் என மோசே கர்ஜித்தது என் நினைவுக்கு அப்போது வந்தது//

பாச்சானுங்களை பார்வோன் ரேஞ்சுக்கு உயர்த்துறீங்களே!!!


 எதிரியைக் குறைத்து மதிப்பிடுவதும் தோல்விக்கான வலுவான காரணங்களில் ஒன்றாகும்;தோழி கோல்டா அவர்கள் முற்போக்குவாதி என்பதால் ஒரு உதாரணத்தைக் கூறுகிறேன்; நான் மாணவனாக இருந்தபோது பார்த்த நாயகன் திரைப்படத்திலிருந்து...

பெரிய பெரிய எதிரிகளையெல்லாம் சமாளித்து பந்தாடிய நாயகன் - சட்டப் போராட்டத்திலிருந்தும் கூட தப்பித்த வேலுநாயக்கர் மனநிலை பாதிக்கப்பட்டவன் போலிருக்கும் ஒரு சாதாரண மனிதன் கையால் சுடப்பட்டு இறந்துபோவார்; அதுபோலவே மாற்றான் வலியறிந்து மோதுவதும் பஞ்ச தந்திரங்களையும் அறிந்திருப்பதும் எதிரி வரும் வேகத்தைக் க‌ணித்து தற்காத்துக் கொள்ளுவதும் தமிழர் பண்பாடாகும்.

சில வெள்ளை எலிகள் திருச்செந்தூரில் வந்து சிவப்புப் பட்டுடுத்திய மிருகப் பெருமானை தரிசித்து திருச்செந்தூர் கோவிலைக் குறித்து சிலிர்ந்துக்கொண்டதை இன்று தொலைக்காட்சியில் பார்த்தேன்; சுனாமியையே தடுத்து நிறுத்திய வல்லமைமிக்க தெய்வமாம் அது; அதுபோல எதைவேண்டுமானாலும் நம்பி ஏற்றுக்கொள்வது மேற்கத்திய நாடுகளுக்கு மாத்திரமே பொருந்தும் என்பதையும் தமிழர்களை அவ்வளவு எளிதில் யாரும் வளைத்துவிடமுடியாது என்பதையும் (மேசியாவின்) எதிரிகளுக்கு உணர்த்தியாகவேண்டும்.

மேற்கத்திய நாடுகளிலிருந்து சிதறி வந்து வீழ்ந்ததே இந்த நூதனமான போதனைகள்;அவர்களின் பிதாமகன் இரஸல் மாத்திரமே;மெய்யாகவே அந்த ஆள் பெரிய சாதனையாளர் தான்; இல்லாவிட்டால் விமானப் படை அதிகாரிகளையே வளைத்துபோடுவாரா..? ஆம் இன்றைக்கும் இயேசுவானவரை தெய்வமாகத் தொழுது சேவிப்பதை முட்டாளதன்மாகவும் வெறும் சடங்காகவும் கருதும் அறிவுஜீவிகளுக்கு யெகோவா சாட்சிகள் சமுதாயமே கலங்கரை விளக்காக விளங்குகிறது;யெகோவா சாட்சிகளின் போதனைக்கு ஆதாரமாக விளங்குவது இரசல் போதித்தவையும் அவருக்கு பின்னணியிலிருப்பது ஏரியஸ் என்பாரின் போதனைகளுமே என்பது மொத்த சாராம்சமாகும்;இவர்கள் உலகளாவிய அமைப்பினராவர்;இவர்களெல்லாம் வெறும் பாச்சாக்களும் அல்ல,சிறுமந்தையும் அல்ல என்பதை தோழி கோல்டா அவர்கள் அறிந்திருக்கவேண்டும்.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2816
Date:
Permalink  
 

joseph wrote:
இவர்களது doctrines சோடு மோதுவதற்கெல்லாம் எனக்கு அந்தளவு பெரிய அறிவு இல்லை எனக்கு தெரிந்த "மிஷனரி பணி தேவையா" என்பதில் தான் இவர்களோடு மோதிக்கொண்டிருக்கிறேன். ஏனெனில் மிஷனரி பணி தேவையா/தேவையில்லையா என்பதில் முழு சத்தியமுமே அடங்கிவிடுகிறது.

 நண்பர் ஜோசப் அவர்களின் நிலைப்பாடு மிக அருமையாகவும் எளிமையாகவும் என்னுடைய எண்ணத்துக்கு இசைவாகவும் இருக்கிறது; நண்பர் எப்படி மிஷினரிப்பணி தேவையா என்பதை தன்னுடைய களமாக எடுத்துக்கொண்டுள்ளாரோ அதேபோல நானும் "இயேசுவானவர் தொழத்தக்க தெய்வமா..?" என்பதை மட்டுமே எனது களமாகக் கொண்டுள்ளேன்; மற்ற எதைக்குறித்தும் எனக்கு அறிய விருப்பமில்லை அல்லது அவசியமில்லை; எனவே அதில் எனக்கு பிரச்சினையுமில்லை; இந்த ஒன்றில் எல்லாம் அடங்கிவிடும்; யாக்கோபு எழுதுவது போல பத்து கற்பனைகளில் ஒன்றை மீறினவன் அனைத்தையும் மீறியவனாகக் கருதப்படுவானே..? அதேபோல கிறித்துவைக் குறித்த அறிவில்லாதவன் எவ்வாறு பாவம், மரணம், நியாயத்தீர்ப்பைக் குறித்து அறிந்திருக்கமுடியும்..?

  • "எப்படியெனில், ஒருவன் நியாயப்பிரமாணம் முழுவதையும் கைக்கொண்டிருந்தும், ஒன்றிலே தவறினால் எல்லாவற்றிலும் குற்றவாளியாயிருப்பான்."(யாக்கோபு.2:10)

அப்படியானால் நண்பர் ஜோசப் புதியதொரு திரியை ஆரம்பித்து அதில் அப்போஸ்தலருக்கும் அவர்களைத் தொடர்ந்துவந்த சீர்திருத்தகால மிஷினரிகளுக்கும் இன்னும் தற்கால மிஷினரிகளுக்குமான அடிப்படையான ஒற்றுமை வேற்றுமைகளை ஆய்வு கட்டுரை பாணியில் எழுதவேண்டும்; ரொம்ப ஆராய்ச்சி சைட்டேஷன் & ரெஃபரன்ஸ் என்றெல்லாம் போகவேண்டாம்; அதையெல்லாம் நம்முடைய பக்கத்து வீட்டுக்காரர்கள் இரசிக்கமாட்டார்கள்; ஆய்ந்தறிய வேண்டியதும் அறிவிக்கவேண்டியதுமான உடனடி காரியம் என்னவென்றால் அப்போஸ்தலர்கள் எதை நற்செய்தியாகப் போதித்தார்கள்;சீர்திருத்த காலத்து மிஷினரிகள் அதில் எதை மாற்றாக போதித்தார்கள் எனப்தை மட்டுமாவது ஆராயவேண்டும்;அன்றும் இன்றும் என்றும் செய்தி ஒன்றுதான்,யோவான்.3:16 மற்றும் 1:12.அதில் அன்றும் இன்றும் எந்த மாற்றமும் இருப்பதாக நமக்குத் தெரியவில்லை.

  • "தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்."(யோவான்.3:16)
  • "அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்." (யோவான்.1:12)


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 258
Date:
Permalink  
 

ஞானவான்கள் ஆகாயமண்டலத்தின் ஒளியை போலவும், அனேகரை நீதிக்கு உட்படுத்துகிறவர்கள் நட்சத்திரங்களை போலவும் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் பிரகாசிப்பார்கள்

தானியேல் 12:3

 

1.கரையேறி உமதண்டை
நிற்கும்போது ரட்சகா
உதவாமல் பலனற்று
வெட்கப்பட்டுப் போவேனோ 

ஆத்மா ஒன்றும் இரட்சிக்காமல்
வெட்கத்தோடு ஆண்டவா
வெறுங்கையனாக உம்மைக்
கண்டுகொள்ளல் ஆகுமா?

2.ஆத்துமாக்கள் பேரில் வாஞ்சை
வைத்திடாமல் சோம்பலாய்க்
காலங்கழித்தோர் அந்நாளில்
தூக்கிப்பார் நிர்ப்பந்தராய்

3.தேவரீர் கை தாங்க சற்றும்
சாவுக்கஞ்சிக் கலங்கேன் 
ஆயினும் நான் பெலன் காண
உழைக்காமற் போயினேன்

4.வாணாள் எல்லாம் வீணாளாகச்
சென்று போயிற்றே ஐயோ
மோசம் போனேன் விட்ட நன்மை
அழுதாழும் வருமோ?

5.பக்தரே உற்சாகத்தோடு
எழும்பிப் பிரகாசிப்பீர்
ஆத்துமாக்கள் யேசுவண்டை
வந்துசேர உழைப்பீர் 



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

//பார்வோனின் முகத்தை இனி காண மாட்டேன் என மோசே கர்ஜித்தது என் நினைவுக்கு அப்போது வந்தது//

பாச்சானுங்களை பார்வோன் ரேஞ்சுக்கு உயர்த்துறீங்களே!!!



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 258
Date:
Permalink  
 

கோல்டா சிஸ்டர், இதுவரைக்கும் அவர்களது பதில்களை இங்கு கொண்டுவந்ததுக்கு நன்றி, இவன் என்ன பெரிய இவனா, இவனா போய் பார்த்துக்கொள்ளமாட்டானா என்று கூட உங்களுக்கு சலிப்பு வந்திருக்கலாம், நான் அதை தவறாக எடுத்துக்கொள்ளவில்லை. இவர்களது தளத்திற்கு நான் போகமாட்டேன் என்பது பிரசவ வைராக்கியம் அல்ல, நிரந்தரமாக இருக்கவேண்டும் என நான் எடுத்த முடிவு. பார்வோனின் முகத்தை இனி காண மாட்டேன் என மோசே கர்ஜித்தது என் நினைவுக்கு அப்போது வந்தது, இனி அந்த எகிப்தில் (அவர்கள் தளத்தில்) நான் காலை வைக்கமாட்டேன். 

இப்போதும் என் நிலைப்பாடு இதுவே, இவர்களது doctrines சோடு மோதுவதற்கெல்லாம் எனக்கு அந்தளவு பெரிய அறிவு இல்லை எனக்கு தெரிந்த "மிஷனரி பணி தேவையா" என்பதில் தான் இவர்களோடு மோதிக்கொண்டிருக்கிறேன். ஏனெனில் மிஷனரி பணி தேவையா/தேவையில்லையா என்பதில் முழு சத்தியமுமே அடங்கிவிடுகிறது.

தன் பாவ நிலையை உணர்ந்தவனுக்கு தான் மீட்பின் அருமை தெரியும், அதற்கென செலுத்தப்பட்ட கிரையம் என்ன என தெரியும், யார் தன்னை மீட்டுக்கொண்டார் என தெரியும், அவருக்கு அடிமை என தெரியும், அவர் கடைசியில் என்ன செய்ய சொன்னார் என்று தெரியும், இதன் முக்கியத்துவத்தை உணராதோர் அதெல்லாம் தேவையில்லை என்பர், அன்னியரின் பாளையத்தில் கண்ட கொள்ளைப்பொருளை தன் மக்களிடம் சென்று அறிவிப்பது தனது கடமை என சொன்ன அந்த குஷ்டரோகியாகவே நான் இருக்க விரும்புகிறேன். 



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 258
Date:
Permalink  
 

ஆகா அருமை திரு.பெரெயன்ஸ் அவர்களே, மிஷனரிகள் சேவை மட்டும் தான் செய்தார்கள் சுவிஷேஷம் அறிவிக்கவில்லை என்கிறீர்கள், நீங்கள் மிஷனரிகளின் பணியை முழுமையாக அறியவில்லை என்பது இதில் விளங்குகிறது, இங்குள்ள ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புகள் கூட ஒத்துக்கொள்ளும் ஒரு விஷயம் என்னவென்றால் மிஷனரிகள் சேவை செய்யும் நோக்கில் வந்து சுவிஷேஷம் தான் அறிவித்தார்கள் என்பதை. உங்களிடமோ, என்னிடமோ சொல்லப்படவில்லை, இப்படி வேதாகமத்தில் இது இவருக்கு சொன்னது, அது அவருக்கு சொன்னது என பிரித்து மேய்ந்துகொண்டிருந்தால் கடைசியில் அதில் பின்பற்ற என ஒன்று கூட இருக்காது, ஏன் பத்து கட்டளைகள் கூட இஸ்ரவேலருக்கு சொல்லப்பட்டது தான் அப்புறம் எதற்கு சார் எல்லாரும் அதை பின்பற்றனும். இந்த நாட்டின் சட்ட வரைவு உண்டாக்கப்பட்டது கூட 1950 இல் வாழ்ந்தவருக்கு மட்டும் தானா? அப்ப நமக்கு எல்லாம் அது தேவையில்லையா? இயேசு சொன்ன மலை பிரசங்கம் கூட அந்த மக்களுக்கு மட்டும் தான் நமக்கு இல்லை என்பீர்கள் போல. அவர் சொன்னது எல்லாருக்கும் இல்லை ஒரு சிலருக்கு மட்டும் தான் என நீங்கள் சொன்னால் அவர் உலகம் முழுவதற்கும் ரட்சகராக முடியாது.இப்போது தெரிகிறதா யார் அவரை மட்டுப்படுத்துகிறார்கள் என‌? 

மிஷனரிகள் வெற்றி பெற முடியவில்லை

1) தன் கணவரை கொன்ற மக்களிடம் மிஷனரி பணி செய்ததால் தான் ஜிம் எலியட்டின் மனைவிக்கு அந்த பழங்குடி இனத்தை முழுவதும் ரட்சிப்புக்குள் கொண்டுவர முடிந்தது.

2) ஆத்தும தாகம் இருந்ததால் தான் செத்துக்கொண்டிருந்த தொழு நோயாளிகள் இடையே போய் ஊழியம் செய்தார் பாதர் டாமியன் என்பவர்

3) சுவிஷேஷம் அறிவிக்கும் தாகம் இருந்ததால் தான் இருண்ட கண்டத்தை டேவிட் லிவிங்ஸ்டனால் சந்திக்க முடிந்தது (இங்கு எந்த அப்போஸ்தலரும் வரவில்லை)

இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம். இது வெற்றி பெற வில்லை என நீங்கள் நினைத்தால் வெற்றிக்கான எந்த அளவுகோலை நீங்கள் வைத்துள்ளீர்கள் என தெரியவில்லை. அவரவர் வேலை செய்ததுக்கு ஏற்ற கூலியை ஆண்டவர் அவரவருக்கு கொடுப்பார்.

முழுமையான அஃதாவது மறைக்கப்படாத, எரிக்கப்படாத ஆதி வேதாகம பிரதிகலை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? அப்படியே நீங்கள் அதை வைத்திருந்தாலும் அது உண்மையானது நம்பகமானது என்பதற்கு என்ன உத்தரவாதம்?

//நற்செய்தி எனக்கு தெரியவில்லை என்று குற்றம் சாட்டுகிறீர்களே தவிர, நற்செய்தி என்றால் என்னவென்று எழுதுங்களேன், பார்க்கலாம்!! அதன் பின் நான் எழுதுகிறேன்!!//

பாவத்தில் உழன்ற மனுக்குலத்தை மீட்க ஆண்டவர் வந்தது நற்செய்தி, நம்மை போன்ற மனிதராகி, நம்மைப்போல வாழ நேர்ந்தும் பாவ கறை இல்லாமல் வாழ முடியும் என காண்பித்தது நற்செய்தி, நமது பாவங்களுக்காக ரத்தம் சிந்தி பரிகார பலியாக தன்னை ஒப்புக்கொடுத்தது நற்செய்தி, மரணத்தை வென்றது நற்செய்தி, பரத்துக்கு ஏறிச்சென்று மறுபடியும் இவ்வுலகை நியாயம் தீர்க்க வருவேன் என்றது நற்செய்தி. உலகம் முழுவதும் இதை அறிவியுங்கள் என்றது நற்செய்தி.

சத்தியம் சொல்லுவது ஓநாயா? சூப்பர் சார், சத்தியத்தை அறிவிப்பவர்களுக்கு இந்த பட்டத்தை பிசாசு தான் கொடுப்பான் ( உங்களை சொல்லல). அப்ப நீங்க எல்லாம் ஆட்டுக்குட்டியா சார்? உங்களிடம் இனி பேச என்ன இருக்கிறது. கைகளை வைக்க அவசரப்படாதே என்பதற்கும் கைகளை வைக்கவே வைக்காதே என்பதற்கும் வேறுபாடுகள் உண்டே சார். ஊழியத்துக்கு என்று ஒருவரை அபிஷேகித்து அனுப்பும் போது அவர் அதை செய்ய தகுதியுள்ளவர்தானா என்பதை அறிந்து உறுதிசெய்துகொண்டு அனுப்பு என்பதை தான் அவ்வாறு சொல்லியுள்ளாரேயன்றி கைகளை நீ வைக்கவே வைக்காதே என்று சொல்லவில்லை.

இப்படி நேரடி அர்த்தம் உள்ளதுக்கே இந்த குழம்பு குழம்புகிறீர்கள். ஊழியத்துக்கு அனுப்பப்பட்டவர்கள் அப்போஸ்தலர்கள் மட்டுமேயன்றி நாங்கள் அல்ல என்ற அர்த்தத்தில் மட்டும் வேத ஆராய்ச்சி செய்தால் இப்படி தான் இருக்கும்.



-- Edited by joseph on Friday 26th of August 2011 01:17:48 PM

__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2816
Date:
Permalink  
 

/// சுவிஷேஷம் ///

நண்பரே, சுவிசேஷம் என்பதே சரியான வார்த்தை பயன்பாடு அல்லவா? இன்னும் நற்செய்தி என்றும் தூய தமிழில் சொல்லலாம்.தயவுசெய்து குறைசொல்லுவதாக எண்ணிவிடவேண்டாம்; சுவிசேஷம் எனும் சொல்லைக் குறித்து ஏற்கனவே வேறொரு திரியில் விளக்கியிருக்கிறேன்; அதன்படி இது ஒரு சமஸ்கிருத சொல்லாகும்;இதில் மூன்று முக்கிய பாகங்கள் உண்டு; அதன் பொருளை எளிமைப்படுத்தினால் நற்செய்தி எனும் சொல்லாக இருக்கும்; இனி எது நற்செய்தி என்பதை நம்முடைய பாசத்துக்குரிய (மேசியாவின்) எதிரிகளுக்கு விளக்கிட முயற்சியுங்கள்.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

பெரேயன்ஸின் காமெடியோ காமெடி!!

(அடுத்த பதிலெல்லாம் போஸ்ட் பண்ண மாட்டேன் சகோ ஜோசப் அவர்களே! நீங்களே அங்க போய் பார்த்துக்கோங்க!)

--

டாக்டர் ஜோசப்:
//எல்லார் மேலும் கண்ணோக்கமாயிருந்ததால் தான் போய் அறிவிக்க சொன்னார். அதை நம்புவதால் தான் அறிவிக்க செல்கிறோம். நற்செய்தி என்னவென்று உங்களுக்கு தான் தெரியவில்லை திரு.பெரேயன்ஸ். பவுலும் கூட அக்காலத்தில் ஓடிக்கொண்டே தான் இருந்தார் என்பதை நினைவில் கொள்க‌.//

திரு ஜோசப் அவர்களே, பவுல் ஓடியதற்கு காரனங்கள் இருக்கிறது:

அப்போஸ்தலர் 9:15 அதற்குக் கர்த்தர்: நீ போ; அவன் புறஜாதிகளுக்கும் ராஜாக்களுக்கும் இஸ்ரவேல் புத்திரருக்கும் என்னுடைய நாமத்தை அறிவிக்கிறதற்காக நான் தெரிந்துகொண்ட பாத்திரமாயிருக்கிறான்.

I கொரிந்தியர் 9:16 சுவிசேஷத்தை நான் பிரசங்கித்துவந்தும், மேன்மைபாராட்ட எனக்கு இடமில்லை; அது என்மேல் விழுந்த கடமையாயிருக்கிறது; சுவிசேஷத்தை நான் பிரசங்கியாதிருந்தால், எனக்கு ஐயோ.

I தீமோத்தேயு 2:7 இதற்காகவே நான் பிரசங்கியாகவும், அப்போஸ்தலனாகவும், புறஜாதிகளுக்கு விசுவாசத்தையும் சத்தியத்தையும் விளங்கப்பண்ணுகிற போதகனாகவும் நியமிக்கப்பட்டிருக்கிறேன்; நான் பொய் சொல்லாமல் கிறிஸ்துவுக்குள் உண்மையைச் சொல்லுகிறேன்.

II தீமோத்தேயு 1:11 அதற்கு நான் பிரசங்கியாகவும், அப்போஸ்தலனாகவும், புறஜாதியாருக்குப் போதகனாகவும் நியமிக்கப்பட்டேன்.

இதை உங்களிடமோ என்னிடமோ அல்லது நீங்கள் மிகவும் அதிகமாக புகழும் மிஷனரிகளிடமும் சொல்லப்படவில்லை!! மிஷனரிகள் அவர்களின் சொந்த பிரயாசத்தினால் தான் பவுலை போலவோ, மற்ற அப்போஸ்தலர்கள் போலவோ வெற்றி பெற முடியவில்லை!! வேதம் முழுவதுமாக எழுதப்படும் வரையில் தான் அப்போஸ்தலர்கள், அப்போஸ்தலர்களால் நேரடியாக கைகள் வைக்கப்பட்டு அனுப்பட்டவர்கள் (தீமோத்தேயு, ஆக்கிலா, ப்ரிசில்லா போன்றோர்) ஊழியம் செய்தார்கள்!! அதன் பின் வேத வசனங்கள் முழுமையாக கிடைத்த பிறகு அப்போஸ்தலர்கள் போலவோ, அவர்களால் கைகள் வைக்கு அனுப்பட்டவர்கள் போல் யாரும் இருக்க முடியவில்லை!! ஏனென்றால் இந்த பணிக்கு நியமிக்கப்பட்டிருந்தவர்கள் "நித்திரை" அடைந்தார்கள்!! அந்த மனிதர்கள் (கிறிஸ்துவினால் நியமிக்கப்பட்ட அப்போஸ்தலர்களும், அவர்கள் கைகள் வைத்து அனுப்பியவர்களும்) நித்திரை (மரித்த) அடைந்தபிறகு, சாத்தான் களைகளை (துருபதேவங்களை) நிலத்தில் (சபைகளில்) கொண்டு வந்தான்!! சுத்தமான வேத எழுத்துக்கள் காப்பி எடுக்கப்படும் போது வார்த்தைகள் சேர்த்துக்கொள்ளப்பட்டது, உண்மை மறைக்கப்பட்டு, பிசாசின் ஊழியர்கள் தந்திரமாக துருபதேசங்களை நுழைக்க வெற்றி கண்டார்கள்!! இதை தான் மத்தேயு 13ம் அதிகாரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது!!

இப்படி கலப்படம் நிறைந்த போதனைகள், இடையில் வேதம் மறைக்கப்பட்டு, எரிக்கப்பட்டு, நசுக்கப்பட்டு உருமாறி வந்ததை வைத்து, நாங்களும் அப்போஸ்தலர்கள் தான், நாங்களும் ஊழியர்கள் தான் என்று கிளம்பியவர்கள் தான் நீங்கள் அன்பாக புகழும் இந்த மிஷனரிகள்!! துவக்கத்தில் நிச்சயமாக சுயநலமற்று தான் இவர்கள் வந்தார்கள் பணி செய்தார்கள், ஆனால் சுவிசேஷம் சொன்னார்கள் என்பதை ஒத்துக்கொள்ள முடியாது!! சேவை செய்தார்கள், பள்ளிகள் திறந்தார்கள், ஆஸ்பத்திரிகள் திறந்தார்கள், ஆனால் சுவிசேஷம் சொல்லவில்லை!! சுத்தமான சத்தியத்தை போதிக்கவும் இல்லை!! ஏனென்றால் அவர்கள் அதற்கு நியமிக்கப்பட்டவர்கள் அல்ல!! அவர்களின் சேவை பணியை நான் கொச்சைப்படுத்த மாட்டேன், ஆனால் அவர்கள் சத்தியத்தை போதித்தார்கள் என்று நீங்கள் சொல்லுவதை நான் எதிர்க்கிறேன்!!

அவர்கள் அப்படி என்றால், நவீன அப்போஸ்தலர்கள், நவீன மிஷனரிகள் சுயநலவாதிகள்!! இவர்களிடம் சத்தியமும் இல்லை, சேவை மனப்பக்குவமும் கிடையாது!! காசு ஒன்றையே நோக்கி இவர்களின் பார்வை இருக்கிறது!!

நற்செய்தி எனக்கு தெரியவில்லை என்று குற்றம் சாட்டுகிறீர்களே தவிர, நற்செய்தி என்றால் என்னவென்று எழுதுங்களேன், பார்க்கலாம்!! அதன் பின் நான் எழுதுகிறேன்!!

 

//உலகத்தின் முடிவு பரியந்தமும் உங்களோடிருக்கிறேன் என ஏன் சார் சொன்னார். தீமோத்தேயு ஆக்கில்லா பிரிஸ்கில்லா போன்றோர் மற்றவர்கள் மேல் கை வைத்து இருக்கமாட்டார்களா, நற்செய்தி அறிவிப்பது தொடர் ஓட்டம் தான் சார், ஒருவரது வேலை முடிந்ததும் அடுத்தவர் அதை முன்னெடுக்கவேண்டும். மற்றவர்கள் அறைகுறை என சொல்லுமுன் நீங்க முழுசா முங்கி முத்தெடுத்திட்டீங்களான்னு யோசிங்க. உங்க சகா சீகன் பால்கையே நக்கல் அடிக்கும் போது உங்களுக்கு மற்றவர்களின் தியாகம் அற்பமா தான் தெரியும். அப்ப மர்காஷியஸ், கால்டுவெல், சீகன்பால்கு, ராக்லேண்ட், ஸ்டெயின்ஸ் எல்லாம் அரைகுறைகளும் ஓனாய்களும் என்கிறீர்கள், கலக்கிட்டீங்க போங்க‌.//

கைகளை வைப்பதில் அவசரப்படாதே என்று பவுல் தீமோத்தேயுவிடம் சொல்லியிருக்கிறார்,
1 தீமோத்தேயு 5:22. ஒருவன்மேலும் சீக்கிரமாய்க் கைகளை வையாதே;

கைகளை வைக்கும் அதிகாரம் அப்போஸ்தலர்களுக்கு தான் இருந்தது!! இயேசு கிறிஸ்து அப்போஸ்தலர்களுக்கு அதிகாரத்தை கொடுத்திருந்தார்!! தீமோத்தேயு, ஆக்கில்லா, பிரிஸ்கில்லா போன்றோர் மற்றவர்கள் மேல் கைகளை வைத்து அனுப்ப முடியாது!! நீங்கள் கொடுத்த பெயர்களில் யாரையும் அவர்களின் சுவபாவத்தின்படி அவர்களை ஓநாய் என்று சொல்லவில்லை, மாறாக அவர்கள் சத்தியத்தை தூஷிப்பதாலேயே அவர்கள் ஓநாய்கள்!! அவர்கள் சுவபாவத்தின்படி மிகவும் நல்லவர்கள், ஏன் மிகவும் நல்லவர்கள்!! ஆனால் அவர்கள் சத்தியம் சொல்லுவதை தான் ஓநாய்கள் என்று சொன்னேன், அதில் எந்த மாற்றமும் இல்லை!! தியாகம் என்று வந்துவிட்டால், அதற்கு நீங்களாகவே ஒரு அளவுக்கோல் வைத்துக்கொண்டு இருக்கிறீர்களே, அது எப்படி!! அவர் அவர் தகுதிக்கு, எல்லாருமே தியாகிகள் தான்!!

--



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 258
Date:
Permalink  
 

 

////பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் ஒருவனும் என்னிடத்தில் வரான்" என்ற கிறிஸ்துவின் வார்த்தையை சரியாக புரிந்து கொள்ளாதவன் எப்படி மிஷனரியாக முடியும்.//

 

எல்லாருக்கும் மீட்பு என்ற உங்க கூற்றுப்படி பார்த்தால் எல்லாரையும் தானே அவர் இழுத்துக்கொள்ள நினைப்பதாக தானே அர்த்தம்!! இல்லை செலக்டிவாக சிலரை மட்டும் இழுத்துக்கொள்வாரா?

 எல்லாரையும் அவர் இழுத்துக்கொள்ள சித்தமில்லாதவராக இருந்தால் அப்புறம் உலகமெங்கும் போய் சுவிஷேஷத்தை அறிவிக்க சொல்லவேண்டிய அவசியமென்ன? முதலில் உலகமெங்கும் அவரது சீடர்களால் போக முடிந்ததா? உலகத்தின் கடைசி கோடி வரைக்கும் இன்றைக்கு சுவிஷேஷம் போனதுக்கு மிஷனரி பணி தானே காரணம். உலகத்தின் முடிவு பரியந்தமும் அந்த பணிக்கு துணையாக உங்களோடிருப்பேன் என்று தானே இயேசு சொன்னார். உலகத்தின் முடிவு வரைக்கும் அப்பணி தொடர் ஓட்டம் போல நடைபெற வேண்டும் என்பது தானே அவரது விருப்பமாக இருந்தது. ஆதி அப்போஸ்தலர்கள் ஆக்கில்லா, பிரிஸ்கில்லாள், தீமோத்தேயு ஆகியோர் மேல் வரைக்கும் கைவைத்து அபிஷேகம் பண்ணியதை ஒப்புக்கொள்கிறீர்கள் ஆனால் ஆக்கில்லாவும் பிரிஸ்கில்லாவும், தீமோத்தேயுவும் அதற்கப்புறம் யார் மேலும் கையை வைத்திருக்கமாட்டார்களா என்ன? அதை ஏற்றுக்கொள்ள ஏன் மறுக்கிறீர்கள். 

ஆதி கிறிஸ்தவர்கள் அஃதாவது கி.பி 100 முதல் 200 வரை இருந்தவர்கள் ரோம பேரரசின் கீழே இயேசுவை அறிவித்ததனால் தானே துன்புறுத்தப்பட்டனர். அப்ப அவர்கள் ரத்தம் சிந்தியது வீண் என்கிறீர்களா? அவர்கள் ஆதி அப்போஸ்தலர் காலத்துக்கு அப்புறம் வந்தவர்கள் தானே. சுவிஷேஷம் அறிவிப்பது சீடர்களுக்கு மட்டுமான பணிதான் மற்றவர்களுக்கு அது தேவையில்லை என ஒரு வசனத்தையாவது காட்டுங்கள் பார்ப்போம். எது சுவிஷேஷம் என்கிறீர்களே, இயேசுவின் சிலுவை மரணத்தால் மனுக்குலம் மீட்படைந்தது என்பதும் அவர் பாவத்தின் சம்பளமான மரணத்தை சிலுவையில் மேற்கொண்டார் என்பது தான் சுவிஷேஷம். இத்தனை பெரிய மீட்பை அடைந்த நாம் அதை மற்றோருக்கு அறிவிக்காமல் இருக்க முடியுமா? கவலையற்று இருக்க முடியுமா? 



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 258
Date:
Permalink  
 

"//பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் ஒருவனும் என்னிடத்தில் வரான்" என்ற கிறிஸ்துவின் வார்த்தையை சரியாக புரிந்து கொள்ளாதவன் எப்படி மிஷனரியாக முடியும். அடிப்படை சத்தியங்களான மரணம், உயிர்தெழுதல் என்றால் என்னவென்றே தெரியாமல், இல்லாத ஒரு கற்பனை நரகத்தை உருவாக்கி ஏற்கனவே அதில் ஏராளமானோர் வேதனைப்படுக்கொண்டிருப்பதாகவும் ஏதோ இவர்கள் அங்கு போகவிடாமல் ஜனங்களை "இரட்சிப்புக்குள்" நடத்துவதாகவும் நம்பிக்கொண்டிருக்கும் சுவிசேஷம் ஒரு முட்டாள்தன கேலிக்கூத்து. அதற்காகத்தான் கேட்டேன் முதலில் சுவிசேஷம் என்றால் என்ன என்று பதிவிடுங்கள் என்று. நாங்கள் நம்பும், வேதம் சொல்லும் விசுவாசத்தை எங்கள் விசுவாசம் என்ற பகுதியில் பதித்திருக்கிறோம்.//

 

ஆக்க‌ப்பூர்வ‌மாக‌ விவாதிக்க‌ முன்வ‌ன்த‌மைக்கு ந‌ன்றி. க‌ற்ப‌னையான ஒன்றை ஏன் வேத‌ம் இத்த‌னை முறை அழுத்த‌ம் திருத்த‌மாக‌ சொல்ல‌வேண்டும். ம‌ர‌ண‌ம் ப‌ற்றி என்ன‌ தெளிவை வைத்திருக்கிறீர்க‌ள், ம‌ரித்த‌ நிலை என்ப‌தை இய‌க்க‌ம‌ற்ற‌, செய‌ல‌ற்ற‌ நிலை என்கிறீர்க‌ள் ஆனால் ம‌ரித்த‌ ஆத்துமாக்க‌ள் அத‌ன் பின்ன‌ரும் செய‌ல்ப‌ட்ட‌ நிலை வேத‌த்திலேயே இருக்கிற‌தே, ம‌றுரூப‌ ம‌லையில் இயேசுவோடு காண‌ப்ப‌ட்ட‌ ஆத்துமாக்க‌ள் யார்? 

 

//ஜோசப், இயேசுகிறிஸ்துவை ஜஸ்ட் ஏற்றுக்கொண்டு பாவமன்னிப்பு பெற்றுக்கொண்டால் பரலோகம் கியாரண்டி கிடையாது அதற்கு எவ்வளவு பிரயாசப்பட வேண்டும் என்று உங்களுக்குத் தெரியும். முடிவுப்பரியந்தம் நிலை நிற்கவேண்டும் இல்லையா? இப்போது சொல்லுங்கள் எத்தனை பேர் அதற்குத் தகுதியாவார்கள். விரல் விட்டு எண்ணிவிடலாமில்லையா? அப்ப தகுதி அடையாதவர்கள் கதி? நரகமா? //

பிர‌யாச‌ப்ப‌ட‌வேண்டும் என்று நீங்க‌ளே ஒத்துக்கொள்கிறீர்க‌ள் அல்ல‌வா, முடிவு ப‌ரிய‌ந்த‌ம் நிலைனிற்க‌வேண்டும் தான் அதில் என்ன‌ மாற்ற‌ம். (Even in worldly terms one has to run till the last lap to win a race, can he stop in between and claim the crown? )மரணபரியந்தம் உண்மையாயிரு என்று தானே வேதம் போதிக்கிறது. இடுக்க‌மான‌ வாச‌ல் வ‌ழியாக‌ உட்பிர‌வேசிப்ப‌வ‌ர்க‌ள் வெகு சில‌ர் தானே, கேட்டுக்கு செல்லும் வ‌ழி தான் விசால‌மாக‌ இருக்கிற‌து என‌ வேத‌ம் சொல்கிற‌த‌ல்ல‌வா. நோவா கால‌த்தில் எத்த‌னை பேர் அழிவிற்கு த‌ப்பினார்க‌ள்? 



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

Gentleman Soul:

--

மிஷனரிகளுக்கு சத்தியம் உண்மையில் தெரிந்திருந்தால் வேதத்தைப் புரட்டி "ஏற்றுக்கொண்டால் பரலோகம் இல்லாவிட்டால் நரகம்" என்று முட்டாள்தன சுவிசேஷம் சொல்ல இத்தனை சிரமப்பட்டிருக்க மாட்டார்கள்.

"பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் ஒருவனும் என்னிடத்தில் வரான்" என்ற கிறிஸ்துவின் வார்த்தையை சரியாக புரிந்து கொள்ளாதவன் எப்படி மிஷனரியாக முடியும். அடிப்படை சத்தியங்களான மரணம், உயிர்தெழுதல் என்றால் என்னவென்றே தெரியாமல், இல்லாத ஒரு கற்பனை நரகத்தை உருவாக்கி ஏற்கனவே அதில் ஏராளமானோர் வேதனைப்படுக்கொண்டிருப்பதாகவும் ஏதோ இவர்கள் அங்கு போகவிடாமல் ஜனங்களை "இரட்சிப்புக்குள்" நடத்துவதாகவும் நம்பிக்கொண்டிருக்கும் சுவிசேஷம் ஒரு முட்டாள்தன கேலிக்கூத்து. அதற்காகத்தான் கேட்டேன் முதலில் சுவிசேஷம் என்றால் என்ன என்று பதிவிடுங்கள் என்று. நாங்கள் நம்பும், வேதம் சொல்லும் விசுவாசத்தை எங்கள் விசுவாசம் என்ற பகுதியில் பதித்திருக்கிறோம். 

டாக்டர் அவர்களே, நாங்களும் எதிர்ப்பது உபதேச வேறுபாடுகளையும் துர் உபதேசங்களையும்தான், இப்போது நீங்கள் பின்பற்றிக்கொண்டு வைராக்கியம் பாராட்டுவதுபோல பலமடங்கு அதிகமாக நாங்களும் இருந்தோம் என்பதை தயவு செய்து அறிந்துகொள்ளவும். தனிப்பட்ட தாக்குதல் உபதேசத்துக்குத்தான். உண்மை அறியாமல் நான் செய்யும் தொழிலை தரக்குறைவாகப்பேசும் போது அப்படி பதிய நேரிடுகிறது. 

சத்தியத்தை அறியும்போது (அதற்கு நீங்கள் ஒருவேளை நியமிக்கப்பட்டிருந்தால்) யார் சாக்கடையில் இருக்கிறார்கள் என்பதை உணருவீர்கள். "பாவத்தின் சம்பளம் மரணம்" என்ற ஒரு சாதாரண வசனம்கூட புரியாதவர்களுக்கு உன்னத அழைப்பு, சபைக்கு நியாயத்தீர்ப்பு, உலகத்துக்கு நியாயத்தீர்ப்பு, நித்திய ஜீவன், போன்றவற்றை விளங்க வைக்க முடியாது. 

I தீமோத்தேயு 4:10 இதினிமித்தம் பிரயாசப்படுகிறோம், நிந்தையும் அடைகிறோம்; ஏனெனில் எல்லா மனுஷருக்கும், விசேஷமாக விசுவாசிகளுக்கும் இரட்சகராகிய ஜீவனுள்ள தேவன்மேல் நம்பிக்கை, வைத்திருக்கிறோம்.

இரண்டு வகையான இரட்சிப்பு உண்டு என்ற சத்தியத்தை அறிந்தபோது நாங்களும் ஆச்சரியப்பட்டோம், ஆனால் வேத சத்தியங்களுக்கு அது இசைவாக இருந்ததால், தேவனுடைய அன்பிற்கும், வல்லமை ஞானத்துக்கும் ஏற்றதாக இருந்ததால் ஏற்கவேண்டியதாகிவிட்டது.

யாரையும் கவிழ்த்துப்போடவோ, எங்கள் குழுவுக்கு ஆள் சேர்க்கும் எண்ணமோ துளியும் இல்லை அது எங்களுக்குத் தேவையும் இல்லை. மரணம் பற்றிய தெளிவு வந்தால்தான் மற்றவைகளை ஆராயமுடியும்.

இதில் தெளிவில்லாததால்தான் முதல் கோணல் முற்றிலும் கோணல் என்றாகிவிடுகிறது. இன்றைக்கு கிறிஸ்தவம் என்று சொல்லிக்கொண்டிருக்கும் அமைப்புகளில் உள்ள விகற்பங்களை நீங்கள் மறுக்க முடியாது. அவையெல்லாம் மூன்றாம் நூற்றாண்டிலிருத்தே கெட ஆரம்பித்த சபையின் அங்கங்களே. 

சத்தியத்தை நீங்கள் உணரும்பட்சம் மிஷனரிகளை நீஙகள் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுவது எவ்வளவு முட்டாள்தனம் என்று உணருவீர்கள். அந்த மிஷனரிகளின் 'பணி' போலி சபைகளையும், போலி கிறிஸ்தவத்தையுமே வளர்த்திருக்கிறது. உங்கள் கூற்றுப்படியே 20% என்ன 30% கிறிஸ்தவர்கள் ஆகிவிட்டார்கள் என்று வைத்துக்கொண்டால் கூட (அதில் பவுல் கூறியவண்ணம் ஜீவிக்கிறவர்கள் எத்தனைபேர் என்று உங்களுக்கே தெரியும்) மீதி 70% நீஙகள் சொல்லும் நரகத்துக்குத்தானே. 

ஜோசப், இயேசுகிறிஸ்துவை ஜஸ்ட் ஏற்றுக்கொண்டு பாவமன்னிப்பு பெற்றுக்கொண்டால் பரலோகம் கியாரண்டி கிடையாது அதற்கு எவ்வளவு பிரயாசப்பட வேண்டும் என்று உங்களுக்குத் தெரியும். முடிவுப்பரியந்தம் நிலை நிற்கவேண்டும் இல்லையா? இப்போது சொல்லுங்கள் எத்தனை பேர் அதற்குத் தகுதியாவார்கள். விரல் விட்டு எண்ணிவிடலாமில்லையா? அப்ப தகுதி அடையாதவர்கள் கதி? நரகமா? 

அப்படியென்றால் 99.99% நரகத்துக்குத்தான் தகுதியாவார்கள் உங்கள் கணக்கின்படி. இல்லையென்று சொல்ல முடியுமா? இன்றைக்கு ஜாய்ஸ் மேயர், பென்னி ஹின், போன்கே போன்றவர்கள் நடத்தும் கூட்டங்களில் லட்சக்கணக்கானோர் 'மனந்திரும்புகிறார்கள்'. இது உண்மையில் தேவ சித்தமானால் நீங்கள் கூறிய மல்டி லெவல் கணக்குப்படி இன்று உலகமே அப்போஸ்தலர்கள் போல மாறியிருக்க வேண்டுமே? ஏன் இல்லை.

உங்கள் வைரக்கியம்

 ரோமர்10:2 தேவனைப்பற்றி அவர்களுக்கு வைராக்கியமுண்டென்று அவர்களைக் குறித்துச்சாட்சிசொல்லுகிறேன்; ஆகிலும் அது அறிவுக்கேற்றவைராக்கியமல்ல.

என்பது போலத்தான் இருக்கிறது. இங்கு அறிவு என்பது தேவனைப்பற்றிய வேத அறிவு ஆகும்.

கிறிஸ்துவின் உபதேசத்தை உடையவன் 

I யோவான் 2:22 இயேசுவைக் கிறிஸ்து அல்ல என்று மறுதலிக்கிறவனேயல்லாமல் வேறே யார் பொய்யன்? பிதாவையும் குமாரனையும் மறுதலிக்கிறவனே அந்திக்கிறிஸ்து.

இங்கு பிதா வேறு குமாரன் வேறு என்பதை மறுதலிக்கிறவன் என்று, இயேசுவை கிறிஸ்து அல்ல அவரே பிதா என்கிறவனும் அந்திகிறிஸ்துவே.

II யோவான் 1:9 கிறிஸ்துவின் உபதேசத்திலே நிலைத்திராமல் மீறி நடக்கிற எவனும் தேவனை உடையவனல்ல; கிறிஸ்துவின் உபதேசத்தில் நிலைத்திருக்கிறவனோபிதாவையும்குமாரனையும் உடையவன்.

பிதாவையும், குமாரனையும் உடையவன். இரண்டு முற்றிலும் வெவ்வேறு நபர்கள். இது எங்களுடைய உபதேசமல்ல, கிறிஸ்துவின் உபதேசம்.

கொஞ்சம் யோசித்துப்பாருங்கள் சர்வ வல்ல மகிமையின் தேவனான ஆதியந்தமில்லாத ஏக சக்ராதிபதியாகிய பிதாவாகிய மகத்துவம் நிறைந்த  தேவனை மனிதர்கள் எள்ளி நகையாடி, முகத்தில் காரி உமிழ்ந்து, கேவலப்படுத்தி சிலுவையில் அறைந்து கொல்லுவது உண்மையில் ஜீரணிக்க முடிகிறதா?

இதையே குமாரனாகிய கிறிஸ்து எனும்போது ஜீரணிக்க முடிகிறது இல்லியா? அதுதான் சத்தியம். கிறிஸ்து குமாரன், தேவகுமாரன் அவர் ஒருபோதும் பிதாவாக ஆக முடியாது. என்றென்றைக்கும் அவர் பிதாவுக்குக் கீழ்ப்பட்டே இருப்பார் என்றுதான் வேதம் சொல்கிறது. கிறிஸ்து மரித்தார். தேவனே அவரை எழுப்பினார். ஏற்கனவே மனதில் ஆழமாகப் பதிந்துள்ள திரித்துவக் கோட்பாட்டில் இருப்பவர்களுக்கு இது புரிய வாய்ப்பே இல்லை. 

ஆரோக்கியமான உபதேசத்தை உணராதபட்சம் துருபதேசத்தை ஏற்பதாகத்தான் அர்த்தம். 

100 பேருக்கு அறிவித்து அதில் ஒருவர் ஏற்றுக்கொண்டால் கூட மகிழ்சிதான் என்பது சற்று அபத்தமாக இல்லை. 99 பேர் நரகத்துக்குப் போவது ஏற்புடையதா? இதுதான் மனுக்குலத்துக்கு தேவன் அளித்த இரட்சிப்பின் திட்டமா?

அறைக்குள் அமர்ந்து வேதத்தை ஆராய்ந்ததனால் தான் நாஙகள் தெளிவாக இருக்கிறோம். வேத்தை ஆராய்ந்து பாருங்கள் என்று வேதமே சொல்கிறது. 

முதலில் மரணம் குறித்த விஷயத்தில் தெளிவான முடிவுக்கு வாருங்கள். அதுவே தெரியாமல் மற்ற வாதங்கள் வீண்.

என்வார்த்தைகள் புண்படுத்தியிருப்பின் வருந்துகிறேன். பவுலும் கிறிஸ்துவுமே துர்உபதேசங்களைப் பொறுக்காமல் எதிராளியை நேரடியாக விமரிசிக்கும்போது நான் விதிவிலக்கல்ல‌....

--

மழை புயல் வெள்ளம் ஏதாவது வருதுதான்னு பாருங்க!

 



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 258
Date:
Permalink  
 

இயேசுவை அப்படி நினைக்கிறோம் இப்படி நினைக்கிறோம் என்பவர்கள் அவரது பாவ பரிகார பலியான சிலுவை மரணத்தை மேன்மையக எண்ணாததால் தான் இதை குறித்து மற்றவர்களுக்கு அறிவிக்க இவர்களுக்கு மனம் வருவதில்லை. பாவத்தை குறித்த கண்டித்து உணர்த்துதலையும் மீட்பையும் அறிவிக்காமல் அவரவர் அவரவர் போக்கிலேயே தொடரட்டும், தீமைக்கு தேவன் தான் காரணம் என்றும், எந்த கொடூரமானவனையும் அந்தந்த பாவ நிலையிலேயே மரித்தாலும் மீட்பை அடைவான் என்பது Godless and lawless society ஐ உருவாக்கிவிடும். It will lead to chaos and confusion, no one will have an accountability of what he does, it will lead to a corrupt and immoral values இப்போது மட்டும் எப்படி இருக்கு என ஒரு விதண்டாவாதத்தை முன்வைப்பார்கள், ஆனால் அனைவரும் இவர்களது கட்டுக்கதைகளை நம்பி மோசம்போனால் இப்போது இருப்பதை விட அந்த நிலை மகா கேடானதாகவே இருக்கும்.



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2816
Date:
Permalink  
 

golda wrote:
எனக்குப் புரியாத இன்னொரு விஷயம், செத்தா சேப்டர் க்ளோஸ் என்று சொல்றாங்களே. எப்படித் தெரியும்? முன்ன பின்ன செத்து பார்த்திருக்காங்களா??

 அது...!!! (பின்குறிப்பு:சாதுஜி ஸ்டைலில் சொல்லவும்.)



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

சகோ ஜோசஃப்

[அழிந்து போகிற உலக பொருட்களுக்கே இவ்வளவு மெனக்கெடும் போது அழிவில்லாத நித்திய வாழ்வை எப்படி அல்லத்தட்ட முடியும். எனது நண்பன் சொன்னான், நான் இதில் பயனடைந்ததால் தான் உன்னை சேர சொல்கிறேன் என, பணத்தாலேயே ஒருவன் பயனடையும் போது இரட்சிப்பை அடைந்தவன் தான் அடைந்த பலனை அடுத்தவனுக்கு சொல்லாமல் இருப்பானா? ]

 Very Good Point.

என்னையும் சேர்த்து விட வேண்டும் என்று ஒருத்தங்க தீவிரமா முயற்சித்தாங்க. தப்பிச்சிட்டேன். கண்ணைப் பாரு, காதைப் பாரு, டயாபடீஸ் பாரு, எல்லாம் போயிருச்சு பாரு ... என்று ஒரே ஜீவனுள்ள சாட்சிகளா அடுக்குவாங்க. ஆம்வே பொருட்களுக்கு காட்டும் மதிப்பு, மரியாதையைக் கூட இயேசு கிறிஸ்துவுக்குக் காட்டக் கூடாதா?

எனக்குப் புரியாத இன்னொரு விஷயம், செத்தா சேப்டர் க்ளோஸ் என்று சொல்றாங்களே. எப்படித் தெரியும்? முன்ன பின்ன செத்து பார்த்திருக்காங்களா??



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 258
Date:
Permalink  
 

 எல்லாருக்காகவும் ரத்தம் சிந்தியாகிவிட்டது என ஆனபின் இயேசு தனது இறுதிக்கட்டளையான " நீங்கள் உலகமெங்கும் புறப்பட்டு போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி....." என்பதை ஏன் சொல்லவேண்டும். உலகமெங்கும் என்றால் உலகத்தின் எல்லை எது ஆசியா மைனர், ஐரோப்பா மட்டுமா? 82 பேரும் உலகமெங்கும் போயிருக்க முடியுமா? அப்படி அறிவிக்கதேவையில்லை என்றால் இந்த கட்டளையை ஏன் கொடுத்தார். இதையெல்லாம் யோசிக்கவே மாட்டார்கள் போல. 

லாஜிக்காகவே பார்த்தாலும் "சீஷர்களுக்கு மட்டும் தான் இக்கட்டளை" என்பது விகற்பமாக இருக்கிறது. சீஷர்கள் மட்டும் உலகமெங்கும் எப்படி போயிருக்க முடியும். தேவனுடைய வார்த்தை சென்றது என்றால் வார்த்தை எப்படி சென்றது? பறந்து போனதா இல்லை நடந்து போனதா? என்ன சார் உங்க காமெடிக்கு அளவே இல்லையா. இத்தனை சீரியசான விஷயம் உங்களுக்கு வீணலுவலாக தெரிகிறது. தோமா காலத்தில் பரவிய கிறிஸ்தவம் கேரளத்தின் ஒரு பகுதியிலும் தமிழகத்தின் ஒரு பகுதியிலுமே முடங்கியிருக்கும், அதன் பின்னர் வந்த ஐரோப்பிய மிஷனரிகளால் தான் மறுபடியும் சுவிஷெஷபணி ஆரம்பித்தது. இதை மறுக்கவோ மறைக்கவோ முடியுமா?

ஒருவேளை இயேசு சீடர்களுக்கு கொடுத்த கட்டளை தான் என இருந்திருந்தால் உலகத்தின் எல்லையெங்கும் எப்படி சுவிஷேஷம் போயிருக்கும். நீங்கள் என்னவாகியிருந்திருப்பீர்கள் என்றால் அதற்கும் ஒரு விதண்டாவாதம். 

Bereans:

//ஆமா, இவர் நற்செய்தி (அப்படி என்றால் என்னவென்று இது வரையில் அறியாத இவர்கள்) கேட்டு அப்படியே வீட்டில் சும்மா இருக்க முடியாமல் தெரு தெருவாக ஓடிக்கொண்டே இருக்கிறாராம்!! தேவன் எங்களை எப்போ எப்படி வைத்திருப்பார் என்பதை குறித்து நீங்கள் சற்றும் கவலைப்படாதீர்கள்!! ஏனென்றால் அவர் எல்லார் மேலும் கண்ணோக்கமாக இருக்கிறார்!! எங்களை மேலும் அப்படியே இருப்பார்!! ஆனால் உங்களுக்கு இதை எல்லாம் நம்ப நேரம் இருக்காது!! உங்கள் தெருவாசிகளுக்கு சுவிசேஷம் சொல்ல கிளம்பவில்லையா!!??//

எல்லார் மேலும் கண்ணோக்கமாயிருந்ததால் தான் போய் அறிவிக்க சொன்னார். அதை நம்புவதால் தான் அறிவிக்க செல்கிறோம். நற்செய்தி என்னவென்று உங்களுக்கு தான் தெரியவில்லை திரு.பெரேயன்ஸ். பவுலும் கூட அக்காலத்தில் ஓடிக்கொண்டே தான் இருந்தார் என்பதை நினைவில் கொள்க‌.



__________________
1 2 3 4  >  Last»  | Page of 4  sorted by
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard