Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: மிஷனரி பணி தேவையா..?


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 258
Date:
RE: மிஷனரி பணி தேவையா
Permalink  
 


Soul//"நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்" இதைச் செய்வதற்கு முதலில் ஒரு நபர் 'கட்டளையிட்ட யாவையும்' தான் கைக்கொள்ளவேண்டும். அப்படி 'யாவையும்' கைக்கொண்ட யாரயாவதுதான் நானும் தேடிக்கொண்டிருக்கிறேன். இன்னும் ஒருத்தன்கூட அகப்படல, உங்களுக்கு அப்படி யாரையாவது தெரிந்தால் சொல்லுங்களேன், அந்தப் பரிசுத்த முகத்தைப் பாக்கனும்போல ஆர்வமா இருக்கு.//

அப்படிப்பட்டவர்களை தேடிக்கொண்டே இருந்தால் உமக்கு வேறு வேலையே இருக்காது. அடுத்தவன் வீட்டை எட்டிப்பார்க்க உமக்கென்னய்யா அவ்வளவு ஆர்வம். அவனவன் தேவனோடு கொண்டுள்ள அர்ப்பணிப்பை உம்மிடம் வந்து ரிஜிஸ்டர் பண்ணிவிட்டு, பிரதர், நான் கிறிஸ்து கட்டளையிட்டதையெல்லாம் கைக்கொள்ளுறேனான்னு பாருங்க, பாத்து ஒரு சர்டிபிகேட் கொடுங்க, அப்புறம் நான் ஊழியத்துக்கு போறேன்னு சொல்லனுமாக்கும். 

ஏன் நீர் கிறிஸ்து போதித்ததையெல்லாம்  கைக்கொண்டுவிட்டீராக்கும். ஊழியம் செய்ய உமக்கு உடம்பு வலித்தால் அடுத்தவனை ஏனய்யா குறைகூறித்திரிகிறீர்.



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 258
Date:
Permalink  
 

//ஏ...யப்பா, கோயமுத்தூரில் ஒருத்தர்விடாமல் ஆத்தும ஆதாயம் செய்தாகிவிட்டது, கோயமுத்தூரில் எல்லாரும் பரலோகத்துக்குத் தகுதியாகிவிட்டார்கள் (எங்களைத் தவிர) ஆகையால் உறவினர் மகன் மிஷனரியாக வேறு ஊர் போய்விட்டானாக்கும்... அவ்வளவு தெறமையையும் அவர் விட்டுக்கொடுத்துவிட்டு ஆத்தும ஆதாயம் செய்கிறாராக்கும். அவன் ஏன் ஆசைப்பட்டான், பாவம் யார் அவனை மூளைச்சலவை செய்து ஆசைப்பட வைத்தார்களோ? //

உமக்கேனய்யா எரிகிறது, உங்களுக்கு மிஷனரி ஊழியம்  என்றாலே வட இந்தியா அல்லது வேறு ஊருக்கு போவது தான் தெரியுமாக்கும், அவன் இருக்கிற ஸ்தாபனத்தில் தமிழகத்தின் எல்லைகளுக்குள் தான் பணி செய்கிறார்கள். யாரும் மூளைச்சலவை செய்யவில்லை. அதை பற்றி நீர் ஒன்னும் கமென்ட் பண்ணவேண்டாம். வேதாகமத்தை தமிழில் கொண்டு வந்தவர்களையும் இந்தியா வந்த மற்ற நாடுகளின் மிஷனரிகளையும் நிராகரிக்கும் தைரியம் இல்லை அதை பத்தி மூச்சே காணோம் இதில் இப்போதுள்ள மிஷனரிகளை பத்தி கிண்டல் பண்ணுறார், இதெல்லாம் என்ன பொழப்போ. நீர் சாட்சியாய் வாழ்ந்து எத்தனை ஆத்துமாக்களை உமது சுற்றுப்புறத்தில் சீஷராக்கியிருக்கிறீர், அடுத்தவனை பத்தி பேச மட்டும் நாக்கு வெத்தல போட்ட மாதிரி இருக்காக்கும்

ஆத்தும ஆதாயம் செய்பவர்கள் ஞானவான்கள் என்ற வசனம் தெரியாதாக்கும் பெரிசா பேச வந்துட்டாரு.



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 258
Date:
Permalink  
 

நன்றி நண்பரே, நவீன கால ஊழியர்களிடம் கூட சர்ச்சைக்குரிய அம்சங்கள் உண்டு ஆனால் மிஷனரிப்பணியை குறை கூறுவதை தான் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. தாங்கள் அப்படி அர்த்தத்தில் கூறவில்லை என்பது ஆறுதலாக இருக்கிறது. இயேசுகிறிஸ்து தொழத்தக்க தெய்வமல்ல என்பவர்களுக்கு மிஷனரிப்பணி தேவையில்லை தான்.



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 134
Date:
Permalink  
 

joseph wrote:

 

பீட்டர், என்ன எழுதியுள்ளோம் என யோசித்து தான் எழுதியுள்ளீர்களா? நூதன சீடர்கள் என யாரை சொல்கிறீர்கள், மிஷனரிப்பணிக்கான ஆயத்த நிலை என்பது என்ன என்று உங்களுக்கு தெரியுமா? சும்மா இன்னைக்கு நினைத்து நாளைக்கு கிளம்புவது அல்ல மிஷனரிப்பணி, இந்தியா வந்த ஆங்கிலேய மிஷனரிகள் கப்பல்களிலேயே தமிழ் மொழி மற்றும் இந்த கலாச்சாரம் குறித்து  கற்றார்கள் என்பது வரலாறு. 

சீஷராக்குங்கள் முதலில் என்றால் எதை சொல்லி சீஷராக்குவீர்கள்? 


 சகோதரரே, தவறாக புரிந்துகொண்டீர்கள். நான் கிறிஸ்துவின் சிலுவையை குறித்தல்லாத வேறு நூதன உபதேசங்களைப் பற்றி கிண்டலாக கூறினேன். மிஷனரி பணி என்பது அப்போஸ்தல பணி (தேவனால் அனுப்பப்பட்டவர்களின் பணி) என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை. மேலும் என்னுடைய குடும்ப சூழ்நிலையால் (கொஞ்சம் நாட்டுப்பற்று அதாவது சுகமான சூழ்நிலையான உலகப் பற்று என்றும் சொல்லலாம்) மிஷனரி பணிக்கு செல்ல இயலவில்லையே என்ற ஏக்கமும் எனக்குண்டு.

இயேசுவின் சீஷராகாதவர் (அதாவது இயேசுவின் அடிச்சுவடை பின்பற்றாதவர்) எப்படி சுவிசேஷம் அறிவிக்க இயலும் என்பது நம்முடைய தியாக மிஷனறிகளை குறித்ததல்ல. வே........று சிலரைக் குறித்தது.

எழுதியுள்ளதை ஒருமுறை கூட வாசியுங்களேன்!!!!!



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 258
Date:
Permalink  
 

 

பீட்டர், என்ன எழுதியுள்ளோம் என யோசித்து தான் எழுதியுள்ளீர்களா? நூதன சீடர்கள் என யாரை சொல்கிறீர்கள், மிஷனரிப்பணிக்கான ஆயத்த நிலை என்பது என்ன என்று உங்களுக்கு தெரியுமா? சும்மா இன்னைக்கு நினைத்து நாளைக்கு கிளம்புவது அல்ல மிஷனரிப்பணி, இந்தியா வந்த ஆங்கிலேய மிஷனரிகள் கப்பல்களிலேயே தமிழ் மொழி மற்றும் இந்த கலாச்சாரம் குறித்து  கற்றார்கள் என்பது வரலாறு. 

சீஷராக்குங்கள் முதலில் என்றால் எதை சொல்லி சீஷராக்குவீர்கள்? 



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 134
Date:
Permalink  
 

joseph wrote:

//18. அப்பொழுது இயேசு சமீபத்தில் வந்து, அவர்களை நோக்கி: வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.

19. ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,

 20. நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்; இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென்.//

மேற்கண்ட வசனங்களை வைத்து இது சீடர்களுக்கு மட்டுமான பணிதான் என சோல் சொலூஷனும் அவரது நம்பிக்கைகளை ஆதரிப்பவர்களும் எண்ணுகிறார்கள்.


 என்ன சார் இது! இது உண்மையிலேயே சீஷர்கள் மட்டுமே செய்ய வேண்டிய பணி தான். உங்களுக்கு எந்த சந்தேகமும் வேண்டாம்! வேதத்திலிருந்து ஆதாரம் காட்டட்டுமா? சீஷர்கள் செய்யவேண்டிய ஒரு பணியை மற்றவர்கள் செய்ய முயன்றால் குழப்பமும் பரியாசமும் வேதபுரட்டுமே மிஞ்சும். நற்செய்தி அறிவிப்பு சீஷர்களுக்கு மட்டும் தான். அதில் சந்தேகமே வேண்டாம்.

 

 

 

 

evileye என்ன ஒன்று, முதலாவது சகல ஜாதிகளையும் சீஷராக்க வேண்டும். பின்பு அவர் கட்டளையிட்ட யாவயும் கைக்கொள்ளும்படி செய்யவேண்டும். பின்பு சுவிசேஷம் அறிவிக்க செய்யவேண்டும். நூதன சீஷர்களை சுவிசேஷம்அறிவிக்க அனுமதித்தால் குழப்பமும் பரியாசமும் வேதப்புரட்டும் தான் நடக்கும்.



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 258
Date:
Permalink  
 

Bereans//"நீங்கள் இன்றே கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாவிட்டால் நரகத்திற்கு போவீர்கள்" போன்ற போதனைகளை ஒரு போதும் அப்போஸ்தலர்கள் தந்ததில்லையே!! எல்லா ஜனங்களும் இரட்சிக்கப்படவே கிறிஸ்து இயேசு வந்தார் என்று தானே அப்போஸ்தலர்களின் உபதேசமாக இருந்தது!!//

எல்லா ஜ‌ன‌ங்க‌ளும் ர‌ட்சிக்க‌ தான் இயேசு வ‌ந்தார் நீங்க‌ எப்ப‌டிவேணுமின்னாலும் இருன்துகொள்ளுங்க‌ள் கிறிஸ்துவை ந‌ம்பி விசுவாசித்தாலும் ச‌ரி விசுவாசிக்காவிட்டாலும் ச‌ரி, இதுக்கு பெய‌ர் உப‌தேச‌மே இல்லையே, இதுக்கு பேசாம ம‌ல்லாக்க‌ ப‌டுத்துட்டு விட்ட‌த்தை பாத்துட்டே இருக்க‌லாம். அன்றைக்கு அனேக‌ அடிக‌ள் ப‌ட்டும் தான் சீட‌ர்க‌ள் ந‌ற்செய்தியை அறிவித்த‌ன‌ர். 



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 258
Date:
மிஷனரி பணி தேவையா..?
Permalink  
 


//18. அப்பொழுது இயேசு சமீபத்தில் வந்து, அவர்களை நோக்கி: வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.

19. ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,

 20. நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்; இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென்.//

-மேற்கண்ட வசனங்களை வைத்து இது சீடர்களுக்கு மட்டுமான பணிதான் என சோல் சொலூஷனும் அவரது நம்பிக்கைகளை ஆதரிப்பவர்களும் எண்ணுகிறார்கள். "நீங்கள் புறப்பட்டு போய் சகல ஜாதிகளையும் சீஷர்களாக்கி.." என சொல்லியிருக்கிறார் ஆண்டவர், "சகல" என்றால் உலகத்தில் உள்ள சகல என்று தானே பொருள் வரும்..?

அப்போதிருந்த பயண வசதிகளைக்கொண்டு சீஷர்கள் அதிகபட்சம் ஆசிய மைனர் மற்றும் ஆப்பிரிக்காவின் வட பகுதிகள் ஏன் ஸ்பானியா, இத்தாலியா தேசம் வரைக்கும் போக முடிந்தது, அதே சமயத்தில் அந்த சீஷர்களின் வாழ்வும் (பலர் ரத்த சாட்சியாக) நிறைவுற்றது, அப்ப மீதியுள்ள இந்தியா, சீனா, ஆஸ்திரேலிய கண்டம் இன்னும் பல பகுதிகளில் உள்ள மக்கள் இந்த சகல ஜாதிகள் கேட்டகிரியில் வரமாட்டார்களா? என்ன சார் காமெடியா இருக்கு. வேதம் சொல்லப்பட்டவங்களுக்கு மட்டும்ன்னா அப்ப 10 கட்டளைகளும் இஸ்ரவேலருக்கு மட்டும் தான் பொருந்துமா.

இந்த சுவிசேஷ பணியை செய்பவர்களுக்கு வரும் பல இடையூறுகளும் தொடர்ந்துகொண்டே இருக்குமாதலால் தான் "உலகத்தின் முடிவு பரியந்தமும் சகல நாட்களிலும் உங்களுடன் இருக்கிறேன்.." என்றார் இயேசு. அஃதாவது உலகத்தின் முடிவு பரியந்தமும் சுவிசேஷம் அறிவிக்கப்பட வேண்டும், என்பது தான் அவரது விருப்பம். இது சீஷர்களுக்கு மட்டுமே சொல்லப்பட்டது என்றால் உலகத்தின் முடிவு பரியந்தமும் அவர்கள் உயிருடன் இருந்திருந்தால் தான் முடியும், கிட்டத்தட்ட அவர்களுக்கு இரண்டாயிரத்து சொச்சம் வயசாகியிருக்கும். என்ன கொடுமை சரவணன் சார்...

நீங்க சோம்பேறித்தனமாக இருந்துகொண்டு மிஷனரிகளை கேவலமாக எழுதாதீர்கள், ஆத்தும ஆதாயம் செய்பவர்கள் ஞானவான்கள் என்று தானே ஆண்டவர் சொல்கிறார் (ஆத்துமா... ஓ உங்களை பொருத்தவரை இல்லாத மேட்டராச்சே) இந்த வேதத்தை ஆராய்ச்சி (!) செய்கிற அரும்பெரும்பாக்கியம் உங்களுக்கு கிடைத்ததே சீகன்பால்கு இங்கு வந்தது தான்; மேலும் கிறிஸ்துவை அறிந்துகொண்டதே மிஷனரிகளால் தான். இவ்வளவு பேசும் நீங்கள் இதையெல்லாம் தைரியமாக நிராகரியுங்களேன், மத்தவங்களுக்கும் தெரியும், நீங்க எவ்வளவு நன்றியுள்ளவராக இருக்கிறீர்கள் என. 

எனது உறவினர் ஒருவர் தனது மகன் (அவன் எவ்வளவு திறமைசாலி என்பதை அவனோடு பழகியவர்களுக்கு தான் தெரியும்) மிஷனரியாக செல்ல ஆசைப்பட்டபோது எந்த தயக்கமும் இல்லாமல் அவனை அனுப்பிவைத்தார், இன்றைக்கு அவனை தேவன் எப்படியெல்லாம் பயன்படுத்தி கொண்டிருக்கிறார் என்பதை கண்கூடாக காண்கிறோம், அவனும் கோயம்புத்தூரு தாங்கோ...



__________________
«First  <  1 2 3 4 | Page of 4  sorted by
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard