/// நேற்று முன்தினம் அதிகாலை 4 மணிக்கு, கோவில் கிணற்றில் பூசாரி புனித நீராடி, சிறிய குடத்தில் தண்ணீர் எடுத்து வந்தார். அதை தொடர்ந்து, கோவில் முன் சுடர் விட்டு எரிந்து கொண்டிருந்த விளக்கில் இருந்த எண்ணெய் முழுவதையும் வடித்தார். பின்னர், கிணற்றில் இருந்து கொண்டுவரப்பட்ட பச்சைத் தண்ணீரை விளக்கில் ஊற்றி பற்ற வைத்தார். அப்போது, திரி கொழுந்து விட்டு எரிந்தது. இக்காட்சியை, சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கண்டு பரவசப்பட்டனர். தொடர்ந்து, ஒன்றரை மணி நேரம் எரியும் விளக்கு காலை 6 மணிக்கு எரிந்து அணைந்துவிடும். ///
இதில் பரவசப்பட என்ன இருக்கிறது ? நன்கு எண்ணையில் ஊறிய தடித்த திரியானது த்ன்னிடமிருக்கும் எண்ணையினால் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக வெளிச்சத்தைத் தருமே..இதற்உ இறை சக்தி அவசியமா என்ன ?
ஆனால் இயேசுவானவர் சொல்லுகிறார்,
யோவான் 8:12 மறுபடியும் இயேசு ஜனங்களை நோக்கி: நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான் என்றார்.
அவரைக் குறித்து சொல்லப்படுகிறது,
I யோவான் 1:7 அவர் ஒளியிலிருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்.
பொய்யில் பிறந்து பொய்யில் கறையும் நெய்யிட்ட விளக்கும் அணையும்; எனவே பொய்யா விளக்கும் அணையா ஜோதியுமான இயேசுவில் நாம் வெளிச்சம் பெறுவோமாக.