Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: நமக்காக ஒரு சானல், (சத்தியம்) சாத்தியமா ?


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
RE: நமக்காக ஒரு சானல், (சத்தியம்) சாத்தியமா ?
Permalink  
 


    He Who Has An Ear, Let Him Hear!

 

கேட்கிறதற்குக் காது உள்ளவன் எவனோ, அவன் கேட்கக்கடவன்!
 
 
சகோ. சாமுவேல் சர்ச்சில், தன்னுடைய முகநூல் பக்கத்தில் ‘கிறிஸ்தவனே மனந்திரும்பு’ போஸ்டர்களின் போட்டோக்களை வெளியிட்டு, ஒருவேளை இது மோகன் சி. லாசரஸ்ஸால் வெளியிடப்பட்டிருக்கலாம் என்று பதிவிட்டிருக்கிறார்.
 
 
Sam%2BPNG.png
ஆமாம், இது இயேசு விடுவிக்கிறார் ஸ்தாபனத்தின் கைங்கர்யம்தான்!
 
சில வருடங்களுக்கு முன் அதிகாலையில், ஆண்டவர், மோகன் சி. லாசரஸை எழுப்பி, கிராம ஊழியத்தின் ஒரு பகுதியாக, இப்படி நாடெங்கிலும் வசனங்களை போஸ்டராக அச்சடித்து ஒட்டச் சொன்னாராம். அப்படி ஒட்டியிருப்பதை படிக்கும் ஜனங்கள், மந்தை மந்தையாக கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்வார்கள் என்றும் ஆண்டவர் சொன்னாராம். இந்த விஷயத்தைச் சொல்லித்தான் போஸ்டர் சமாச்சாரத்தை ஆரம்பித்தார்கள்.
 
 
VM-1.jpg
[இயேசு விடுவிக்கிறார் ஸ்தாபனத்தின் இணைய தளத்தில் வெளியிடப்பட்டிருக்கிற குறிப்பு]
ஆனால், அப்படி அச்சடிக்கும் போஸ்டர்களில், நம் அரசாங்கச் சட்டப்படி, எந்த அச்சகத்தில் அச்சடிக்கப்பட்டதுஎன்று குறிப்பிடப்பட வேண்டிய விவரத்தை மட்டும் குறிப்பிடவே மாட்டார்கள். ஏனென்றால், அப்படி அச்சகத்தின் பெயரைக் குறிப்பிட்டால், யாரும் தகராறு பண்ண வந்துவிடுவார்களோ என்கிற உள்பயம்தான் காரணம்! [என்ன ஒரு நேர்மை! நாட்டின் சட்டத்திற்குக் கீழ்படியும் குணம்!]
 
அவர்களைப் பொறுத்தவரை, இந்த வருடம் மிகவும் வில்லங்கமான வருடமாக ஆகிவிட்டது! மத்தியில் பி.ஜே.பி. அரசு ஆட்சிக்கு வந்து விட்டது. வசனங்களை போஸ்டராக அச்சடித்து ஒட்டி, அதனால் ஏதாவது பிரச்சனை என்று வந்தால், தங்கள் ஸ்தாபனத்தைக் கொண்டு செலுத்துவது மிகவும் கடினமாகிவிடும் என்கிற முன் ஜாக்கிரதையினால்தான், இப்படி கிறிஸ்தவனே மனந்திரும்புஎன்று அறிவுரை வழங்கி போஸ்டர்கள் அடித்து கொடுத்து பல இடங்களில் ஒட்ட ஊக்கப்படுத்தி இருக்கிறார்கள். [என்ன ஒரு தைரிய சாட்சி!]
 
01.jpg
அதெல்லாம் சரி, லஞ்சம் வாங்குகிறவன் கிறிஸ்தவனல்லஎன்று ஒரு போஸ்டர் அச்சடித்திருக்கிறார்கள். அப்படியென்றால் லஞ்சம் கொடுப்பவன் மட்டும் கிறிஸ்தவனா? ஏனென்றால், தங்கள் ஸ்தாபனத்திற்கு வந்த நெருக்கடிகளில் இருந்து தப்பிப்பதற்கும், சில, பல காரியங்களைத் தங்களுக்குச் சாதகமாக ஆக்கிக் கொள்வதற்கும், நாங்கள் எங்கள் ஸ்தாபனத்தில் இருந்து லஞ்சமே கொடுத்ததில்லை என்று வெளிப்படையாக, ஆண்டவர் சாட்சியாக மோகன் சி லாசரஸ் சொல்லுவாரா? ஒருவேளை, நாங்கள் லஞ்சம் கொடுப்பதே இல்லை; ஆனால் அன்பளிப்புக்கள் மட்டுமே கொடுப்போம்!என்று சொல்வார்களோ?
 
04.jpg
வரதட்சணை கேட்கிறவன் கிறிஸ்தவனல்லஎன்று ஒரு போஸ்டர்! சில வருடங்களுக்கு முன், இவரது மனைவி, தன் சகோதரனுடைய திருமணத்தின் போது வரதட்சணையைத் தாம்பாளதில் வைத்து வாங்குவது போன்ற படத்தை, குமுதம் ரிப்போர்ட்டர் பத்திரிக்கை வெளியிட்டு, அந்த வரதட்சணையின் காரணமாக ஏற்பட்ட பிரச்சனையினால், இவரது மனைவிக்கு கைது வாரண்ட் தூத்துக்குடி கோர்ட்டினால் பிறப்பிக்கப்பட்டு, அதில் இருந்து தப்பிப்பதற்காக, அந்த நேரத்தில் தலை மறைவாக சில மாதங்கள் இருப்பதாக விரிவாக செய்தி வெளியிட்டு இருந்தது. இதன் பின்னணியில், இன்று இந்த போஸ்டர் மூலம் இவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள்?
 
இப்படி இவர்கள் அச்சடித்திருக்கும் ஒவ்வொரு போஸ்டருக்கும் கேள்விகள் எழுப்பலாம். இன்று தங்களை பெரிய ஊழியங்கள் என்று தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கும் ஸ்தாபனங்கள் எல்லாமே, கார்பொரேட் நிர்வாகத்தை அடியொற்றித்தான் செயல்பட்டு வருகின்றன. தங்களைச் சுற்றிப் பெரிய பெரிய வியாபாரிகளையும், பண முதலைகளையும், முகஸ்துதியில் சிறந்து விளங்கும் ஜால்ராக்களையும் வைத்துக் கொண்டு சாதாரண விசுவாசிகள் மத்தியில், தங்களைப் பற்றிய ஒரு பிரமிப்பை உண்டு பண்ணி, ஆண்டவர் பேரில் ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டுவிட்டு, ஏதோ ஆண்டவர் தங்கள் கஸ்டடியில் மட்டுமே இருப்பதாகப் பெயர் பண்ணிக் கொண்டு, தங்களையும் ஏமாற்றி, கிறிஸ்தவ விசுவாசிகளையும் ஏமாற்றி, எல்லாவற்றுக்கும் மேலாக கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவையும் ஏமாற்றி பிழைப்பை நடத்திக் கொண்டு வருகிறார்கள்!
 
07.jpg
சொல்லும், செயலும் ஒன்றாக இருந்து, அதுவும் நேர்மையாக, உண்மையாக அமைந்தால் மட்டுமே யார் சொல்லும் வார்த்தையிலும் ஜீவன் இருக்கும். இல்லையென்றால் சொல்லும், எழுதும் வார்த்தைகள் எல்லாமே ஓசை இடுகிற கைத்தாளம்போலத்தான் இருக்கும்!
 

கேட்கிறதற்குக் காது உள்ளவன் எவனோ, அவன் கேட்கக்கடவன்!


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 330
Date:
Permalink  
 

சத்தியம் டிவியின் தவறானதும் சாட்சிக்கேடானதுமான போக்குகளைக் கண்டித்ததற்காக பல நண்பர்கள் என்னைவிட்டு விலகினார்கள்.மேலும் மோகன் சி லாசரஸுக்கும் சத்தியம் டிவிக்கும் சம்பந்தமே இல்லை என்று சத்தியம்பண்ணாத குறையாகப் போராடினார்கள்.

ஆனால் ??? தற்போது வெளிவரும் செய்திகள் அத்தனை ஆரோக்கியமானதாக இல்ல. இதுகுறித்த ஒரு செய்தி தொகுப்பு...

 
 
இதை ஜெபக்குறிப்பாகவோ, கதைக்குறிப்பாகவோ (அதாங்க... விவாதப் பொருள்) எடுத்துக்கொள்வது உங்கள் தனிப்பட்ட நிலைப்பாடு. படித்தேன்...பகர்ந்தேன். அவ்வளவு தான். - Pethuru Devadason.

Anbudan Media News

சகோ. மோகன் லாசரஸ் சில நிமிடங்களுக்கு முன்னர்தான் மும்பை விமான நிலையம் வந்திறங்கியுள்ளார். இன்னும் இரு தினங்களுக்கு மும்பையில் இருப்பார் என தகவல். சத்தியம் டிவியின் ஆரம்பகட்ட உரிமையாளர். நேற்று நடைபெற்ற நேரலை குளறுபடி பிரச்னைக்கு நெற்றி கண் திறப்பினும் குற்றமே எனும் பத்திரிகை முதலாளியிடம் சிக்கல் வந்தால் ஆதரவு தரும்படி உதவி கேட்டுள்ளாராம்...

போகாத ஊருக்கு வழி கேட்பது போலல்லவா தெரிகிறது!

சத்தியம் தொலைக்காட்சியில் இன்றிரவு 8.10 க்கு ஒளிபரப்பான நேரலை நிகழ்ச்சியில் பேசிய நேயர் தமிழ்தாசன் என்பவர் தமிழக முதல்வர் ஜெயலலிதாவையும், நிகழ்ச்சியில் பங்குகொண்ட காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணியையும் தரக்குறைவான ஆபாச வார்த்தை கூறி பேசியதையடுத்து நிகழ்ச்சி நிறுத்தபட்டது. இதனைத்தொடர்ந்து நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரையும் , பிசிஆர் ஹெட் மற்றும் தலைமை செய்தி ஆசிரியரும் கைது செய்யப்படுவார்கள் என தகவல். முன்னதாக சத்தியம் டிவி உரிமையாளர் வீட்டில் காவல்துறை விசாரணை செய்துவிட்டு சென்றுள்ளார்கள்.
 
நேரலை நிகழ்ச்சிகளை பொதுவாக ஓரிறு நிமிடங்கள் டெக்னிக்கலக்காக தாமதிப்படுத்தி ஒளிபரப்புவார்கள். இது மாதிரி செய்யும்போது எதிர்பாராத சம்பங்கள் ஏதும் நடந்தால் தவிர்த்திடலாம். முன்னெச்சரிக்கையில்லாமல் நேரலை நிகழ்ச்சி நடத்தப்படும்போது இன்று சத்தியம் தொலைக்காட்சியில் நடந்ததுபோன்றுதான் பிரச்னை ஏற்படும் என இதுகுறித்து விபரமறிந்தவர் தெரிவித்துள்ளார்.
  •  
    அன்புடன் மீடியா நியூஸ் தரும் செய்திகள் எல்லாம் உண்மை அல்ல. கொஞ்சம் உண்மை, நிறைய உடான்ஸ் சேர்த்து எழுதும் மஞ்சள் பக்கம் அது. மக்கள் தொலைக்காட்சியில் இல்லாத பிரச்சனைகளா? ஒரே ஒரு முறை அந்த சேனல் குறித்தும் எழுதட்டும் பார்க்கலாம். பலமுறை அன்புடன் மீடியா நியூஸ் செய்திகள் தவறானவை என அவர்களுக்கு சொல்லியிருக்கிறேன். அது பற்றி வருத்தம் தெரிவிக்கும் அல்லது வாபஸ் பெரும் நாகரிக எழுத்து அவர்களுடையது அல்ல.
     
     
    இது நேற்றிரவு நக்கீரன் இணைய தளம் வெளியுட்டுள்ள செய்தி.
     
    தொலைக்காட்சி விவாதத்தில் விபரீதம் உண்டாக்கிய நேயர் :
     
    டிவி அதிபர் வீட்டில் போலீஸ் நுழைந்தது

    சத்யம் தொலைக்காட்சியில் இன்று இரவு ‘’சத்யம் - அது சாத்தியம்’’நிகழ்ச்சி 8.10 மணியில் இருந்து 8.30 மணி வரை சென்றது. முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அகற்றியது சரியா? தவறா? என்ற விவாதம் நடந்தது. இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் சார்பில் விஜயதாரணி எம்.எல்.ஏ., பாஜக மாநில பொருளாளர் சேகர் ஆகியோர் பங்கேற்று விவாதம் செய்துகொண்டிருந்தனர். நிகழ்ச்சியின் இடையே பொதுமக்களிடம் இருந்து தொலைபேசி வழியாக கருத்துக்கள் பெறப்பட்டுக் கொண்டிருந்தது. அப்போது தமிழ்தாசன் என்ற நேயர், தன்னை மதிமுக பிரமுகர் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு பேச ஆரம்பித்தார்.

    அவர், ‘’முள்ளிவாய்க்கால் முற்றம் வைப்பது தமிழர்களின் கடமை. இதைப்பற்றி பேச காங்கிரசுக்கும், முதல் வருக்கும் என்ன தகுதி உள்ளது? என்று கேட்டதாக சொல்லப்படுகிறது. அப்போது, விஜயதாரணி அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவே, தமிழ்தாசன் என்ற குரலுக்கு சொந்தக்காரர் மிகவும் தவறான வார்த்தை களால் விஜயதாரணியையும், முதல்வர் ஜெயலலிதாவையும் திட்ட ஆரம்பித்துவிட்டதாக தெரிகிறது.

    இதையடுத்து விஜயதாரணி, ஆவேசமடைந்து தமிழ்தாசனை உடனே கைது செய்ய வேண்டும் என்று சத்தம் எழுப்பினார். சத்யம் டிவி நிறுவனத்தையும் எச்சரித்தார். இதனால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. சத்யம் டிவியின் சத்யம் சாத்தியம் நிகழ்ச்சி தொகுப்பாளர் அரவிந்தன், மற்றும் ஆசிரியர் விஜயரங்கன் உள்ளிட்டோர் அவரிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், விஜயதாரணி அதற்கு ஒப்புக் கொள்ள வில்லை.

    இந்த சூழ்நிலையில் சத்யம் டிவியின் அதிபர்களில் ஒருவரான ஐசக் பால் லிவிங்ஸ்டன் வீட்டிற்கு அண்ணாநகர் போலீஸ் துணை கமிஷனர் சேவியர் தன்ராஜ் தலைமையிலான போலீசார் சென்றுள்ளனர். அவரிடம் விளக்கம் கேட்ப்படும் என்று தெரிகிறது. இன்னொரு பங்குதாரரான சகோ. மோகன் சி.லாசரர்ஸ் வீட்டிற்கும் போலீசார் சென்றுத்தளதாக் தெரிகிறது.

    நள்ளிரவில் கைது நடவடிக்கை இருக்கலாம் என்ற அசாதாரண சூழல் அங்கு நிலவுகிறது.
     
     
    இந்த நக்கீரன் உதவியைதான் மோ.சி கோரியுள்ளதாக அ .மீ. நியூஸ். சொல்கிறது. இரண்டு பேருமே ஒரு குட்டையில் ஊறிய மட்டைகள் தான். நக்கீரனுக்கு ஆதரவான அரசு இப்பொழுது இல்லை. ஒரு செய்தி நிறுவனத்தில் வரும் தவறான செய்திக்கு அதன் உரிமையாளர் பொறுப்பாக மாட்டார். செய்தி ஆசிரியர் தான். இந்த அடிப்படை தெரியாதவர்கள் அல்ல மேற்படி இருவரும். சும்மா பரபரப்புக்கு கொளுத்தி போடுபவர்கள்.
     
    நேற்று நடந்தது ஒரு இமாலய தவறு. ஆனால், ஒரு நேரலை நிகழ்ச்சியில் விபத்து போல நடந்து விட்ட ஒரு சம்பவம். சத்தியம் தொலைகாட்சி மட்டுமல்ல, நேரலை விவாதம் செய்யும் எல்லா தொலைகாட்சிகளுக்கும் நல்ல பாடம். சத்தியம் தொலைக்காட்சி விமர்சனத்துக்கு அப்பாற்பட்டதல்ல. அந்த விமர்சனங்களை கிறிஸ்துவின் பார்வையில் நாம் சொல்லுவோம், விவாதிப்போம். இவர்களின் பார்வையும், கோணமும் வேறு.
     
    இத்தனை சேனல்களில் நேரலைக்கு செல்லும் விஜயதரனிக்கு தெரியாதா இது சேனல்காரர்களின் கைகளை மீறிய தவறு என்று? அம்மாவின் கருணை பார்வை தனக்கு கிடைக்க, கிடைத்த வாய்ப்பை நன்கு பயன்பட்திக்கொண்டார். இதற்கு மேல் இங்கு விவாதிக்க வேண்டாம். திறந்த புத்தகத்தின் நோக்கம் கெட்டு விடும்.
     
    Manushya Puthiran
     
    6 மணி நேரம் முன்பு
     
    சத்யம் டிவியும் பிற அற்பத்தனங்களும்
     
    14 நவம்பர் 2013 இல் 03:46 PM

    நேற்றிரவு நான் சன் நியூஸ் விவாதத்தில் இருந்தபோது சத்யம் தொலைக் காட்சியிலிருந்து காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜய தாரிணி ஆத்திரமும் பதட்டமுமாக வந்து சேர்ந்தார். சத்யம் டிவி யில்தொலைபேசி அழைப்பில் ஒருவர் அவரையும் தமிழக முதல்வரையும் பற்றி கூறிய வார்த்தைகளைசொல்லமுடியாமல் தவித்தார். பின்னர் விசாரித்தபோது மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.

    அதன் யூ ட்யூப் பதிவினைக் கண்டபோது அதில் சத்யம் டிவி இதை திட்டமிட்டு செய்ததாக விஜயதாரிணி குற்றம் சாட்டினார். ஒரு நேரலை நிகழ்சியில் இது போல பொறுக்கிகள் அருவருப்பாக பேசும்போது அதற்கு தொலைக்காட்சி நிறுவனத்தை குற்றம் சாட்ட முடியாது. ஆனால் சதயம் டிவி தார்மீக நெறியற்ற காரியங்களை செய்யாது என்று சொல்ல முடியுமா?

    இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒரு நபர் சத்யம் தொலைக் காட்சிக்காக என்னை ஒரு பேட்டி எடுக்கவந்தார். பேட்டி ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே அவரது அயோக்கியத்தனம் வெளிப்படஆரம்பித்தது. இணையத்திலும் ஃபேஸ்புக்கிலும் உள்ளை சில பொறுக்கிகள் என்னைப் பற்றிச்சொன்ன அவதுறுகளையும் பொய்களையும் சுமந்துகொண்டு வந்து ‘ பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தீர்களா?’’ என்று கேள்வி கேட்க ஆரம்பித்தார். மைக்கை கழற்றி தூக்கி எறிந்து கடுமையாக திட்டி அந்த நபரைதுரத்தியடித்தேன். பேட்டி ஒளிபரப்பாவதில் எனக்கு சம்மதமில்லை. அதை ஒளிபரப்பக்கூடாது என்று எச்சரித்து அனுப்பினேன். ஆனால் பேட்டி வருவதாக ப்ரமோ வர ஆரம்பித்தது.சத்யம் டிவியின் பங்குதாரர் ஸ்டீபன் பாக்கியராஜ்ஜை அழைத்துப் பேசினேன். அதன்எடிட்டர் விஜயரங்கத்தையும் அழைத்துப் பேசினேன். இருவருமே பேட்டி வராது என்றுஎன்னிடம் பொய் சொல்லிவிட்டு அதை ஒளிபரப்ப அனுமதித்தார்கள். மறு ஒளிபரப்பும்செய்தார்கள். பேட்டியைப் பார்த்து கொதித்துப்போன தோழர்கள் பலர் தமிழகத்தின் பலபகுதிகளிலிருந்தும் அழைத்துப் பேசினார்கள். ஆனால் கேவலம் அற்ப டிஆர்பிக்காக சத்யம் டிவி எதையும் செய்யக் கூடியது என்பதை அன்று வெளிப்படையாக் காட்டிக்கொண்டது.அதனுடைய இந்த அறமற்ற போக்குதான் அந்த சேனலில் எப்படியும் பேசலாம் என்ற தைரியத்தை பொறுக்கிகளுக்கு கொடுக்கிறது.


-- Edited by Yauwana Janam on Sunday 8th of December 2013 04:46:33 PM

__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

சத்தியம் டிவியில் பத்து பேர் பங்குதாரர்களாம். அத்தனை பேரும் கிறிஸ்தவ தொழிலதிபர்கள் என்று சொல்லப்படுகிறது. அவர்களில் முக்கியமானவர் மோகன் சி.லாசரஸ் எனும் மீடியா மேனியான். அவருக்கு ஒரு தரிசனம். ”உள்ளது உள்ளபடி” செய்திகளைத் தர ஒரு ஊடகம் வேண்டும். கிறிஸ்தவம் தொடர்பான சேதிகளை மறைக்கும் மற்ற ஊடகங்களின் வஞ்சகத்துக்கு மாற்றாக இது விளங்கவேண்டும். ஆனாலும் ஒரு சானலை வெற்றிகரமாக நடத்த மிஸ்டர் “ப” அவர்களின் உதவியில்லாமல் முடியாது. அதேநேரத்தில் பாலை குடிக்காமல் தவம் இருக்க பூனையால் முடியாது. உலகத்தையே கண்கொண்டு பார்க்கமாட்டேன் என்று சொல்லும் கிறிஸ்தவனால் இங்கே பிழைக்கவும் முடியாது.

என்ன செய்யலாம் ? சமரசம் செய்துகொள்ளுவதே இருக்கும் ஒரே வழி. அதற்கேற்ற மனநிலையுள்ளவர்களின் ஒத்துழைப்போடு அடிப்படைவாத எண்ணமுடையோரின் சிந்தையையும் மாற்றவேண்டும். கிறிஸ்தவத்தில் உலகப்பிரகாரமான காரியங்கள் கலக்கக்கூடாது என்று முரண்டுபிடிப்போரை கழட்டிவிட்டு கண்டுகொள்ளாமல் போகவேண்டியது. எப்போதும் திரள்கூட்டத்தார் மாயைக்கு தலைவணங்கக்கூடியவர்கள் என்பதால் அவர்களைக் கவரும்வண்ணமாக பேசி நடித்து அனுதாபத்தையும் ஆதரவையும் பெறவேண்டியது. இவையெல்லாவற்றுக்கும் உறுதுணையாக இருக்கவே இருக்கிறார்கள், கறுப்பு பணமுதலைகள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள், சினிமா பிரபலங்கள்.

இயேசுவை மட்டும் ஒதுக்கிவிட்டால் உலகமே நம் சொந்தம் தானே ? இயேசுவை ஒதுக்குவது என்பது ஒரேயடியாக புறக்கணிப்பது அல்ல. நம்மிடம் வருவோரை சங்கடப்படுத்தாமல் உறவை ஏற்படுத்த இயேசுவின் குறிப்பிட்ட உபதேசம் தடையாக இருக்குமானால் அதை அப்போதைக்கு பேசாமல் தவிர்ப்பது. அவர்களுடைய ஆசீர்வாதத்துக்காக ஜெபிப்பது. நட்பை பராமரித்துக்கொள்ளுவது. அந்த ஆண்டவரே பார்த்து என்றைக்காவது அந்த நபரோடு பேசினால் பேசட்டும். இல்லாவிட்டாலும் நமக்கு என்ன நட்டம் ? நாய் வித்த காசு குரைக்குமா என்ன ?

இன்றைக்கு கடன் வாங்குவது தவறல்ல, என்று உபதேசத்தை திரிக்கும் இவர் கொஞ்ச நாளில் லஞ்சம் வாங்குவது தவறல்ல என்றும் சொல்லக்கூடும். ஏனென்றால் லஞ்சம் வாங்கியவர் கொடுக்கும் பணத்தில் தானே ஊழியமே நடக்கிறது ? வருமான வரிவிலக்கு பெறும் நோக்கத்துடன் இதுபோன்ற அறக்கட்டளை ஸ்தாபனங்களில் சென்று கொட்டப்படும் கோடிக்கணக்கான பணங்களை வைத்து மீடியாவில் மிரட்டி திரள்கூட்டத்தின் ஒரே பிரதிநிதி போலவும் மொத்த கிறிஸ்தவத்துக்கும் குத்தகைதாரர்போலவும் செயல்படும் இவர்களிடம் திருச்சபையினர் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

சத்தியம் டிவியின் நிகழ்ச்சிகள் எந்தவிதத்திலும் பக்திவிருத்திக்கேற்றதாக இல்லை.அதில் ஸ்லாட் ஒதுக்கி வழங்கப்படும் கிறிஸ்தவ நிகழ்ச்சிகளாலும் பெரிய பயனேதும் இல்லை. அவை ஏற்கனவே தமிழன் டிவி,விண் டிவி,ராஜ் டிவி,ஜெயா டிவி போன்ற பொழுதுபோக்கு சானல்களில் வழங்கப்பட்டவண்ணமாகவே இருக்கிறது. அவையும் கூட இலவசமாக தரப்படாமல் பணம் கொடுத்தே பெறப்படுகிறது. அதன்காரணமாகவே நிகழ்ச்சியின் இறுதியில் அவர்கள் காணிக்கை கேட்கிறார்கள். மக்கள் மனதில் இடம்பிடிக்க இந்த மீடியா மிருகங்கள் போடும் வேடங்களும் நடிப்பும் அபாரம். ஆனாலும் அதனால் பரமனுக்கோ பரலோகத்துக்கோ ஒரு மேன்மையும் இல்லை. எப்போது குட் ந்யூஸ் டெலிவிஷன் என்ற பெயரில் ஒரு கம்பெனி நேரு தைரியம் என்பவர் பெயரில் துவங்கப்பட்டு இதுபோன்ற நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகத் துவங்கியதோ அதன்பிறகே மொத்த கிறிஸ்தவமும் தரமிழந்து நாடகமயமானது.

இந்நிலையில் இதோ தன் நோக்கத்தையும் தரிசனத்தையும் மறந்து ஒரு கிறிஸ்தவ சானல் சினிமாவையும் நடிகர்களையும் சினிமா கம்பெனிகளையும் குறித்து மக்களுக்கு எடுத்துசொல்லும் கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. இதுபோன்ற சமரசங்களை செய்யாமல் ஒரு சானலை வெற்றிகரமாக நடத்தமுடியாது என்பதாலேயே பெரியவர்கள் சினிமா மற்றும் உலகப் பிரகாரமான கார்ரியங்களுக்கு விலகியிருக்க சொன்னார்கள்.

954723_447353025360490_602266903_n.jpg

 மாடர்ன் தியேட்டர்ஸ்:


மாடர்ன் தியேட்டர்ஸ் லிமிடெட் 1935 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் சேலத்தில் திருச்செங்கோடு ராமலிங்கம் சுந்தரம் துவக்கிய திரைப்படத்தயாரிப்பு நிறுவனம் . தென்னிந்தியாவில் முதன்முதலாக உருவாக்கப்பட்ட திரைப்படக்கூடம். சென்னை போன்ற பெரிய நகரங்களை விட்டு சேலம் போன்ற வெளிநகரம் ஒன்றில் மாடர்ன் தியேட்டர்ஸ் உருவாக்கப்பட்டது. மாடர்ன் தியேட்டர்ஸ் திரைப்படக்கூடம் ஒரு காலத்தில் வருடத்திற்கு மூன்று படங்களையாவது உருவாக்கிக்கொன்டிருந்தது. முதன்முதலில் தென்னிந்தியாவில் வண்ணப்படத்தை தயாரித்த பெருமை மாடர்ன் தியேட்டர்ஸுக்கு உண்டு. இந்த நிறுவனத்தின் தயாரிப்பு அரங்கில் 1982 ஆம் ஆண்டு வரை 150க்கும் மேலான தமிழ்,தெலுங்கு, மலையாளம் ஹிந்தி, சிங்களம் மற்றும் ஆங்கிலத்திலும் திரைப்படங்கள் தயரிக்கப்பட்டுள்ளன. இவற்றில்
பெரும்பாலானவை தமிழ் திரைப்படங்களே.

601295_446241712138288_38363165_n.jpg

கிரிவலம் 

திருவண்ணாமலை : திருவண்ணாமலை தீபம் உலகப்பிரசித்திப்பெற்ற ஒரு நிகழ்ச்சியாகும். இங்கு சிவன் தீபத்தில் எழுந்தருளியுள்ளார். கோவில் நகரமான திருவண்ணாமலை சென்னையிலுருந்து 180 கிலோமீட்டர் தொலைவிலுள்ளது. இந்தக்கோவில் இந்தியவிலேயெ மிகப்பெரியதாகும். சிவன் பார்வதி அருணாசலேஸ்வரர் ஆகிய கடவுள்களை கொண்ட இந்த கோவில் 66மீட்டர் உயரமுள்ளது. இங்குள்ள சிவன் லிங்கத்திலிருந்து உருவானவர். இவருக்கு அண்ணாமலையார் என்ற பெயரும் உண்டு. இந்த தலத்தைப்பற்றி மாமுனிவர்களும் கவிஞர்களும் ஏராளமான பாடல்களைப் பாடியுள்ளனர். துறவி ரமணா இங்கு 50 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்து 1950 ம் ஆண்டு இறந்தார். இவரது ஆசிரமம் திருவண்ணாமலை மேற்கு புரத்தில் அமைந்துள்ளது. மலையைச்சுற்றி நீண்டபாதை அமைந்துள்ளது. இதை சுற்றி பக்தர்கள் வலம் வருவர். இதற்கு கிரிவலம் என்று பெயர். மாதந்தோறும் முழு நிலவு தினத்தன்று கிரிவலம் நடை பெறும். தீபத்தையொட்டி தேரோட்டம் நடைபெறும். ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு ஓம்...ஓம் என்று கோஷமிட்டவாரே தேரை வடம் பிடித்து இழுப்பர்.

 

மேற்காணும் இரு செய்திகளால் கிறிஸ்தவத்துக்கு என்ன நன்மை என்று புரியவில்லை. இதுபோன்ற செய்திகளை ஒளிபரப்பி கிறிஸ்தவர்களல்லாதோரின் மனதில் இடம்பிடித்து பிறகு கொஞ்சம் கொஞ்சமாக ஆண்டவரை சொல்லுவது திட்டமோ என்னவோ ? எல்லா சாமியும் ஒண்ணுதானே என்று நினைக்கும் பொதுநலவாதிகளே இவர்களை சூழ்ந்திருக்கிறார்கள். என் சாமியை திட்டாதே நான் உன் சாமியை திட்டாதே என்பதே இந்தியாவின் பெரும்பான்மையினராக இந்து மக்களின் கோரிக்கையாக இருக்கிறது. ஒருவேளை மதசார்பற்ற சானலாக தன்னைக் காட்டிக்கொள்ளும் கட்டாயத்தினால் இப்படியெல்லாம் செய்திகளை வெளியிடுகிறார்களோ என்னவோ ? அப்படி சட்டத்துக்கு அஞ்சி சத்தியத்தை மறைப்பதும் கூட நேர்மையான செயல் அல்லவே ? சட்டத்தையும் ஏமாற்றி ஆண்டவருக்கும் துரோகம் செய்து அப்படி எதற்காக கோடிக்கணக்கில் முதலீடு செய்து ஒரு ஊழியத்தை நடத்தவேண்டும் ? அப்படியானால் அது ஊழியம் அல்ல,கம்பெனியாகவே இருக்கும்.


(தொடரும்)



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard