Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: நித்திய ஜீவன் மற்றும் நித்திய ஆக்கினை என்றால் என்ன? எல்லாரும் இரட்சிக்கப்படுவார்களா?


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
RE: நித்திய ஜீவன் மற்றும் நித்திய ஆக்கினை என்றால் என்ன? எல்லாரும் இரட்சிக்கப்படுவார்களா?
Permalink  
 


இது நீங்க quote பண்ணிய வசனம்:

கலாத்தியர் 2:15 புறஜாதியாரில் பிறந்த பாவிகளாயிராமல், சுபாவத்தின்படி யூதராயிருக்கிற நாமும் இயேசுகிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினாலேயன்றி, நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே மனுஷன் நீதிமானாக்கப்படுவதில்லையென்று அறிந்து, நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலல்ல,கிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்படும்படிக்குக் கிறிஸ்து இயேசுவின்மேல் விசுவாசிகளானோம்.

இயேசு கிறிஸ்துவின் மேல் விசுவாசம் வைக்க வேண்டும், வைத்தால் தான் நீதிமானாக்கப்படுவோம் என்று தானே வசனம் சொல்கிறது. அதெல்லாம் தேவையில்லை, எல்லோருக்கும் இரட்சிப்பு என்று எப்படி சொல்றீங்க சோல் அவர்களே?



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

உலகம் ஒரு நாடக மேடை.ஆண்டவர் நாடகம் நடத்திக் கொண்டிருக்கிறார். நாம் வெறும் கதாபாத்திரங்கள். கொடுக்கப்பட்ட வசனத்தை ஒப்பிச்சிட்டுப் போவதுதான் நம் வேலை. The End என்று சொல்லி திரை போட்டவுடன், எல்லோரும் உயிர்த்தெழுந்து கொஞ்சம் பேர் பரலோகத்திலும், மீதி பேர் இவ்வுலகில் உண்டாகும் ராஜ்ஜியத்திலும் பங்கடைவார்கள்.

இதாங்க அவங்க நம்பிக்கை! இதுக்கு எதுக்கு பைபிள், ஜெபம், உபவாசம் எல்லாம் தேவையென்று ஒன்றும் புரியவில்லை.

வெளி 20:15 ஜீவபுஸ்தகத்திலே எழுதப்பட்டவனாகக் காணப்படாதவனெவனோ அவன் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டான்.

இதற்கு என்ன விளக்கம் வைத்திருக்கிறார்களோ.

இவங்க ஜீவனுள்ள தேவனின் வார்த்தைகளை கேலியும், கிண்டலும் பண்ற மாதிரி எனக்குத் தெரியுது.

சோல் & பெரேயன்ஸ் சகோதரர்களே, உங்களைப் பார்த்து பிசாசு சிரிப்பது தெரிகிறதா?



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

சோல் அவர்களே, ஏதாவது சொல்லி என் வாயை அடைக்க வேண்டும் என்று தீவிரமாக முயற்சிக்கிறீர்கள் என்று தெரிகிறது.

உங்க இருவரின்(சோல் & பெரேயன்) ஆத்துமாக்களும் அஷ்டகோணலாக முறுக்கிக் கொண்டிருக்கிறது சகொ அன்பு முறுக்கை எடுத்து விட முயற்சித்தாலும் இன்னும் முறுக்கிக் கொள்கிறீர்கள்.ஆண்டவர் உங்களை நேசிக்கிறார் என்பதால் தான், சகோ அன்பு போன்றோரை அனுப்பி உங்களுடன் பேசிக் கொண்டிருக்கிறார்.

 ஆண்டவ்ர் உங்க கோணலை சரியாக்குவார் என்று நான் நம்புகிறேன்.



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

நாகூம் 1:5 அவர் சமுகத்தில் பர்வதங்கள் அதிர்ந்து மலைகள் கரைந்துபோகும்; அவர் பிரசன்னத்தினால் பூமியும் சக்கரமும் அதில் குடியிருக்கிற அனைவரோடும் எடுபட்டுப்போம்.

தேவ பிரசன்னத்தில் மலையே கரையும் என்றால், நீங்க எம்மாத்திரம்!! சீக்கிரத்தில் இரட்சிக்கப்படுவீங்க சோல் அண்ணே! எந்த சந்தேகமும் இல்லை! உங்க நண்பர் பெரேயன்ஸும் தான்!



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

 

Hats Off Bro Anbu!!

அவர்கள் இருதயம் பாறையாய் இறுகிப் போய் இருக்கிறது. இதற்கு மேல் ஒன்றும் செய்ய முடியாது.



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 258
Date:
நித்திய ஜீவன் மற்றும் நித்திய ஆக்கினை என்றால் என்ன? எல்லாரும் இரட்சிக்கப்படுவார்களா?
Permalink  
 


//கழுதைக்கு கற்பூர வாசம் தெரியாதாம் அது போல் இந்த துஷ்ட்ட கோமாளிகளுக்கு தேவனின் இரட்சிப்பு தெரியாது!! ராஜியத்தில் தெரிந்துக்கொள்வார்கள்!!

வேலைவெட்டி இல்லாத பயலுவ!! இல்லாட்டியும் இவர்கள் எழுதிவிட்டாலும்.........!!! டாஸ்மாக்கை எல்லாம் விவாதம் செய்தவர்கள் தானே இந்த கோமாளிகள்!! சரக்கு தீர்ந்து போய்விட்டதால் அடுத்தவர்கள் வீட்டிற்குள் அத்துமீறுகிறார்கள் போல்!!//

 

தேவனின் ரட்சிப்பை ராஜியத்தில் தெரிந்துகொள்வோமாம். சரி அப்புறம் ஏன் ஓய் டென்ஷனாகிறீர். ஓகோ அப்ப உங்க வீட்டில் சரக்கு கேஸ் கேஸா அடுக்கி வச்சிருக்கிறீராக்கும். எழுதனும் என்பதற்காக என்னத்தையாவது எழுதக்கூடாது. போங்க போய் அப்படியே உங்க மிலிட்டரி கேண்டீன் பக்கம் போய் எட்டிப்பாருங்க, ஏற்கனவே ஒருத்தர் சரக்கை உள்ளே இறக்கி தான் ஒரு அப்பாவி சிறுவனை போட்டுத்தள்ளிட்டு கம்பி எண்ணிக்கிட்டிருக்காரு. 



-- Edited by joseph on Wednesday 27th of July 2011 09:51:33 AM

__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 258
Date:
RE: நித்திய ஜீவன் மற்றும் நித்திய ஆக்கினை என்றால் என்ன? எல்லாரும் இரட்சிக்கப்படுவார்களா?
Permalink  
 


//கிறிஸ்துவால் எல்லாரையும் இரட்சிக்க முடியுமாம், ஆனால் எல்லாரும் இரட்சிக்கப்பட மாட்டார்களாம். அப்படியென்றால் முடியவில்லை என்றுதானே அர்த்தம்...//

 

இதை நிச்சயம் சோலு சொலூஷன் தான் எழுதியிருப்பார். முடியவில்லை என நீர் எப்படி சொல்ல முடியும், சரி அப்படி எல்லாருக்கும் ரட்சிப்பு என்றால் எதற்கய்யா இப்படி அடுத்தவர்களை, உங்க பாஷையில் சொல்வதானால் பன்றிகளை குற்றம் சொல்லிக்கொண்டிருக்கிறீர். அதான் எல்லாருக்கும் கேடண்டி கொடுத்தாச்சுல்ல அப்புறம் என்ன. இதுக்கு தேவையில்லாம ஒரு ரூமில் உக்காந்து ஏ.சியை ஓடவிட்டு நேரத்தை வீணாக்கி வேத ஆராய்ச்....சீ செய்ய வேண்டும். போங்கப்பா வேற வேலை இருந்தா பாருங்க‌.

அப்புறம் ஒரு அறிவியற்பூர்வமான விஷயம், மனிதனின் உள்ளுறுப்புகளில் சில, ஒத்துப்போவது பன்றியின் உள்ளுறுப்புகளோடு தானாம். 



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

//

மரணம் என்றால், சரீர மரணம், ஆவிக்குரிய மரணம் (தேவனிடமிருந்து பிரிந்திருக்கும் நிலையாம்), ஆத்தும மரணம் என்று வேதத்தில் இல்லவே இல்லாத விஷயங்களை எவனோ, எப்போதோ ஆரம்பித்துவைத்ததை இன்றுவரை நம்பிக்கொண்டிருக்கும் பெரும்பாலான முட்டாள் கிறிஸ்தவர்களுக்கு அல்ல இந்தத் தளம் என்று 'முத்துக்கள் பன்றிகளுக்கல்ல' என்ற பதிவில் பதித்திருந்தேன்.

அதையுமறியாமல் ஒரு சில பன்றிகள் அவ்வப்போது வந்து அதற்கு இஷ்டமான 'சரக்கு' இங்கு இல்லாததால் பீறிப்போட எத்தனிக்கிறது.

பெரேயன் சொன்னதுபோல பன்றிகளுக்குத் 'தேவையான' சரக்குக்கு பெரும்பாலான கிறிஸ்தவ தளங்கள் உள்ளன. சாது அய்யா, வின்சென் செல்வகுமார், தினகரன்கள், தங்கையாக்கள், ஜெபத்துரைகள், எசேக்கியாக்கள், செல்லதுரைகள், ஆல்வின் தாமஸ்கள், விஜிபிக்கள்..... மேலும் வெளிநாட்டுச் சரக்கான பென்னி ஹின், ஜாய்ஸ் மேயர், ஜோயல் ஆஸ்டின், கோப்லாந்துகள் போன்ற பன்றிகளுக்குத் 'தேவையான' தீனி போட்டு பன்றிகளை திருப்ப்திபடுத்தும் ஆயிரமாயிரமயிரம் தளங்கள் உள்ளன. இந்த லோக்கல் பன்றிகளுக்குத் தேவையான தீனி தமிழ் கிறிஸ்தவ தளங்களிலும் உண்டு. சில்சாம் கக்குவதையே உட்கொள்ளும் இவர்களுக்கு யாருடைய கழிவுகள் வேண்டுமானாலும் செரிக்கும்.

கிறிஸ்துவால் எல்லாரையும் இரட்சிக்க முடியுமாம், ஆனால் எல்லாரும் இரட்சிக்கப்பட மாட்டார்களாம். அப்படியென்றால் முடியவில்லை என்றுதானே அர்த்தம்....

மூடர்கள்.

//

 

எப்படி எதனால் இப்படி இருக்கிறாங்க என்று புரிய மாட்டேன் என்கிறதே. இப்படி இதயம் கடினப்பட்டுப் போக வாய்ப்பு இருக்கா??

சில பாவங்களிலிருந்து விடுபட முடியாமல் - எல்லோருக்கும் இரட்சிப்பு, எல்லோருக்கும் பரலோகம் என்று சொல்லி மனதை தேற்றிக் கொள்கிறார்களோ என்னவோ. கொஞ்சம் வருத்தமாகத்தான் இருக்கிறது.



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 232
Date:
Permalink  
 

மரணம் என்றால், சரீர மரணம், ஆவிக்குரிய மரணம் (தேவனிடமிருந்து பிரிந்திருக்கும் நிலையாம்), ஆத்தும மரணம் என்று வேதத்தில் இல்லவே இல்லாத விஷயங்களை எவனோ, எப்போதோ ஆரம்பித்துவைத்ததை இன்றுவரை நம்பிக்கொண்டிருக்கும் பெரும்பாலான முட்டாள் கிறிஸ்தவர்களுக்கு அல்ல இந்தத் தளம் என்று 'முத்துக்கள் பன்றிகளுக்கல்ல' என்ற பதிவில் பதித்திருந்தேன்.

 

நண்பர் அன்புவும் மரணம் என்றால் சரிர மரணம் மாத்திரம் அல்ல என்று நம்புபவர் தான். அவரும் பன்றியோ??

 

//சில்சாம் கக்குவதையே உட்கொள்ளும் இவர்களுக்கு யாருடைய கழிவுகள் வேண்டுமானாலும் செரிக்கும்.//

ரசலின் கழிவு உங்களுக்கு செரித்தது போல தெரியவில்லையே !!

//கிறிஸ்துவால் எல்லாரையும் இரட்சிக்க முடியுமாம், ஆனால் எல்லாரும் இரட்சிக்கப்பட மாட்டார்களாம். அப்படியென்றால் முடியவில்லை என்றுதானே அர்த்தம்....மூடர்கள்.//

இதுவும் நண்பர் அன்புவை குறிப்பதோ?



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 232
Date:
நித்திய ஜீவன் மற்றும் நித்திய ஆக்கினை என்றால் என்ன? எல்லாரும் இரட்சிக்கப்படுவார்களா?
Permalink  
 


மத்தேயு 7:13. இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசியுங்கள்; கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது; அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர்.
கிறிஸ்துவின் ஈடுபலியின் மேல் நம்பிக்கை இல்லாத மூடர்களே!!

இது நண்பர் அன்புவுக்கும் பொருந்துமா? எல்லோரும் இரட்சிக்கப்பட மாட்டார்கள் என்று விவாதிக்கும் அவரை நீங்கள் மூடன் என்று சாடுகிறீர்களா?

 

தேவன் முன்குறித்த யாருக்காவது இது பிரயோஜனமாக இருக்கும்!!

எனக்கு விளங்கவில்லை, எதற்கு முன் குறித்திருக்கிறார்? 'ராச்சியத்தில்' கற்று கொள்ளவா? அதுதான் எல்லாம் கற்று கொள்ளுவார்களே அப்புறம் எதற்கு முன்குறிப்பு? உங்களை முன் குறித்து இருக்கிறாரா??

 

Mr.Anbu : இத்தள விவாதத்தைத்தான் காமெடி என்கிறீர்களே! அப்படியானால் அத்தளத்தில் இத்தனை நாளும் நீங்கள் காமெடிதான் பண்ணிக்கொண்டிருந்தீர்களோ?

உண்மைதான்! காமடியர்களோடு நடக்கும் விவாதம் ஓரிரு பதிவுகளுக்கு பின்பு காமடியாகிவிடும். அவர்களுக்கு ரசலின் போதை கண்ணை மறைத்தவுடன் தீவிரமாக விளக்கப்பட வேண்டிய வசனத்தை தவிர்ப்பார்கள். மாற்றி , மாற்றி உளறி நமக்கு சலிப்புதட்டும் வரை நேரம் கடத்துவார்கள். ஆபிரகாம் மற்றும் ஏசாயா பார்த்த யேகோவா யார் என்ற கேள்விக்கு 3 மாதங்களாக இழுத்து அடித்து , 4 முறை சொன்ன பதிலை மாற்றி , மாற்றி உளறியவர் பெரேயன் என்பது எல்லாருக்கும் தெரியும்! உங்களுக்கும் இந்த அனுபவம் இருக்குமே!


 

மத்தேயு 7:22. அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள். 23. அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை. அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.

இதையும் நினைத்து ஒரு ஓரமாக உட்கார்ந்து சிரிக்கலாம்

 

நிச்சயமாக உங்கள் 'சுவிசேஷத்தை' நம்பியவர்கள் இந்த வசனத்தை வாசித்து சிரிப்பார்கள். அவர்களுடைய சுலபமான பதில் "நீங்கள் அறிந்தால் என்ன அல்லது அறியாவிட்டால் என்ன" அதுதான் 'ராச்சியத்தில்' கத்து கொள்ளுவோமே! வசனத்தையும் காமடியாக்கிய பெருமை கோவை காமடியர்களையே சாரும்



-- Edited by John on Wednesday 27th of July 2011 08:04:51 AM

__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 232
Date:
Permalink  
 

//கழுதைக்கு கற்பூர வாசம் தெரியாதாம் அது போல் இந்த துஷ்ட்ட கோமாளிகளுக்கு தேவனின் இரட்சிப்பு தெரியாது!! ராஜியத்தில் தெரிந்துக்கொள்வார்கள்!!
வேலைவெட்டி இல்லாத பயலுவ!! இல்லாட்டியும் இவர்கள் எழுதிவிட்டாலும்.........!!! டாஸ்மாக்கை எல்லாம் விவாதம் செய்தவர்கள் தானே இந்த கோமாளிகள்!! சரக்கு தீர்ந்து போய்விட்டதால் அடுத்தவர்கள் வீட்டிற்குள் அத்துமீறுகிறார்கள் போல்!!//

கோவிச்சுகாதீங்க நண்பர் பெரேயன் அவர்களே . உங்களை நான் திட்டவில்லை காமடியன் என்று மட்டுமே சொன்னேன். நான் மட்டும் அல்ல பெரும்பாலான கிருஸ்தவர்கள் உங்கள் கருத்துக்களை காமடியாகவே பார்கிறார்கள் ஆகையால் தொடருங்கள். நீங்க திட்டுவது கூட காமடியாகவே எனக்கு தெரிகிறது. ராச்சியத்தில் இதுக்கெல்லாம் உங்களுக்கு பரிசு கிடைக்குமே (சாரி, சாரி...கற்று கொடுக்கப்போவதே நீங்கதானே)
 
 
 குறிப்பு : டாஸ்மார்க் சரக்கு இங்கே கிடைப்பது இல்லை. கோவையில் எப்படி? அதே போல தமிழில் ஒருவரை திட்டும் போது பன்மையில் எழுதக்கூடாது. என் ஒருவனை திட்டும்போது இப்படி எழுதணும் "இந்த துஷ்ட்ட கோமாளிக்கு தேவனின் இரட்சிப்பு தெரியாது!! ராஜியத்தில் தெரிந்துக்கொள்வான் வேலைவெட்டி இல்லாத பய!! "


-- Edited by John on Tuesday 26th of July 2011 11:11:41 PM



-- Edited by John on Wednesday 27th of July 2011 03:56:14 AM

__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
RE: நித்திய ஜீவன் மற்றும் நித்திய ஆக்கினை என்றால் என்ன? எல்லாரும் இரட்சிக்கப்படுவார்களா?
Permalink  
 


இதுவரை சகோ அன்பு சொன்னதில் எனக்கு எந்த குழப்பமும் வரவில்லை.

எனக்கும் predestination பற்றி எல்லாம் புரிந்திருக்கிறது என்று சொல்ல முடியாது.

ஆனால் அனைவரும் இரட்சிக்கப்பட வேண்டும் என்று தேவன் மிகவும் விரும்புகிறார் என்று நல்லா தெரியும். சகல சிருஷ்டிக்கும் சுவிசேஷம் பிரசங்கிக்கப்பட வேண்டும் என்பதும் தெரியும். 

John wrote:


தேவன் சமயங்களில் இப்படிப்பட்ட காரியங்களை செய்து நமக்கு ஒய்வு கொடுக்கிறார்.


          biggrin



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 232
Date:
Permalink  
 

golda wrote:

சகோ.அன்பு அங்கு கலக்குகிறார்!

ஆனால் அவர் திரித்துவமாய் இருக்கும் தேவனை நம்புவதில்லை என்பதுதான் சோகம்.


 

பரிசேயர் , சதுசேயர் வாதம் போல இவர்கள்  (பிடி)வாதமும் காமடியாக செல்லுகிறது. காமடியர்களுக்கு தலைவிதி (Fate) க்கும் தெரிந்தெடுப்பு (Predestination by Sovereignity ) க்கும் உள்ள வேறுபாடு தெரியவில்லை. ஜெபம் கிருஸ்தவ வாழ்க்கையிலே என்ன பங்கு வகிக்கிறது என்று இவர்களால் புரிந்து கொள்ள முடியாது. நண்பர் அன்புவிற்கு நற்கிரிகை என்பது என்ன? நாம் செய்யும் நற்கிரியையே தேவனுடைய செயல் என்பதும் , தேவனின் கிருபை மற்றும்  நம்முடைய  கிரியை எப்படி இரட்சிப்பில் பங்கு வகிக்கிறது என்று தெரியவில்லை. இந்த காமடியை வாசிக்கும் போது வேதத்தில் உள்ள ஒரு சம்பவம்  ஞாபகத்திற்கு வருகிறது. பவுல் சனகெரிப் சங்கத்தில்  விசாரிக்கப்படுகையில் இது நடந்தது.

 

....பின்பு அவர்களில், சதுசேயர் ஒருபங்கும் பரிசேயர் ஒரு பங்குமாயிருக்கிறார்களென்று பவுல் அறிந்து: சகோதரரே, நான் பரிசேயனும் பரிசேயனுடைய மகனுமாயிருக்கிறேன். மரித்தோருடைய உயிர்தெழுதலைப்பற்றிய நம்பிக்கையைக் குறித்து நான் நியாயம் விசாரிக்கப்படுகிறேன் என்று ஆலோசனைச் சங்கத்திலே சத்தமிட்டுச் சொன்னான். அவன் இப்படிச் சொன்னபோது, பரிசேயருக்கும் சதுசேயருக்கும் வாக்குவாதமுண்டாயிறறு: கூட்டம் இரண்டாகப் பிரிந்தது. (அப்போஸ்தலர் 23:6 -7 ) 

 

தேவன் சமயங்களில் இப்படிப்பட்ட காரியங்களை செய்து நமக்கு ஒய்வு கொடுக்கிறார்.



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 232
Date:
நித்திய ஜீவன் மற்றும் நித்திய ஆக்கினை என்றால் என்ன? எல்லாரும் இரட்சிக்கப்படுவார்களா?
Permalink  
 


நீங்கள் என்னதான் என்னை கோமாளி என்று சொன்னாலும்  நீங்கதான் பெரிய காமடி போங்க! உங்களை காமடியில் யாரும் மிஞ்ச முடியாது! தமிழ் கிறிஸ்தவர்களை சிரிக்க வைக்க  'கோவை காமடியர்கள்'  என்கிற நீங்க இரண்டு பெரும் கட்டாயம் தேவை. இதே உங்கள் காமடிக்கு சில சாம்பிள்ஸ்
 
1 . ஜீவ புஸ்தகத்தில் பெயரில்லாதவன் சாத்தான் ஒருவனே!
 
2 . ஆக்கினை என்றால் சிட்சை (அப்போ I தீமோத்தேயு 3:6 அவன் இறுமாப்படைந்து, பிசாசு அடைந்த ஆக்கினையிலே (G2917 κρίμα krima ) விழாதபடிக்கு, நூதன சீஷனாயிருக்கக்கூடாது. படி பிசாசும் சிட்சிக்க படுகிறானோ? அவனும் இரட்ச்சிக்கப்படுவனோ??)
 
3 . ஒரே மரணம் அதுவும் மாம்ச மரணமே !
 
4 . இயேசு மிகாவேல் தூதன்
 
5 . நியாயதீர்ப்பு என்பது தேவனுடைய இராச்சியத்தில் கற்று கொள்ளுதல் (அதுக்கு ஏன் பயப்படனும்? கற்று கொள்ள பயமா??)
 
6 . எல்லாருக்கும் இரட்சிப்பு உறுதி!
 
இங்கே என்னுடைய  நண்பர்கள் சிலரிடமும் இந்த காமடிகளை பகிர்ந்து கொண்டேன் எல்லோரும் வயிறு குலுங்க சிரித்தோம் biggrin  தொடருங்கள் உங்கள் காமடிப்பணியை!!  

 
//"இயேசு"வால் எல்லாரையும் இரட்சிக்க முடியாது என்று நீர் பதிவு செய்தது எனக்கு தெரியும்!!
//
 
இந்த காமடிக்கு நடுவில் குருநாதர் ரசல் பாணியில் பொய் வேறு!!   Jesus CAN save  every body infact the offer is for everybody but Jesus WILL save somebody (i.e Church or His flock). WILL க்கும் , CAN க்கும் வித்தியாசம் தெரியவில்லை என்றால் நல்ல Dictionary எடுத்து படிக்கவும்.
 
நமது தளத்தில் உள்ள சகோதர்களும் கூட நான் சொன்னவற்றை தவறாக புரிந்து கொள்ளக்கூடாது என்பதற்காக கிழே உள்ள தொடுப்பை தருகிறேன் (காமடியர்களின் குழப்பத்திற்கும் 1 Timothy 2:6 அதிலே சிகிச்சை இருக்கிறது)
 
 


-- Edited by John on Tuesday 26th of July 2011 09:19:49 PM

__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
RE: நித்திய ஜீவன் மற்றும் நித்திய ஆக்கினை என்றால் என்ன? எல்லாரும் இரட்சிக்கப்படுவார்களா?
Permalink  
 


சகோ.அன்பு அங்கு கலக்குகிறார்!

ஆனால் அவர் திரித்துவமாய் இருக்கும் தேவனை நம்புவதில்லை என்பதுதான் சோகம்.



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

//2 தீமோத்தேயு 1:9 அவர் நம்முடைய கிரியைகளின்படி நம்மை இரட்சிக்காமல், தம்முடைய தீர்மானத்தின்படியும், ஆதிகாலமுதல் கிறிஸ்து இயேசுவுக்குள் நமக்கு அருளப்பட்ட கிருபையின்படியும், நம்மை இரட்சித்து, பரிசுத்த அழைப்பினாலே அழைத்தார்.

என்ற வசனத்துக்கு முதலில் விளகக்மளித்தால் நலம்.

 

இதில் நம்மை என்பது யாரை?//

நாம் தான்.

 

//தம்முடைய தீர்மானம் என்ன தீர்மானம்?//

பலி, தான தர்மம், தவம் போன்ற மனிதக் கிரியைகளால் அல்ல, இயேசு கிறிஸ்துவுக்குள் இலவசமாக இரட்சிப்பு உண்டு என்ற தீர்மானம்

 

//அதென்ன பரிசுத்த அழைப்பு?//

இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டு, இரட்சிக்கப்பட அழைக்கிறார். வாசற்படியில் நின்று கதவைத் தட்டுகிறார்.



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 232
Date:
நித்திய ஜீவன் மற்றும் நித்திய ஆக்கினை என்றால் என்ன? எல்லாரும் இரட்சிக்கப்படுவார்களா?
Permalink  
 


சரி, சரி நான் இந்த வெளிப்படுத்தின விசேஷம் புத்தகம் பத்தி பெரேயன் அவர்களிடம் கேட்டு ஒரு முடிவுசெய்கிறேன். புடிச்சிட்டேன்! இதோபெரேயன்சொல்லுறார்.

"
இரண்டாம்மரணம்" என்கிற ஒரு வார்த்தை வெளி. புத்தகத்தில் மாத்திரமே இருக்கிறது!! இதை வைத்துக்கொண்டு, அது முதல் மரணம் போல் மனிதர்களுக்கு நேர்வதுதான் என்பது எப்படி சரியாக இருக்கும்!!"

அப்படிபோடு அருவாள! இந்த வெளிப்படுத்தின விசேஷம் புத்தகத்தை வேதத்தில் இருந்து எடுத்திடலாம். வேறு புஸ்தகத்தில் இதுபோல எல்லாம் சொர்க்கம் போகமாட்டாங்க என்று இருந்தால் அதையும் எடுத்திடலாம். வாழ்கபெரேயன்!! வளர்க அவரது வேதஅறிவு(??)

அப்படியே யாருக்காவது "இயேசு" என்ற பெயர் பிடிக்காவிட்டால் புதியஏற்பாட்டையே மொத்தமா எடுத்திடலாம் பிரச்சனையே இல்லே!



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 232
Date:
Permalink  
 

  • பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகரும், விபசாரக்காரரும், சூனியக்காரரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்றார். (வெளி 21:8)

இது ஏன் இப்படி தப்பு தப்பா இருக்கு? ஒரே ஒருத்தனாகிய சாத்தானை பற்றி எழுதும்போது ஏன் பன்மையில் எழுதணும்? ம்ம்ம்ம்....எங்கேயோ தப்பு நடந்து இருக்கு.

  • மேலும் அவர்களை மோசம்போக்கின பிசாசானவன், மிருகமும் கள்ளத்தீர்க்கதரிசியுமிருக்கிற இடமாகிய அக்கினியும் கந்தகமுமான கடலிலே தள்ளப்பட்டான். அவர்கள் இரவும் பகலும் சதாகாலங்களிலும் வாதிக்கப்படுவார்கள்.(வெளி 20:10)


OK
சாத்தானை தள்ளியாச்சு அப்புறம் என்ன நரகத்தை முடிடலாமா. சரி இந்த அதிகாரம் முழுவதையும் வாசித்துவிட்டு மூடலாம்.

  • ஜீவபுஸ்தகத்திலே எழுதப்பட்டவனாகக் காணப்படாதவனெவனோ அவன் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டான். (வெளி 20:15)

இது என்ன ஒரே குழப்பம்! சாத்தானை 10 ஆவது வசனத்திலே தள்ளியாச்சு! அப்புறம் என்ன திரும்ப ஜீவபுஸ்தகத்திலே பெயர் இல்லாத ஒருவனாகிய சாத்தானை திரும்ப நரகத்திலே தள்ளுறது?

இந்த வெளிபடுத்தின  விசேஷம் புத்தகத்தை குறித்து நண்பர் பெறேயனிடம் விசாரிக்கணும். இந்த புத்தகத்திலே ஏதே கோளாறு  இருக்கு.

  • வெளி 13:8 உலகத்தோற்றமுதல் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியினுடைய ஜீவபுஸ்தகத்தில் பேரெழுதப்பட்டிராத பூமியின்குடிகள் யாவரும் அதை வணங்குவார்கள்.


யோவான் உங்களுக்கு என்னஆச்சு? ஜீவபுஸ்தகத்தில் பெயர் இல்லாதவன் சாத்தான் ஒருவன்தான் அவன் மிருகத்தை வணங்குவானா?  என்னது???

"பேரெழுதப்பட்டிராத பூமியின்குடிகள் யாவரும்" ஆ? அது ஏன் இப்படி நீட்டி முழங்குரிங்க சாத்தான் ஒருத்தேன் தானே! அதுக்கு எதுக்கு பேரெழுதப்பட்டிராத பூமியின்குடிகள் யாவரும்னு சொல்லுறீங்க.



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 232
Date:
Permalink  
 

ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு வெண்வஸ்திரம் தரிப்பிக்கப்படும்; ஜீவபுஸ்தகத்திலிருந்து அவனுடைய நாமத்தை நான் கிறுக்கிப்போடாமல், என் பிதா முன்பாகவும் அவருடைய தூதர் முன்பாகவும் அவன் நாமத்தை அறிக்கையிடுவேன். (வெளி 3:5)

என்னங்க ஜான் நீங்க சொல்லுறதை பார்த்தால் ஜெயங்ககொள்ளதவன்னு யாரோ இருப்பதுபோல வாசிக்கிரவுங்க தப்பா நினைச்சிறப்போறாங்க . "According to the Gospel of Kovai Bereyans" எல்லாருடைய பெயரும் இருக்குன்னு சுலபமா சொல்லவேண்டியதுதான? அத்தவுட்டுட்டு வெட்டியா ஜெயந்கொள்ளுகிறவன், கொள்ளாதவன்அப்படின்னுஎழுதணுமா?

அப்பொழுது மிருகம் பிடிக்கப்பட்டது; மிருகத்தின் முன்பாகச் செய்த அற்புதங்களால் அதின் முத்திரையைத் தரித்தவர்களையும் அதின் சொரூபத்தை வணங்கினவர்களையும் மோசம்போக்கின கள்ளத்தீர்க்கதரிசியுங்கூட பிடிக்கப்பட்டான்; இருவரும் கந்தகம் எரிகிற அக்கினிக்கடலிலே உயிரோடே தள்ளப்பட்டார்கள். (வெளி 20:15)

அய்யோ ! அய்யோ ! அக்கிரமம்!! ஜீவபுஸ்தகத்திலே சாத்தான் பேரு ஒண்டிதான் இல்லைன்னு பெரேயன் சொல்லியிருக்காரு அப்புறம் எப்படி மிருகத்தையும், கள்ளத்தீர்க்கதரிசியையும் நரகத்திலே Sorry அக்கினிகடலிலே Sorry , Sorry அக்கினி ஏறியிலே தள்ளலாம்?



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 232
Date:
Permalink  
 

ஆகிலும், ஆவிகள் உங்களுக்குக் கீழ்ப்படிகிறதற்காக நீங்கள் சந்தோஷப்படாமல், உங்கள் நாமங்கள் பரலோகத்தில் எழுதியிருக்கிறதற்காகச் சந்தோஷப்படுங்கள்என்றார். (லூக்கா 10:20)

இயேசு அப்பா இதுல சந்தோஷப்படுறதற்கு பெருசா என்ன இருக்கு அதான் எல்லாருடைய பெயரும் புத்தகத்தில் இருகிறதே! பெரேயன் புத்தகத்தை முன்னாடியே தொறந்து சாத்தான் பேரு மட்டுமே இல்லைன்னு சொல்லிட்டார்.

அன்றியும், என் உத்தம கூட்டாளியே, அவர்களுக்கு உதவியாயிருக்கும்படி உன்னையும் வேண்டிக்கொள்கிறேன்; அவர்கள் கிலேமெந்தோடும் மற்ற என் உடன்வேலையாட்களோடுங்கூட சுவிசேஷ விஷயத்தில் என்னோடேகூட மிகவும் பிரயாசப்பட்டார்கள், அவர்களுடைய நாமங்கள் ஜீவபுஸ்தகத்தில் இருக்கிறது. (பிலிப்பியர் 4:3 )

ஜீவபுச்த்தகத்தில் பெயர் வருவதற்கு பிரயாசப்படனுமா? என்ன ஒன்னும் தெரியமே இருக்கீங்க பவுல். நீங்க தேவையில்லாம "கல்லெறியுண்டு, வாளால்அறுப்புண்டு, நிர்வாணத்திலும், குளிரிலும்" தேவைஇல்லாமல்இருந்துஇருக்குறீங்க. சாத்தான் பேர் தவிர எல்லார் பெயரும் இருக்குனு ஒருவார்த்தை எழுதியிருந்தா நாங்க எதுக்கு விசுவாசம் , பரிசுத்தம்னு கஷ்ட்டப்படபோகிறோம்?



__________________
«First  <  1 … 6 7 8 9 10  >  Last»  | Page of 10  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard