ஊழியத்துக்காக அர்ப்பணித்து வேதகலாசாலைக்குப் போகாமலே குறுக்கு வழியில் அப்போஸ்தலராகத் துடிக்கும் ஒரு தம்பியிடம் இன்று பேசினேன்; அவர் சபையிலுள்ள தாறுமாறுகளால் பாதிக்கப்பட்டவராக இருந்தபடியினால் சபைக்குட்படாத ஒரு ஊழியத்தை அமைப்பதில் ஆர்வமாக இருந்தார்;நான் சொன்னேன்,நீ குறைகளைக் குறித்து மாத்திரமே பேசிக்கொண்டிருக்கிறாய், ஆனால் நிறைவை விரும்புகிறாய்; பரிசுத்தத்தை வாஞ்சிக்கும் நீ ஓயாமல் அசுத்தமான காரியங்களைக் குறித்து மாத்திரமே கோபத்துடன் பேசிக்கொண்டிருக்கிறாய்; இந்தியாவிலும் ஊழலைக் குறித்து மாத்திரமே பேசிக்கொண்டிருப்பதால் ஊழல் ஒழிந்துவிடுமா,என்ன? அதேபோல நீ நன்மையை விரும்புகிறவனாக இருந்தால் அதைக் குறித்து மாத்திரமே பேசு; பரிசுத்தம் விரும்பினால் அதைக் குறித்து மாத்திரமே பேசு;நீ வெறுக்கும் தீமை அகற்றப்படவேண்டுமானால் நன்மையானவைகளின்மீது நாட்டம் கொள்;ஒரு பிரச்சினையாக கோட்டுத் துண்டை சிறியதாக்க அதன் அருகில் ஒரு பெரிய கோட்டுத் துண்டைப் போடுவதே எளிமையான வழி என்று கூறினேன்;இது என்னுடைய இன்றைய அனுபவம்.
ஒரு அற்புதமான கருத்து. இதை நான் மிகவும் எதிர்பார்த்து இருந்தேன். என்னுடைய நண்பர் ஒருவரும் இப்படியே இருக்கிறார். வசன ஆதாரம் இருந்தால் மிகவும் சிறப்பாக இருக்கும்,
உங்கள் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட மனக்கசப்பு இன்னும் தொடர்வது வேதனையாக இருக்கிறது, இருவருமே சென்சிட்டிவான விஷயங்களை தவிர்க்கலாமே. வார்த்தை பிரயோகங்களும் கூரிய பட்டயங்களாக உள்ளன. சகோதரர் கொல்வின், சில்சாம் மூலமாக தங்களுக்கு பப்ளிசிட்டி கிடைப்பதாக அந்த வயக்காட்டு கோமாளிகள் சொல்லிக்கொண்டு போகட்டுமே, பலர் தங்களது இணையபக்கத்தை விசிட் செய்துள்ளனர் என்பது அவர்களுக்கு என்னமோ சாதகமாக தெரியலாம். அவ்வாறு வருவோர் நாளை இவர்களை போன்ற ரசலின் ஏஜண்டுகளை காலில் கிடக்கும் செருப்புடன் வரவேற்றார்கள் என்றால் நல்லது தான். மாறாக இவர்களது தளத்திற்கு வருவோர் மனம் குழம்பி இவர்களின் ஏ.சி ரூமுக்கு சென்றால் தான் பிரச்சனை. விளம்பரம் என்பது பொதுப்படையான வார்த்தை நண்பரே. விளம்பரம் என்பது இவர்களது வஞ்சகத்தை தோலுரிப்பதாகவும் இருக்கலாம் அல்லவா, வேதத்தின் மீது எனக்கு அதிக வாஞ்சை ஏற்பட்டதே இவர்களை போன்ற வஞ்சகர்களால் தான்.
அருமை நண்பர் ஜோ அவர்களே, நான் தங்களது வேண்டுகோளையும் ஆலோசனையையும் ஏற்று இணக்கமாகவே போகிறேன்; ஆனாலும் (மேசியாவின்) எதிரியிடம் நான் தோற்றுப்போய் விட்டேன், என்பது சகிக்கமுடியாத அவதூறாகும்;நான் இன்னும் களத்திலிருக்கும்போதே இவ்வாறு சொல்லுகிறவர்கள் பார்வையாளர்களே அன்றி போராளிகள் அல்லர்; உங்களுடைய வயக்காட்டு கோமாளிகள், வர்ணனை ஸூப்பர்..! நேற்றுகூட அவர்களுடன் நேருக்கு நேர் மோதிவிட்டே வந்திருக்கிறேன்; முழுவிவரத்தையும் விரைவில் பதிக்கிறேன்;ஆனாலும் இங்கு அல்ல.
மூத்த உறுப்பினர்களே இதுபோல சம்பந்தமில்லாத திரியில் வாதத்தை வளர்க்கலாமா..? என்மீதான குற்றச்சாட்டுகளோ ஆலோசனையோ தனி திரியாகத் துவக்கினால் நல்லது;ஆனாலும் என்னை விவாதப் பொருளாக்குவது நட்புக்கு அழகல்ல.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
அண்மையில் தமிழ் கிறிஸ்தவ தளத்தில் என்னுடைய (நான் வதனநூலில் பதித்திருந்த) ஒரு குறிப்பிட்ட கருத்தைப் பதித்திருந்தார், தளத்தின் நிர்வாகியான அற்புதம் அவர்கள்; நான் அதுகுறித்து எதுவும் எழுதாதிருந்தேன்;ஆனால் அதில் பதிவிட்டிருந்த நண்பர்கள் என்னை மையப்படுத்தி உண்மைக்கு மாறான சில கூற்றுகளை தனிப்பட்ட முறையில் விமர்சிக்கும் பாணியில் குற்றச்சாட்டாக முன்வைத்திருக்கிறார்கள்; அதனை இங்கே தருகிறேன், தேவைப்பட்டால் அல்லது எனக்கு நேரமிருந்தால் ஒவ்வொரு வரிக்கும் உரிய பதிலைத் தருவேன்.
ஊழியத்துக்காக அர்ப்பணித்து வேதகலாசாலைக்குப் போகாமலே குறுக்கு வழியில் அப்போஸ்தலராகத் துடிக்கும் ஒரு தம்பியிடம் இன்று பேசினேன்; அவர் சபையிலுள்ள தாறுமாறுகளால் பாதிக்கப்பட்டவராக இருந்தபடியினால் சபைக்குட்படாத ஒரு ஊழியத்தை அமைப்பதில் ஆர்வமாக இருந்தார்;நான் சொன்னேன்,நீ குறைகளைக் குறித்து மாத்திரமே பேசிக்கொண்டிருக்கிறாய், ஆனால் நிறைவை விரும்புகிறாய்; பரிசுத்தத்தை வாஞ்சிக்கும் நீ ஓயாமல் அசுத்தமான காரியங்களைக் குறித்து மாத்திரமே கோபத்துடன் பேசிக்கொண்டிருக்கிறாய்; இந்தியாவிலும் ஊழலைக் குறித்து மாத்திரமே பேசிக்கொண்டிருப்பதால் ஊழல் ஒழிந்துவிடுமா,என்ன? அதேபோல நீ நன்மையை விரும்புகிறவனாக இருந்தால் அதைக் குறித்து மாத்திரமே பேசு; பரிசுத்தம் விரும்பினால் அதைக் குறித்து மாத்திரமே பேசு;நீ வெறுக்கும் தீமை அகற்றப்படவேண்டுமானால் நன்மையானவைகளின்மீது நாட்டம் கொள்;ஒரு பிரச்சினையாக கோட்டுத் துண்டை சிறியதாக்க அதன் அருகில் ஒரு பெரிய கோட்டுத் துண்டைப் போடுவதே எளிமையான வழி என்று கூறினேன்;இது என்னுடைய இன்றைய அனுபவம்.
arputham Wrote@Tcs on 16-09-2011 23:38:16:
நீ குறைகளைக் குறித்து மாத்திரமே பேசிக்கொண்டிருக்கிறாய்,ஆனால் நிறைவை விரும்புகிறாய்;பரிசுத்தத்தை வாஞ்சிக்கும் நீ ஓயாமல் அசுத்தமான காரியங்களைக் குறித்து மாத்திரமே கோபத்துடன் பேசிக்கொண்டிருக்கிறாய்; இந்தியாவிலும் ஊழலைக் குறித்து மாத்திரமே பேசிக்கொண்டிருப்பதால் ஊழல் ஒழிந்துவிடுமா,என்ன? அதேபோல நீ நன்மையை விரும்புகிறவனாக இருந்தால் அதைக் குறித்துமாத்திரமே பேசு;பரிசுத்தம் விரும்பினால் அதைக் குறித்து மாத்திரமே பேசு;நீ வெறுக்கும் தீமை அகற்றப்படவேண்டுமானால் நன்மையானவைகளின்மீது நாட்டம் கொள்;ஒரு பிரச்சினையாக கோட்டுத் துண்டை சிறியதாக்க அதன் அருகில் ஒரு பெரிய கோட்டுத் துண்டைப் போடுவதே எளிமையான வழி .
எழுதியவர் - சில்சாம்
colvin Wrote@Tcs on 19-09-2011 09:54:10:
கள்ளப் போதகர்களை அடையாளம் காட்டப் போகிறேன் என்று வீராப்பு பேசியவர் இன்று அவர்களிடம் தோற்றுப் போய் மனம் சோர்ந்து விட்டார். இவரால் அவர்கள் பாரிய வளர்ச்சி கண்டுள்ளனர். இதற்காக அவருக்கு விசேட நன்றிகளையும் தங்களின் தளங்கள் வாயிலாக தெரிவித்துக் கொள்கின்றனர். சில்சாம், அருமையாக எழுதியுள்ளார். ஆனால் நடப்பதோ நேர்மாறு. மீண்டும் தான் எழுதியதை நிதானமாக வாசித்து அதனை கடைபிடிப்பாராயின் திருந்தலாம்.
sekarsamuel Wrote@Tcs on 19-09-2011 10:39:09:
சகோ.சில்சாம் எழுதியதாக சகோ.அற்புதராஜ் அவர்கள் பதித்த பதிவும் அருமை. சகோ.சில்சாம் தாம் கூறினவாறே எழுத ஆசைப்படுகிறேன்.
Chillsam:
நண்பர் சேகர் அவர்களே, பிரச்சினை எங்கிருந்து துவங்குகிறது என்று கவனித்தீர்களா, யார் திருந்தவேண்டும் என்று இப்போது சொல்லுங்கள்;ஒரு மனிதனை சிறுமைப்படுத்துவது போல தொடர்ந்து பரியாசம் செய்பவர்கள் திருந்தவேண்டுமா அல்லது எப்பக்கமும் நெருக்கப்படுவோர் திருந்தவேண்டுமா..?
கிறிஸ்துவுக்காக சகித்த ஒரு அனுபவத்தையாகிலும் இலங்கை அரசு ஊழியரிடம் கேளுங்கள்; தன்னுடைய சுயமரியாதை காற்றில் பறக்கிறதே என்று எட்டப்பனைவிட கேவலமான முறையில் (மேசியாவின்) எதிரிகளிடம் சரணடைந்து பகிரங்க மன்னிப்பு கேட்பவரிடம் நான் கற்றுக்கொள்ளவேண்டுமா? மன்னிப்பது வேறு, மன்னிப்பு கேட்பது வேறு.
நான் பள்ளிக்கூடத்தில் படிக்காவிட்டாலும் நூலகத்தினுள் நான் நுழைந்தபோது என்னுடைய வயது 13. எனக்கு சரியான கல்வியறிவு இல்லாத காரணத்தினாலேயே கோல்டா போன்றவர்களுடன் மோதுவதாகவும் அவர்களெல்லாம் ரொம்ப நல்லவர்கள் என்றும் ஒருமுறை சொன்னார்; இப்போது கோல்டாவுடன் எனக்கு எந்த நேரடி மோதலும் இல்லை; அப்படியானால் இதற்கு என்னுடைய கல்வியறிவு காரணமா,எனது பொறுமை காரணமா என்பதை இலங்கை அரசு ஊழியர் சொல்லட்டும்.
வார இறுதியில் கணிணியை அணைத்துவிட்டு சுகமாக ஓய்வெடுத்துவிட்டு பொழுதுபோக்குக்காக ஒருவர் எழுதுவதற்கும் இங்கிருக்கும் மாயப் பிசாசுகளுடன் சுயநலமில்லாமல் 7 நாட்களும் போராடுவதற்கும் வித்தியாசமுண்டு. ஆனாலும் நண்பர் அற்புதராஜ் அவர்கள், மிகவும் சாமர்த்தியசாலிதான்; அவர் என்னுடைய வரிகளை எடுத்துப்போட்டுவிட்டு ரொம்பவும் எளிமையாகவும் குத்தலாகவும் எழுதியவர்:சில்சாம் என்று போட்டுவிட்டார். அதிலேயே ஓராயிரம் அர்த்தம் உண்டல்லவா..?
ஆனாலும் கருத்தின் கர்த்தாவான எனக்கு மாத்திரமே விளக்கும் உரிமை உண்டு என்பதால் சொல்லுகிறேன், அதுவே என்னுடைய இதயத்தின் வாஞ்சை, அதுவே எனது அன்றாட வாழ்க்கை, இது என்னுடைய குணாதிசயத்துக்கு ஒரு எடுத்துக்காட்டு; நான் மாறுபாடுள்ளவனாகத் தோன்றுவேனானால் என்னை நியாயந்தீர்ப்பவர் கர்த்தர் மாத்திரமே; என்னுடைய எல்லைகள் எனக்குத் தெரியும் என்று நம்புகிறேன்.
நான் (மேசியாவின்) எதிரிகளிடம் தோற்றுப்போய்விட்டேன் என்று சொன்னால் இலங்கை அரசு ஊழியரைப் பார்த்து ராஜபக்ஷி கூட சிரிப்பான்..!
colvin Wrote@Tcs on 19-09-2011 09:54:10:
// கிறிஸ்துவுக்காக சகித்த ஒரு அனுபவத்தையாகிலும் இலங்கை அரசு ஊழியரிடம் கேளுங்கள்;தன்னுடைய சுயமரியாதை காற்றில் பறக்கிறதே என்று எட்டப்பனைவிட கேவலமான முறையில் (மேசியாவின்) எதிரிகளிடம் சரணடைந்து பகிரங்க மன்னிப்பு கேட்பவரிடம் நான் கற்றுக்கொள்ளவேண்டுமா? மன்னிப்பது வேறு,மன்னிப்பு கேட்பது வேறு.//
இதைதான் சொல்லுகிறேன் சகோதரரே. வார்த்தை நாகரீகம் தெரியவில்லை உங்களுக்கு. அனுபவம் உண்டா இல்லையா என்பதை தேவன் ஒருவர் அறிவார். எட்டப்பன் என்ற வசனம் எந்த ரகம். அவர்களின் தளங்களில் இட்ட வசனங்கள் எனது அவதானிப்புகளை வைத்து தான் சொல்லுகிறேன். தவறான யுத்திகளை வகுத்து அவர்களுக்கு நிறைய விளம்பரத்தை தேடிக் கொடுத்து விட்டீர்கள். நடந்தது என்ன அவர்களுக்கு உங்களால் நிறைய அனுகூலங்களே தவிர பிரதிகூலம் என்று சொல்லி எதுவுமில்லை. மன்னிப்புக் கேட்பது உங்களுக்கு கேவலமாக தெரிந்தால் நான் ஒன்றும் செய்வதற்கில்லை. நான் மன்னிப்பு கேட்பதற்கு மத, இன பாகுபாடு எவையும் பார்ப்பதில்லை.
// நான் பள்ளிக் கூடத்தில் படிக்காவிட்டாலும் நூலகத்தினுள் நான் நுழைந்தபோது என்னுடைய வயது 13.எனக்கு சரியான கல்வியறிவு இல்லாத காரணத்தினாலேயே கோல்டா போன்றவர்களுடன் மோதுவதாகவும் அவர்களெல்லாம் ரொம்ப நல்லவர்கள் என்றும் ஒருமுறை சொன்னார் //
நான் எங்கே அவ்வாறு சொன்னேன். பதிவை காட்ட முடியுமா? படிக்காதவன் என்று உங்களை நீங்களே தாழ்த்திக் கொள்கிறீர்கள். எனக்குத் தெரிந்து எழுத வாசிக்கத் தெரியாத பாடசாலை கூட செல்லாத ஊழியர்கள் ஞானமாய் போதிப்பதை கேட்டிருக்கிறேன். கல்வியறிவிற்கும் நல்லவனுக்கும் என்ன சம்பந்தம் நண்பரே!. உங்களுக்கு எத்தனை முறை அழைப்பு எடுத்திருப்பபேன். எத்தனை முறை மடல் எழுதியிருப்பேன். ஒன்றுக்காகவாவது பதில் அளித்திருப்பீர்களா? அவ்வளவு அலட்சிய மனோபாவம்.
// இப்போது கோல்டாவுடன் எனக்கு எந்த நேரடி மோதலும் இல்லை;அப்படியானால் இதற்கு என்னுடைய கல்வியறிவு காரணமா,எனது பொறுமை காரணமா என்பதை இலங்கை அரசு ஊழியர் சொல்லட்டும். //
பொது எதிரியை எதிர்க்க வேண்டும் அதற்காக ஒன்றுபடுகிறீர்கள். சாது, ஏஞ்சல் டிவி விவாகரம், ஆணாதிக்கம், பெண்ணுரிமை சம்பந்தமாக கருத்து வேறுபாடு இன்றும் உண்டுதானே!
// வார இறுதியில் கணிணியை அணைத்துவிட்டு சுகமாக ஓய்வெடுத்துவிட்டு பொழுதுபோக்குக்காக ஒருவர் எழுதுவதற்கும் இங்கிருக்கும் மாயப் பிசாசுகளுடன் சுயநலமில்லாமல் 7 நாட்களும் போராடுவதற்கும் வித்தியாசமுண்டு.//
என்ன வித்தியாசம் உண்டு. வார இறுதியில் கணினியை அணைப்பதாக யார் உங்களுக்கு சொன்னது. வீட்டில் இணைய இணைப்பு உண்டு. சுகமாக ஓய்வெடுப்பதாக வாய் நிறைய பொய் பேச வேண்டாம் சகோதரரே!
மாயப் பிசாசுக்களுடன் மோதி என்ன சாதித்தீர்கள் என சொல்ல முடியுமா? அவர்களின் வளர்ச்சிக்கு நீங்கள் தான் பிரதான காரணம் என தங்கள் தளத்தில் அவர்கள் சொல்லி வருகிறார்களே!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)