இதுபோன்று லிங்க் கொடுக்க, அமைப்பு பெட்டிக்குள் சங்கிலி போன்ற குறியை சொடுக்கி அதில் முகவரியை பேஸ்ட் செய்யவேண்டும். அதற்கு அடுத்த வாய்ப்பில் உள்ள பெட்டியில் ஓப்பன் ந்யூ டாப் தரவேண்டும்.இதனால் நாம் கவனித்துக்கொண்டிருக்கும் பக்கத்திலிருந்து சென்றுவிடாதிருக்கமுடியும்.
வதனநூல் பக்கத்தைப் பொறுத்தவரையிலும் நண்பர் ஒருவர் எழுதியிருக்கக்கூடிய மொத்த குறிப்புகளின் பக்கத்தில் சென்று அதிலிருந்து தேவைப்படும் முகவரியை காப்பி பேஸ்ட் செய்தால் நச்’சென்ற முகவரி கிடைக்கும்.பெரும்பாலும் தமிழ் குறிப்புகளின் முகவரி நீளமாக இருப்பதுண்டு.அதனைத தவிர்க்க மேற்சொன்ன முறையைக் கடைபிடிக்கலாம்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
"எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்; நாங்கள் நல்மனச்சாட்சியுள்ளவர்களாய் எல்லாவற்றிலும் யோக்கியமாய் நடக்க விரும்புகிறோமென்று நிச்சயித்திருக்கிறோம்". இன்று நாம் பொய்யும் பித்தலாட்டமும் நிறைந்த உலகத்தில் வாழ்கிறோம்; எனவே, முதலாளியே ஏமாற்ற வேண்டும் என்ற தூண்டுதலைத் தவிர்ப்பது நமக்குக் கடினமாக இருக்கலாம். வேலைக்கு விண்ணப்பிக்கும்போது அநேகர் பொய்யான விபரங்களைக் கொடுக்கிறார்கள். உதாரணத்துக்கு, சிலர் நல்ல வேலைக்கு அல்லது நிறையச் சம்பளத்துக்கு ஆசைப்பட்டு, தங்களுக்கு அதிக அனுபவமோ படிப்போ இருப்பதாக விண்ணப்பப் படிவத்தில் குறிப்பிடலாம். பல பணியாளர்கள், தங்கள் அலுவலக விதிமுறைகளை மீறி வேலை நேரத்தில் சொந்த வேலைகளைச் செய்கிறார்கள். அவர்கள் தங்களுடைய வேலைக்குச் சம்பந்தமில்லாத விஷயங்களை வாசித்துக்கொண்டோ, சொந்த விஷயமாக "போனில்" பேசிக்கொண்டோ யாருக்காவது SMS அனுப்பிக்கொண்டோ, அல்லது இண்டர்நெட்டை அலசிக்கொண்டோ இருக்கிறார்கள். உண்மைக் கிறிஸ்தவர்கள் தங்களுக்குச் ௸காரியமான சமயங்களில் மட்டுமே நேர்மையாகவும் உண்மையாகவும் இருக்க முயற்சி செய்யமாட்டார்கள். (நீதி 6 :16 -19 ) எனவே, கிறிஸ்தவர்கள் தங்கள் முதலாளி தரும் முழு நாள் சம்பளத்துக்கு முழுநாள் உழைப்பைக் கொடுக்கிறார்கள். (எபே 6 :5 -8 ) கடமையுணர்வோடு வேலை செய்வது நம் பரலோகத் தகப்பனுக்குப் புகழையும் சேர்க்கிறது. 1 பே 2 :12
தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.