இயேசுவின் மரணம் - ஒரு தெளிவான விளக்கம் (திருத்தியது) :
இயேசு கிருஸ்துவின் உயிர்தெழுதலை குறித்து பார்க்கும் முன் அவரது மரணத்தை குறித்த செய்தியை இன்னும் தெளிவாக பார்க்க வேண்டியது அவசியமாகிறது.
இயேசு கிருஸ்து தன் ஆவியை தேவனின் கையில் ஒப்பு கொடுத்தார். அவரது ஆவி அவரது உடலை விட்டு பிரிந்தது. ஆகவே அவர் மரணமடைந்தார்.
இயேசு கிருஸ்து சிலுவையில் அடைந்த உடல் ரீதியான துன்பத்தினால் மரணமடைந்தார். அவரது உடலின் இயக்கம் (இருதய துடிப்பு, நாடி துடிப்பு போன்றவை) நின்று போனது. அதனால் அவரது சரீரத்துக்கும், ஆவிக்கும் உடனான தொடர்பு அற்று போனது. ஆவி தனியே பிரிந்தது. அவர் தலை சாய்ந்தது அவர் மரித்தார்.
ஆனால் அவரது மரணத்திற்க்கும் மற்ற மனிதர்களின் மரணத்திற்க்கும் வித்தியாசம் உண்டு. அதை இப்போது பார்ப்போம்.
மரணத்தின் போது பல்வேறு செயல்கள் வரிசையாக நிகழ்கின்றன என்று மருத்துவ ரீதியாக சொல்லப்படுகின்றது. அப்போது இருதய துடிப்பும் ரத்த ஓட்டமும் நின்று போகிறது. அதன் பிறகு சில நிமிட நேரங்களிலேயே உடல் அழுக ஆரம்பித்து விடுகிறது. இதுவே எல்லா இறந்த உடலிலும் நிகழக் கூடியதாகும்.
கல்லறையில் வைக்கப்பட்ட இயேசு கிருஸ்துவின் உடல் அழுகி போகவில்லை என்பதை கீழ்காணும் வசனத்தில் இருந்து அறியலாம்.
அப்போ.நட.2.23. அப்படியிருந்தும், தேவன் நிர்ணயித்திருந்த ஆலோசனையின்படியேயும், அவருடைய முன்னறிவின்படியேயும் ஒப்புக்கொடுக்கப்பட்ட அந்த இயேசுவை நீங்கள் பிடித்து, அக்கிரமக்காரருடைய கைகளினாலே சிலுவையில் ஆணியடித்துக் கொலைசெய்தீர்கள். 24. தேவன் அவருடைய மரண உபாதிகளின் கட்டை அவிழ்த்து, அவரை எழுப்பினார்; அவர் மரணத்தினால் கட்டப்பட்டிருக்கக்கூடாதிருந்தது. (அது எப்படி எனில்,) 25. அவரைக்குறித்துத் தாவீது (இயேசு கிருஸ்து) : (யோகவா தேவனை) கர்த்தரை எப்பொழுதும் எனக்குமுன்பாக நிறுத்தி நோக்கிக்கொண்டிருக்கிறேன்; நான் அசைக்கப்படாதபடி (மரணத்தினால் பாதிக்கப்பட கூடாதபடிக்கு) அவர் என் வலதுபாரிசத்திலே இருக்கிறார்; 26. அதினாலே என் இருதயம் மகிழ்ந்தது, என் நாவு களிகூர்ந்தது, என் மாம்சமும் நம்பிக்கையோடே தங்கியிருக்கும்; 27. என் ஆத்துமாவைப் பாதாளத்தில் விடீர், உம்முடைய பரிசுத்தர் அழிவைக்காணவொட்டீர்; 28. ஜீவமார்க்கங்களை எனக்குத் தெரியப்படுத்தினீர்; உம்முடைய சந்நிதானத்திலே என்னைச் சந்தோஷத்தினால் நிரப்புவீர் என்று சொல்லுகிறான். 29. சகோதரரே, கோத்திரத் தலைவனாகிய தாவீதைக்குறித்து நான் உங்களுடனே தைரியமாய்ப் பேசுகிறதற்கு இடங்கொடுங்கள்; அவன் மரணமடைந்து அடக்கம்பண்ணப்பட்டான்; அவனுடைய கல்லறை இந்நாள்வரைக்கும் நம்மிடத்திலிருக்கிறது. 30. அவர் தீர்க்கதரிசியாயிருந்து: உன் சிங்காசனத்தில் வீற்றிருக்க மாம்சத்தின்படி உன் சந்ததியிலே கிறிஸ்துவை எழும்பப்பண்ணுவேன் என்று தேவன் தனக்குச் சத்தியம்பண்ணினதை அறிந்தபடியினால், 31. அவன் கிறிஸ்துவினுடைய ஆத்துமா பாதாளத்திலே விடப்படுவதில்லையென்றும், அவருடைய மாம்சம் அழிவைக் காண்பதில்லையென்றும் முன்னறிந்து, அவர் உயிர்த்தெழுதலைக்குறித்து இப்படிச் சொன்னான். 32. இந்த இயேசுவை தேவன் எழுப்பினார்; இதற்கு நாங்களெல்லாரும் சாட்சிகளாயிருக்கிறோம்.
மேற்கண்ட வசனங்களில் இருந்து இயேசு கிருஸ்துவினுடைய மாமிசம் நம்பிக்கையோடே இருந்தது எனவும் அழிவை காணவில்லை அதாவது அழுகி போகவில்லை என்றும் அறியலாம்.
மேற்கண்ட ஆதாரத்தோடு நான் சொல்வது தவறு. அது வேத புரட்டு. அவரது உடல் அழுகி, நாற்றமெடுத்து, சிதைந்து போய் இரண்டு அல்லது மூன்று நாட்களாக இருந்தது. அதன் பிறகு சிதைந்த உடல் சரியாகி அவர் உயிரோடு வந்தார் என சொல்பவர்கள் தங்கள் கருத்தை தெரிவிக்க வரவேற்க்கபடுகிறார்கள்.
ஆகவே இயேசு கிருஸ்துவின் மரணம் என்பது ஆவி உடலை விட்டு பிரிந்தாலும், உடல் மட்டும் அழுகாமல் இருந்த ஒரு அதிசய நிலையாகும் என்பதை அறிய முடியும்.
அது எப்படி சாத்தியம்? ஆவி போனால் உடலும் மாறுதல் அடையுமே என சிலர் கேட்கலாம். ஆனால், தேவன் சர்வ வல்லமையுள்ளவர். இது போன்று அதிசயமான காரியங்களை செய்ய அவரால் கூடும். இது உலகத்திற்க்கு இதுவரை புலப்படாத ஒரு அற்புதம் ஆகும்.
(இதை பற்றி கிருஸ்துவ போதகர்கள் யாரும் விவரித்து சொன்னதாக தெரியவில்லை. ஏனெனில் இது கிருஸ்துவின் மரணத்தை கேள்விக்குரியதாய் ஆக்கி விடும் என்பதால் அவர்கள் ஒருவேளை சொல்லாமல் இருந்திருக்கலாம். உடல் அழுகி போவதை மரணம் என்று கொண்டால் அதை வைத்து இயேசு கிருஸ்து இறந்தவர் என சொல்ல முடியாததே இதற்கு காரணமாகும்)
(இதற்கு முன்பு நான் எழுதிய கட்டுரையில், உடல் அழுகி போகாமல் இருக்க வேண்டுமானால் இரத்த ஓட்டம் இருக்க வேண்டும், இரத்த ஓட்டம் இருக்க வேண்டுமானால் இதய துடிப்பு இருக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு இயேசு கிருஸ்துவின் ஆவி பிரிந்த உடலில் இதய துடிப்பு இருக்க வேண்டும் என அனுமானித்திருந்தேன். அது ஒரு தெளிவற்ற கருத்தாய் இருந்த தாலும், இதை படித்த ஒருவர் நான் வேத புரட்டு செய்கிறேன் என சொன்ன தாலும், அதை பற்றி எனக்கு வேறு ஒரு வெளிப்பாடு கிடைத்த தாலும் இந்த திருத்திய கட்டுரை)
எப்படி இயேசு கிருஸ்துவின் உடல் மட்டும் அழுகி போகாமல் இருந்தது என பார்ப்போம். இதற்கு முன்பாக வேறு சிலவற்றை பார்க்க வேண்டி இருக்கிறது.
(தொடரும்)
-- Edited by SANDOSH on Friday 4th of January 2013 04:06:28 PM
அப்போஸ்தலர் 2:31 அவன் கிறிஸ்துவினுடைய ஆத்துமா பாதாளத்திலே விடப்படுவதில்லையென்றும், அவருடைய மாம்சம் அழிவைக் காண்பதில்லையென்றும் முன்னறிந்து, அவர் உயிர்த்தெழுதலைக்குறித்து இப்படிச் சொன்னான்.
வாங்க சந்தோஷ்..எங்கே ரொம்ப நாளாக ஆளையே காணோம்..? அண்மையில் ஒரு முன்னாள் நண்பர் என்னைத் தொடர்புகொண்டு உங்கள் கருத்தை நானும் ஏற்றுக்கொண்டதாக வம்புவளர்த்தார்.இதே கருத்தை நமது தளத்திலும் பதித்திருக்கிறீர்களா என்று நான் அறியேன்.ஆனாலும் அவர் சொன்ன தகவலின் அடிப்படையில் தேடியந்திரத்திலிருந்து உங்கள் கட்டுரையைக் கண்டுபிடித்தேன்.நீங்கள் எழுதியிருப்பது அப்பட்டமான வேதப்புரட்டாகும்.இது உங்கள் சொந்த கருத்தாக இருந்தால் மாற்றிக்கொள்ளலாம். அல்லது இதனை இணையத்திலிருந்து வேறு மொழியில் வாசித்த காரியங்களில் தாக்கம் எனில் அதன் தொடுப்பைத் தரவேண்டுகிறேன்.நன்றி.
பின்குறிப்பு:
உங்களுடைய தளத்தின் தொடுப்பு இங்கே ஏற்கனவே கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதை கவனிக்கவும்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
பின்வரும் கட்டுரையை எச்சரிக்கையுடன் வாசிக்கவும்; ஒருவேளை நீங்கள் வஞ்சிக்கப்படவும் வாய்ப்புண்டு...
இயேசுவின் மரணம் - ஒரு தெளிவான விளக்கம் :
இயேசு கிருஸ்துவின் உயிர்தெழுதலை குறித்து பார்க்கும் முன் அவரது மரணத்தை குறித்த செய்தியை இன்னும் தெளிவாக பார்க்க வேண்டியது அவசியமாகிறது.
வேதத்தின் மூலம் இஸ்லாமியர்கள் சொல்வது என்னவெனில்,
இயேசு கிருஸ்துவின் உடல் தேவனால் (பல்வேறு நிகழ்வுகளின் மூலம்) விசேஷித்த விதமாக பாதுகாக்கப்பட்டது. அதனால் சிலுவையில் அவர் மரணடையவில்லை. என்பதே.
நாம் சொல்வது என்னவெனில்,
இயேசு கிருஸ்து தன் ஆவியை தேவனின் கையில் ஒப்பு கொடுத்தார். அவரது ஆவி அவரது உடலை விட்டு பிரிந்தது. ஆகவே அவர் மரணமடைந்தார்.
இயேசு கிருஸ்து சிலுவையில் அடைந்த உடல் ரீதியான துன்பத்தினால் மரணமடைந்தார். சில நிமிட நேரம் அவரது உடலின் இயக்கம் (இருதய துடிப்பு, நாடி துடிப்பு போன்றவை) நின்று போனது. அதனால் அவரது சரீரத்துக்கும், ஆவிக்கும் உடனான தொடர்பு அற்று போனது. ஆவி தனியே பிரிந்தது. அவர் தலை சாய்ந்தது அவர் மரித்தார்.
ஆனால் அடுத்த சில நிமிடங்களிலேயே,
அவரது உடல் உயிருள்ள உடலை போல இயங்க ஆரம்பித்து, பிறகும் இயங்கி கொண்டிருந்தது என்பதே வேதத்தின்படி நாம் அறிவதாகும்.
ஏனெனில் அவரது உடலை அழிவில் இருந்து பாதுகாப்பதாக தேவன் வாக்கு செய்திருந்தார்.
இவ்வாறு அழிவில் இருந்து பாதுகாக்கபட வேண்டும் எனில் உடலின் இயக்கம் அதிக நேரம் நின்று போக கூடாது. அவ்வாறு நின்று விட்டால் உடல் அழுகிப் போக ஆரம்பித்து விடும். உடல் நாற்றமடிக்க ஒரு நாள் ஆகலாம். ஆனால் அழுகி போவது என்பது சில நிமிடங்களிலேயே ஆரம்பித்து விடும் ஒரு நிகழ்வாகும். ஆகவே தேவன் அவரது உடல் உடனே இயங்கும்படி வைத்திருந்தார்.
இவ்வாறு இயங்கி கொண்டிருக்கும் நிலையை தக்க வைத்து கொள்வதற்காகவே, பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.
1. இரத்த ஓட்டம் சீராகும்படி அவரது இருதயத்தில் குத்தப்பட்டது.
2. இயேசு கிருஸ்துவின் ஆதரவாளரான நூற்றுக்கு அதிபதியின் மூலம் அவர் மரணமடைந்ததாக உறுதிப்படுத்தப்பட்டது. (அதாவது அந்த அதிபதி பொய் சொல்லியிருக்கவும் வாய்ப்பு உண்டு. அல்லது அவர் உடலின் இயக்கம் நின்று விட்டது என அவன் நம்பும்படி தேவன் செய்திருக்கலாம்.)
3.அவரது உடல் வழக்கத்தை விட குறைந்த நேரத்திலேயே சிலுவையில் இருந்து இறக்கப்பட்டது.
4. அவரது காலெலும்புகள் முறிக்கப்படவில்லை.
5. அவரது உடல் பல்வேறு மூலிகைகள் கொண்ட துணியால் சுற்றப்பட்டது.
6. நல்ல காற்றோட்டம் உள்ள இடத்தில் வைக்கப்பட்டது.
7. அவரது உடல் அழியவில்லை (அழியாது) என்பதை அறிந்திருந்த பெண்கள் அவர் உடலுக்கு சுகந்த வர்க்கமிடும்படி அதற்கானவைகளை எடுத்து வந்திருந்தனர். (ஏதாவது அற்புதம் நடந்து குகைக்கு உள்ளே தாங்கள் செல்ல முடியும் என அவர்கள் எதிர்பார்த்திருக்க வாய்ப்பு உண்டு)
மேகண்ட ஏழு காரியங்களிலும் யாருக்காவது, ஏதாவது சந்தேகம் இருந்தால் இஸ்லாமியர்களை கேட்டு பாருங்கள். அவர்கள் இதை பற்றி வேத வசன ஆதாரத்தோடு தெளிவாக விளக்குவார்கள். அதனால் நாம் நமது நேரத்தை இதற்காக விரயம் செய்ய வேண்டிய அவசியமில்லை.
(ஆனால் அனேக கிருஸ்துவர்கள் இந்த வேத வசன ஆதாரங்களை நம்ப மாட்டார்கள். இயேசுவின் மரணம் சாதாரண மனிதனின் மரணம் போன்றது எனபதை நிரூபிப்பதே அவர்களின் தேவையாய் இருக்கிறது.)
ஆகவே இயேசு கிருஸ்துவின் மரணம் என்பது ஆவி உடலை விட்டு பிரிந்தாலும், உடல் மட்டும் இயங்கி கொண்டிருந்த ஒரு அதிசய நிலையாகும் என்பதை அறிய முடியும்.
அது எப்படி சாத்தியம்? ஆவி போனால் உடலும் மாறுதல் அடையுமே என சிலர் கேட்கலாம்.
ஆனால்,
தேவன் சர்வ வல்லமையுள்ளவர். இது போன்று அதிசயமான காரியங்களை செய்ய அவரால் கூடும். இது உலகத்திற்க்கு இதுவரை புலப்படாத ஒரு அற்புதம் ஆகும்.
இயேசு கிருஸ்துவை சிலுவையில் அறைந்ததனால் கடைசியாக நடந்தது என்னவெனில்,
1. அவரது மாமிசம் கூட அழிந்து போகவில்லை அதை தேவன் பாதுகாத்தார்.
2. அவரது ஆவியும் பிற மனிதர்களின் உள்ளே வாசம் செய்யும் வரம் பெற்று, அவரது உடலில் திரும்ப பிரவேசித்தது.
3. சிலுவை அவரது தெய்வத்தன்மையை ஒன்றும் செய்ய முடியவில்லை. இன்னும் சொல்லப் போனால் அவரது உடலை கூட ஒன்றும் செய்ய முடியாமல் போனது.
4. சிலுவையில் கொல்லப்பட்டதோ, உலக மனிதர்களுக்குள் இருந்த சாத்தானுக்கு கீழ்ப்பட்டிருந்த பாவ சுபாவமான மனுஷனே. இவ்வாறு சிலுவையில் ஆள் மாறாட்டம் செய்யப்பட்டது. இதுவும் தேவன் செய்த மிகப் பெரிய அற்புதமாகும்.
5. மரண பரியந்தமும் அவர் தேவனுக்கு கீழ்ப்படிந்ததனால் அவரது தேவ அன்பு, பக்தி உலகிற்க்கு உணர்த்தப்பட்டது. அவர் பிதாவாகிய தேவனின் சகல ஆசிர்வாதங்களுக்கும் சொந்தமானார். அவர் கிருஸ்துவாக ஆனார். அவரை தேவன் தனதளவில் (தனக்கு இணையாக) உயர்த்தி கொண்டார்.
6. தன் சகோதரர்களுக்காக தன் உயிரையும் இழக்க துணிந்ததின் மூலம், இழந்ததன் மூலம் அவர் பிற மனிதர்கள் மேல் கொண்டிருந்த அன்பு உலகிற்க்கு உணர்த்தப்பட்டது. அவரது அன்பின் ஆழம் பிற மனிதர்களுக்குள் மாற்றத்தை உண்டாக்கியது.
7. அதுவரை ஆடுகளாய் இருந்த அவரது சீடர்கள், அவரது ஆவியை பெற்ற பிறகு சிங்கங்களாக மாறினார்கள். சுவிசேஷம் காட்டுத் தீயை போல பரவியது. அற்புதங்கள் நடைபெற்றன. மனிதர்கள் தேவ வசனத்தை ஏற்றுக் கொள்ள ஆரம்பித்தனர்.
8. அவரது வசனத்தையும், ஆவியையும் ஏற்றுக் கொண்ட அனேக மனிதர்களின் பாவ மனுஷன் அழிக்கப்பட்டான். அவர்கள் புதிய சிருஷ்டியாக ஆனார்கள்.
9. அதுவரை மனிதர்களை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த சாத்தான், தனது ஆதிக்கத்தை கிருஸ்துவிடம் இழந்தான். அவன் தோற்று போனான். அவனது கிரியைகள் அழிக்கப்பட்டன.
10. பிதாவாகிய தேவன் பிற மனிதர்களுக்கு நன்மை செய்யும், அவர்களை உயர்த்தும் தன் நோக்கத்தை சிலுவையின் மூலமாக இயேசு கிருஸ்துவில் நிறைவேற்றினார்.
சுருக்கமாக இயேசு கிருஸ்து சிலுவையில் வெற்றி சிறந்தார். தோற்றது சாத்தானும், அவனது கிரியைகளுமே.
இதை நாலுவரியில் (இன்னொரு மார்க்கத்தை பற்றி சொல்லும் புத்தகத்தில் அவ்வளவுதான் இடம் ஒதுக்க முடியும்) தெளிவாக சொல்லும் குரானின் வசனங்கள்.
அவர்கள் (ஏக இறைவனை) மறுத்ததாலும், மர்யமின் மீது மிகப் பெரும் அவதூறை அவர்கள் கூறியதாலும், "அல்லாஹ்வின் தூதரான மர்யமின் மகன் மஸீஹ் எனும் ஈஸாவை நாங்களே கொன்றோம்' என்று அவர்கள் கூறியதாலும் (இறைவன் முத்திரையிட்டான்.) அவரை அவர்கள் கொல்லவில்லை. அவரைச் சிலுவையிலும் அவர்கள் அறையவில்லை.
மாறாக அவர்களுக்கு ஆள் மாறாட்டம் செய்யப்பட்டது. இதில் முரண்பட்டோர் சந்தேகத்திலேயே உள்ளனர். ஊகத்தைப் பின்பற்றுவதைத் தவிர அவர்களுக்கு இது குறித்து அறிவு இல்லை. அவர்கள் அவரை உறுதியாகக் கொல்லவே இல்லை. மாறாக அவரை அல்லாஹ் தன்னளவில் உயர்த்திக் கொண்டான். அல்லாஹ் மிகைத்தவனாகவும், ஞானமுடையோனாகவும் இருக்கிறான்.
(அல்குர்ஆன் 4:156-158)
அவர் (ஈஸா) அந்த நேரத்தின் அடையாளமாவார்.
(அல்குர்ஆன் 43:61)
பிற மதத்தினரோடு விவாதம் என்று வரும் போது, பிற மத மக்களே வேதத்தில் உள்ள நிகழ்வுகளை வேத வசன ஆதாரத்தின்படி சரியாக எடுத்து காட்டும் போது, அது அப்படியல்ல, இது அப்படியல்ல என வேதத்திற்க்கு முரண்பாடாக கிருஸ்துவர்களே பேசும் போதுதான் மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது.
இயேசுவின் உடல் அழியவில்லை, அதை தேவன் பாதுகாத்தார் என வேத வசன ஆதாரங்களோடு சொல்லும் இஸ்லாமியர்களுக்கு,
உங்கள் கருத்து சரியே. ஆனால் இவ்வளவு வேத வசனங்களை சரியாக ஏற்றுக் கொண்ட நீங்கள் அவர் தனது ஆவியை பிதாவின் கையில் ஒப்புக் கொடுத்தார் என்பதை மாத்திரம் அப்படியே ஏன் ஏற்றுக் கொள்ள மறுக்கிறீர்கள்? அதையும் ஏற்றுக் கொண்டாலே அவரது மரணம் பற்றின புதிர் விளங்கும்.
சில ஆட்களைக் கண்டுகொள்ளாமல் விட்டால் தானாகவே காணாமற் போவார்கள் என்று விட்டுவிடுகிறோம்..அவர்களோ தங்களைப் பெரிய அறிவாளிகளாகவும் தங்களைக் கேட்க யாருமில்லை என்றும் நினைத்துக்கொள்ளுகிறார்கள்.இப்படிப்பட்டவர்களைக் குறித்து உடனுக்குடன் எச்சரிப்பதே நம்முடைய முக்கியமான பணியாகும். அப்படி நாம் கழட்டிவிட்ட இன்னொரு நபர், பின்வரும் தரும் தொடுப்பில் இருக்கிறார். இவர் தனக்கு மரணமே இல்லையென்றும் சர்வ வல்ல தேவன் வேறு வல்லமையுள்ள தேவன் வேறு எனும் கொள்கையுடையவர். மேலும் இயேசுவானவர் சிருஷ்டிக்கப்பட்டவரே எனவும் நம்புகிறார். இதுபோன்ற தளங்களில் நேரம் செலவழிப்பதாலோ அங்கு விவாதிப்பதாலோ ஒரு பயனும் இல்லை.மாறாக தேவகோபத்துக்கும் ஆளாக நேரிடும்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)